
பேரன்பின் தொடர்ச்சி…
முகநூலில் பேரன்பு திரைப்படம் குறித்து நான் எழுதிய விமர்சனத்துக்குப் பிறகு நிறையபேர் என்னிடம் ‘நீங்கள் அந்தப் படத்தைப் பற்றி உணர்வுப் பூர்வமாக எழுதவில்லை…’ என்றார்கள். நித்தம் இந்தத் திரைப்படத்தில் வருவதைப்போல மூளை முடக்குவாதம் உட்பட பல்வேறு காரணங்களினால் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பலரை நேரிலேயே பார்த்தும், பழகியும் வருவதாலும் நிதர்சனத்தை நித்தம் நேரில் சந்திப்பதாலும்…

மேடை நிகழ்ச்சிகளின் அணுகுமுறை!
முகநூலில் நேற்று நான் எழுதிய ‘அனைவருமே சிறப்பு விருந்தினர்கள்தான்’ என்ற பதிவுக்கு கருத்துத் தெரிவித்த அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் கருத்துக்கள் ‘சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள்’ குறித்து இன்னும் ஆழமாக யோசிக்க வைத்தது. இந்த பதிவில் முதலாவதாகப் பேசப்பட்ட நிகழ்வில் உட்கார சீட் காலியாக இருந்தும் ‘அது விருந்தினர்களுக்கானது’ என்று சொல்லி நிற்கச்…

அனைவருமே சிறப்பு விருந்தினர்கள்தான்!
‘சென்னை சுயாதீன திரைப்பட விழா ஒரு பார்வை’ என்ற தலைப்பில் தினமலர் புகைப்பட ஜர்னலிஸ்ட் திரு. எல். முருகராஜ் பதிவைப் படித்தேன்… அதில் கடைசி பகுதி மட்டும் இங்கு உங்கள் பார்வைக்கு…. //‛சார் மீடியாவில் இருந்து வரார் உள்ளே கூட்டிட்டு போய் ஓரமா நிற்க வை’ என்றார் ஒருவர், உள்ளே காலி நாற்காலி இருக்கிறதே என்றபோது…

‘பொதுப்புத்தி’யைத் தகர்த்த உரையாடல்! – கோபி சரபோஜியின் பிளாகில் இருந்து…
இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னிடம் ‘Your Google+ account is going away on April 2, 2019’ குறித்து ஒரு சந்தேகம் கேட்டிருந்தார் திரு. கோபி சரபோஜி. அவருக்கு என் இயல்புபடி புரியும்படி விரிவாக எளிமையாக பதில் சொல்லி இருந்தேன். அந்த நிகழ்வு குறித்து என்னைப் பெருமைப்படுத்தும் வகையில் மிக சிறப்பாக தன் பிளாகில் சிறப்பித்து…

நூலைப் போல சேலை!
நூலைப் போலத் தானே சேலை! ‘கல்வெட்டுகளை ஆய்ந்த கல்வியாளர்’ என்ற தலைப்பில் தமிழறிஞர் ‘செந்தமிழ் கலாநிதி’ கா.ம. வேங்கடராமையா அவர்களைப் பற்றி அவரது புதல்வர் புலவர் ‘வே மகாதேவன்’ அவர்களுடன் முனைவர் ‘வ.வே.சு.’ உரையாடும் இணையரங்கம் ‘தமிழ் வளர்த்த சான்றோர்’ நிகழ்ச்சியின் 56 ஆவது அமர்வாக நேற்று (பிப்ரவரி 7, 2019) நடைபெற்றது. புலவர் மகாதேவன்,…

புத்தகங்கள், எழுத்தாளர்கள், பதிப்பகங்கள்!
அது ஒரு பெண்களால் நடத்தப்படும் ஒரு வெப்சைட். அதன் தொடக்க விழாவுக்கு அவர்கள் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். என்னுடன் சேர்த்து மூன்று சிறப்பு விருந்தினர்கள். மூன்று பேருமே பெண்கள். நான் மட்டுமே தொழில்நுட்பம் சார்ந்தத் துறை, மற்ற இரண்டு பேரும் எழுத்தாளர்கள். கொஞ்சம் பிரபலம்தான். 60 வயதைத் தாண்டியவர்கள். பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டோம். நான் காம்கேர்…

பல்கலைக்கழகங்களில் காம்கேர் தயாரிப்புகள்
சென்னை பல்கலைக்கழகம்… அண்ணா பல்கலைக்கழகம்… பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்… மைசூர் பல்கலைக்கழகம்… கடந்த 25 வருடங்களில் இந்தப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பல கல்லூரிகளில் பாடதிட்டமாகவும், சமூக செயல்பாடுகளுக்கு உதவும் நிகழ்ச்சிகளுக்கான பாடதிட்டமாகவும்… நான் எழுதிய தொழில்நுட்பப் புத்தகங்களும்… எங்கள் நிறுவனம் தயாரித்துள்ள சாஃப்ட்வேர் தயாரிப்புகள், ஆவணப்படங்கள்-அனிமேஷன்-இ.கன்டன்ட்-ஆடியோ வீடியோ படைப்புகள் இடம்பெற்று வருவதைத் தொடர்ந்து… இந்த வருடத்தில் (2019) மேலும்…

‘பேரன்பு’ – திரை விமர்சனம்
‘பேரன்பு’ – ‘வாழ்க்கையில் நாம் எத்தனைக் கொடுத்து வைத்தவர்கள்’ என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வைக்கிற திரைப்படம். வாழ்க்கையும் இயற்கையும்… வெறுப்பானது அதிசயத்தக்கது கொடூரமானது அற்புதமானது புதிரானது ஆபத்தானது சுதந்திரமானது இரக்கமற்றது தாகமானது விதிகளற்றது முடிவற்றது பேரன்பானது என 12 அத்தியாயங்கள். மூளைமுடக்குவாத நோயில் மகள், பிரிந்து சென்ற மனைவி, இயற்கை சூழலில் தனிமையான வீட்டில்…

சப்ளை… டிமாண்ட் (ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பிப்ரவரி 2019)
திறமையைப் பட்டைத் தீட்டுங்கள் என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்தில் வெளியான கட்டுரை இது. முதலில் எங்கள் காம்கேர் பப்ளிகேஷன் மூலம் வெளியிட்டோம். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இந்தப் புத்தகம் NCBH – நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகம் மூலம் வெளிவர ஆரம்பித்தது. சுயதொழிலில் வெற்றிபெற ஓர் உத்தியை கதை மூலம் விளக்கி…

புத்தகங்களின் ‘ரீச்சும்’, எழுத்தின் ‘வீச்சும்’!
இன்று காலையிலேயே ஒரு வித்தியாசமான அனுபவம். அரசாங்கத்தில் உயரிய பதவியில் இருக்கும் ஒருவர் போன் செய்திருந்தார். ‘உங்கள் புத்தகங்களை படித்திருக்கிறேன். எங்கள் அலுவலக ஸ்டாஃப்களுக்கு வகுப்பெடுக்க பயன்படுத்தி வருகிறோம்….’ நான் உற்சாகமாகி ‘அப்படியா… என்ன புத்தகம்…’ என்றேன். ‘நீங்கள் எழுத ஆரம்பித்த 1995-களில் இருந்தே உங்கள் புத்தகங்களைத்தான் எங்கள் ஸ்டாஃப்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளுக்குப் பயன்படுத்துகிறோம்…’ என்று…