கொஞ்சம் யோசிக்கலாம் வாங்க!


உங்கள் பார்வை மிகப்
பெரிய கனவுகளை நோக்கி
இருக்குமேயானால் உங்கள்
மனம் சிறிய ஆசைகளுக்கு
அடிமையாகாது!
– காம்கேர் கே. புவனேஸ்வரி
Compcare Software
ஜனவரி 29, 2022 | சனி | இந்திய நேரம் அதிகாலை 6 மணி

 

பெரும்பாலானோரைக் கவர்பவர்கள்
மாய மந்திரங்கள் எதுவும் செய்வதில்லை,
தங்களின் மேன்மையான
குணத்தினை  கண்ணியமாக
வெளிப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.
– காம்கேர் கே. புவனேஸ்வரி
Compcare Software
ஜனவரி 28, 2022 | வெள்ளி | இந்திய நேரம் அதிகாலை 6 மணி

சோம்பேறிகள்தான்  ‘பிசி பிசி’ என அடிக்கடி
சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
உண்மையிலேயே பிசியாக இருப்பவர்கள்
ஒருபோதும் தங்களை ‘பிசி’
என சொல்லிக் கொள்வதில்லை!
– காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 27, 2022 | வியாழன் | இந்திய நேரம் அதிகாலை 6.00

கலியுகத்தில் பூக்களைவிட முட்களுக்கே
மதிப்பு அதிகம். ஆகவே பூக்களாக
இருப்பதிலும் மகிழ்ந்துவிட வேண்டாம்.
தேவைப்பட்டால் முட்களாக மாறுவதிலும்
வருத்தப்பட வேண்டாம்!
– காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 26, 2022 | புதன் | இந்திய நேரம் அதிகாலை 6.00

நம் புத்திசாலித்தனம்
தக்க சமயத்தில் நமக்கு
கைக்கொடுக்க வேண்டும் என்றால்
ஒழுக்கமும் சுயகட்டுப்பாடும்
மிக அவசியம்!
– காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 25, 2022 | செவ்வாய் | இந்திய நேரம் அதிகாலை 6.00

கடந்த காலம்தான்
ஒருவரின் நன்னடத்தைச்
சான்றிதழ்!
– காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 24, 2022 | திங்கள் | இந்திய நேரம் அதிகாலை 6.00

நீங்கள் சொல்லும் பொய்களை
அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பவர்கள்
ஏமாளிகள் என நினைக்க வேண்டாம். அவர்கள்
பொறுமைசாலிகள்… சகிப்புத்தன்மை மிக்கவர்கள்…
பெருந்தன்மையானவர்கள்!
– காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 23, 2022 | ஞாயிறு | இந்திய நேரம் அதிகாலை 6.00

இயல்பில் இருந்து விலகி
இயல்புக்கு மாறாய் வாழ ஆரம்பிக்கும்போதுதான்
பெரும்பாலான உடல் கோளாறுகள் உருவாகின்றன.
கூடுமானவரை இயல்பை தொலைக்காமல் இருப்போம்.
அதுவும் ஒருவகை தியானமே!
– காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 22, 2022 | சனி | இந்திய நேரம் அதிகாலை 6.00

இலைகளை மொத்தமாக இழந்த பிறகும்
நம்பிக்கையோடு
துளிர்க்கும் நாளுக்காகக்
காத்திருக்கும் இந்த மரங்களிடம்
கற்றுக்கொள்வோம் நம்பிக்கையை!
– காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 21, 2022 | வெள்ளி | இந்திய நேரம் அதிகாலை 6.00

நமக்கு என எழுதப்பட்டவை 
நம்மை வந்தடைந்தே தீரும்!
அமைதியாய் நமக்காக கொடுக்கப்பட்டுள்ள
மணித்துளிகளை தன்முனைப்புடன்
பயன்படுத்தினாலே எல்லாமே நலமாய் நடக்கும்!
– காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 20, 2022 | வியாழன் | இந்திய நேரம் அதிகாலை 6.00

(Visited 211 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon