எப்படி ஜெயித்தார்கள் – புத்தக மதிப்பீடு

‘இறக்கை முளைத்தது பறக்கத் தெரிந்தது பறப்பது சுதந்திரமில்லை நிர்பந்தம் என்பது புரிந்தது’   ‘ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்’  நிறுவனர் திரு. கிருஷ்ணன் தன் டேபிளில் வைத்திருந்த இந்த கவிதை வரிகளே இந்த புத்தகம் முழுவதும் படிக்கத் தூண்டியது. ‘இந்த அழகான உலகில் அனைவரும் அடைய விரும்பும் ஒரு விஷயம் வெற்றி. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெற்றிக்கான இலக்கும் அளவுகோளும்…

விரும்பாததை ஏற்றுக்கொள்வது மிகப் பெரிய துறவறம் (மல்லிகை மகள் ஏப்ரல் 2019)

இந்த நாள் இனிய நாள் – 54 சாப்பாடு விஷயத்தில் சிறுவயதிலேயே எங்கள் பெற்றோர் எங்களுக்கு ஒரு விஷயத்தைச்  சொல்லிக் கொடுத்தார்கள். எந்த காய்கறியை சமைத்திருந்தாலும் முதலில் தட்டில் வைப்பதை வேண்டாம் என்று ஒதுக்காமல் சாப்பிட்டுவிட வேண்டும். பிடித்திருந்தால் இன்னும் கேட்டுச் சாப்பிடலாம். அது கசக்கும் பாகற்காயாக இருந்தாலும் சரி, சுவையைக் கூட்டும்  உருளைக்கிழங்கு ரோஸ்ட்டாக…

சேவை மனப்பான்மையும் தொழில் வாய்ப்பும்!

மாணவர்களின் ஆர்வம் என்ன, திறமை என்ன என்பதைக் கண்டறிந்து இரண்டும் ஒருங்கிணையும் ஒரு புள்ளியை அவர்களின் எதிர்காலமாகக் கொண்டு அதற்கான வாய்ப்பைத் தேடுவதில்தான் அவர்களின் வெற்றி உள்ளது. அந்த வகையில் பிறருக்கு உதவும் மனப்பான்மைகூட ஒரு திறமைதான். அதனடிப்படையில் அவர்கள் பணியை தேர்ந்தெடுக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த…

ஃபேஸ்புக் பதிவுகளும் மாற்றங்களுக்கு வித்திடும்!

என்னவென்று தெரியவில்லை. நேற்று எனது ஃபேஸ்புக் பதிவுகள் சம்மந்தமாகவே மூன்று பாராட்டுக்கள். ஒன்று நான் தினந்தோறும் எழுதிவரும் ‘இந்த நாள் இனிய நாள்’ அருமையாக இருக்கிறது என்று குடும்ப நண்பரின் பாராட்டு. தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின்  ‘இன்று ஒரு தகவல்’ போல அருமையாக உள்ளது என்ற ஒப்பீட்டுடன். இரண்டாவது ‘இந்த நாள் இனிய நாள்’…

ஆண்கள் வெட்கப்பட வேண்டும்!

ஆண்கள் வெட்கப்பட வேண்டும்! இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரையை… ஓர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டு ‘மனதை Format செய்யுங்கள்’ என்ற சுயமுன்னேற்ற புத்தகத்தில் எழுதியிருந்தேன். சென்னையில் பிசியாக இருக்கும் ஓரிடத்தில், முன்இரவு நேரத்தில், புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த கட்டிடத்துக்கு அருகே, மது அருந்திய இளைஞர்கள் 4 பேர் அமர்ந்து போதையில் பிதற்றிக்…

மகளிர் தினம் 2019

‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ – என்னைப் பார்க்கும் பலரும் சொல்வார்கள் ஆனால் இதற்காக நான் என்றுமே பிரயத்தனப்பட்டதில்லை. காரணம் என் குடும்ப அமைப்பு அப்படி. என் அம்மா… 40 வருடகாலம் தொலைபேசி துறையில் 24 மணிநேர சுழற்சிப் பணியில் இரவு பகல் பார்க்காமல் பணிக்குச் சென்று ஓய்வு பெற்றவர். தைரியம், உழைப்பு, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம்…

இதுதாங்க ஃபெமினிசம்!

என் அலுவலகத்தில் இன்று ஒரு கிளையிண்ட் மீட்டிங். கிளையிண்ட் சிங்கப்பூரில் இருந்து ஒரு பிராஜெக்ட்டுக்காக வந்திருக்கிறார். அப்படியே என்னையும் சந்தித்துப் பேசினார். நானும் என் நிறுவனம் பற்றியும் தயாரிப்புகள் குறித்தும் சொன்னேன். ஆனால் துளியும் அவை அவர் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளப்படவில்லை என்பது அடுத்து அவர் சொன்ன ஒரு கருத்தில் நிரூபணமானது. ‘உங்கள் நிறுவனம் என்  நிறுவனத்துடன்…

பெண்!

எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு டிடிபி சென்டர். தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங் இவற்றுடன் ஜெராக்ஸ், ஆதார் அட்டை சம்மந்தமான வேலைகள் என பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். அவர்கள் கடையில் 18 முதல் 20 வயதில் ஐந்தாறு இளம் பெண்கள் பணி புரிகிறார்கள். அந்தக் கடை ஓனர் தனது கிராமத்தில் இருந்து அவர்களை அழைத்து…

பள்ளி பாடத்திட்டத்தில் நான் எழுதிய வாழ்வியல் புத்தகங்கள்!

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக என் சாஃப்ட்வேர் நிறுவனம் மூலம் நான் பெற்றுவரும் தொழில்நுட்ப அனுபவங்களை புத்தகங்களாக அந்தந்த காலகட்டங்களிலேயே பதிவு செய்து வருகிறேன். அது எண்ணிக்கையில் 100-ஐத் தாண்டியதும் அனைவரும் அறிந்ததே. என்னுடைய இந்த நீண்ட தொழில்நுட்பப் பயணத்தில் என் படைப்புகளுக்கு (புத்தகங்கள், ஆடியோ வீடியோ படைப்புகள், அனிமேஷன் தயாரிப்புகள், ஆவணப்படங்கள்) சென்னை பல்கலைக்கழகம்,…

இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன்!   

இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன்   விரைவில் நலமுடன் நாடு திரும்புவற்கு பிராத்திப்போம்!   Pray for the safety of  Indian Air Force Wing Commander Abhinandan அன்புடன் காம்கேர் கே. புவனேஸ்வரி பிப்ரவரி 28, 2019

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon