
நம் அடையாளங்கள் – லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (2018)
நம் அடையாளம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. நான் அங்க அடையாளங்களைச் சொல்லவில்லை. நம் பெயர், படிப்பு, திறமை, வேலை மற்றும் நாம் வசிக்கும் ஊர், நாடு போன்றவைதான் நம் அடையாளம். உதாரணத்துக்கு ‘என் பெயர் காம்கேர் புவனேஸ்வரி, நான் எம்.எஸ்.ஸி, எம்.பி.ஏ படித்துள்ளேன், காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐ.டி நிறுவனத்தை நடத்தி வருகிறேன்,…

நீங்கள் பெற்ற கல்வி நிலைக்க…(ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நவம்பர் 2018)
திறமையைப் பட்டைத் தீட்டுங்கள் என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்தில் வெளியான கட்டுரை இது. முதலில் எங்கள் காம்கேர் பப்ளிகேஷன் மூலம் வெளியிட்டோம். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இந்தப் புத்தகம் NCBH – நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகம் மூலம் வெளிவர ஆரம்பித்தது. படித்து பட்டம் பெற்றவர்கள் அவ்வப்பொழுது தங்கள் அறிவை…

உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண் (அக் 27, 2018)
இன்றைக்கு நம் உள்ளங்கையில் பொதிந்து வைத்திருக்கும் மொபைல் போனில் கம்ப்யூட்டரையும், இண்டர்நெட்டையும் அடக்கி இந்த உலகையே நம் கைவிரல் அசைவில் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் நாம் எவ்வளவு தூரம் முன்னேறி வந்துள்ளோம் என்று தெரியும். சார்லஸ் பாபேஸ் (1791-1871) என்பவர் தான் முதன் முதலில் கணிதத்தையும் எந்திரத்தையும் இணைத்து…

பெண்களுக்குக் குரல் கொடுத்த பிரிட்டீஷ் நாவலாசிரியர் (அக் 27, 2018)
Me Too – மூலம் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். ஒரு பெண்கள் பத்திரிகையில் ‘Me Too’ குறித்து சாதக பாதகங்களை என்னிடம் கருத்து கேட்டார்கள். அதுகுறித்து ஒரு ஆர்டிலாகவே எழுதிக்கொடுத்துள்ளேன். அதில் இருந்து ஒருசில கருத்துக்கள்… //பிரிட்டீஷ் நாவலாசிரியரும், கவிஞருமான வில்லியம் கோல்டிங் (1911-1993) எழுத்துக்களை வாசிக்க நேர்ந்தது….

My 26 in Compcare 26 (அக் 26, 2018)
காம்கேர் 26 நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில்… காம்கேரில் நேற்று நடந்த மீட்டிங்கில்.. என் 26 வயதில் காம்கேர் மூலம் நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என கேட்டு என்னுடன் பணியாற்றும் ஸ்டாஃப்கள் சிலர் நினைவுகளை கிளறிவிட எனக்கு நானே ஊக்கப்படுத்திக்கொள்ளவும், என் ஸ்டாஃப்களுக்கு பதிலளிக்கவும் நானும் சற்று திரும்பிப் பார்த்தேன்… உங்கள் பார்வைக்காகவும்… என் 26 வயதில்……

தீதும் நன்றும் கற்றுத் தருவோம் (அக் 19, 2018)
தியேட்டரில் ஆண் தேவதை பார்க்கச் சென்றிருந்தேன். ‘தீதும் நன்றும் கற்றுத் தருவோம்’ என்ற கொடேஷனுடன் குழந்தைகளுக்கு ‘குட் டச், பேட் டச்’ சொல்லிக்கொடுக்கும் காட்சியுடன் ஆரம்பிக்கும் திரைப்படத்தில், பெரும்பாலான காட்சிகள் உட்கார வைத்து வகுப்பெடுத்ததைப் போல இருந்ததாலோ என்னவோ, திரைப்படத்தில் ஏதோ ஒன்று மிஸ்ஸானதைப் போலவே இருந்து. ஆனாலும்… தேவையில்லாத ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஏதுமின்றி,…

சும்மா இருப்பவர்களும் வணங்க வேண்டிய தெய்வம் சரஸ்வதி! (அக் 18, 2018)
சரஸ்வதி தேவியை வழிபட்டால் நமக்கு வரப்போகும் துன்பத்துக்கான எச்சரிக்கையை நமக்கு உணர்த்துவதன் மூலம் துன்பங்களில் இருந்து காப்பாற்றி விடுவாள். இந்தக் கருத்தை பாரதியார் ‘தீமை காட்டி விலக்கிடும் தெய்வம்’ என்கிறார். எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் விநாயகரை வழிபடுவதைப் போல சரஸ்வதியையும் வணங்கி வழிபட்டுத் தொடங்கினால் அந்த செயல் வெற்றிகரமாக முடியும்….

காம்கேர் 26 (அக் 18, 2018)
எங்கள் காம்கேர் (Compcare Software Private Limited) மூலம் தொழில்நுட்பத்தில் பல முதன் முயற்சிகளில் ஈடுபட வைத்து அவை வெற்றிபெற உதவிய சரஸ்வதி தேவிக்கு நன்றி சொல்லும் பதிவு… 1992-2018 வரை காம்கேர்… இன்று 26-ம் ஆண்டில் வெற்றிகரமாக… இதுபோன்ற ஒரு சரஸ்வதி பூஜை தினத்தன்று 1992-ம் ஆண்டு கல்வி-உழைப்பு-திறமை என்ற மூன்றை மட்டுமே மூலதனமாகப்…

அமெரிக்காவில் (அக் 11, 2018)
அமெரிக்காவில் 12-ம் வகுப்பு முடிந்ததும் கான்வகேஷன் நடக்கும். அந்த நிகழ்ச்சியின்போதுதான் பட்டம் அளித்து சிறப்பிப்பார்கள். அந்த விழாவிற்கு நடை, உடை, பாவனைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மாதகாலம் பயிற்சி அளிப்பார்கள். உடை உடல் முழுவதையும் கவர் செய்திருக்க வேண்டும். உடலின் மேல்பகுதியில் முன்போ, பின்போ தெரியும்படி இருக்கக் கூடாது. வெள்ளை நிறத்தில் இருக்க…

பஞ்சு மிட்டாய் – சமுதாயத்துக்கு என்ன செய்கிறது?
பிரபுவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாய் தகவல் கொடுத்திருந்தார். ‘தன்யஸ்ரீக்கு தன்யனாய் ஒரு தம்பி…’ என வாழ்த்தி விட்டு அமர்ந்தபோது பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ் வண்ணமயமாய் பஞ்சுமிட்டாயின் கலர்களுடன் என் கவனத்தை ஈர்த்தது என் டேபிள் மீது. ‘பஞ்சு மிட்டாய்’ குறித்து எழுத வேண்டும் என வைத்திருந்த கான்செப்ட் வேலைபளுவின் காரணமாய் தள்ளிக்கொண்டே போனது. இன்று…