அவள் விகடன், மகளிர் தினம் சிறப்பிதழ் மார்ச் 15, 2022
#stopexploitingwomen கான்செப்ட்!
ஏழு ஆளுமைகள், ஏழு வெவ்வேறு தலைப்புகள்!
எழுவரில் ஒருவராக என்னுடைய எண்ணமும் கருத்தும் இடம் பெற்றுள்ளது!
நியூ வெர்ஷன் பெண்களாக இருப்போம்!
‘வீட்டு வேலைகளைப் பெண்களே செய்ய வேண்டும் என்ற ஆணாதிக்கம், அலுவலகத்தில் ஏதேனும் ஒரு விசேஷ தினம் என்றால் அங்கும் கோலம், அலங்காரம், உணவு பரிமாறுவது போன்ற வேலைகளை பெண்களையே செய்யவைப்பது வரை வியாபித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், ‘இதையெல்லாம் ஆண் செய்வதா, பெண்தானே செய்ய வேண்டும்’ என்ற பெண் அடிமைத்தன சிந்தனைதான். அவற்றை உடைக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அலுவலகத்தில் எந்தப் பணியாக இருந்தாலும், ஆண், பெண் சேர்ந்து செய்ய வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருங்கள். நீங்கள் வாங்கும் சம்பளம், இதுபோன்ற ‘ஆபீஸ் ஹவுஸ்வொர்க்’குகளை (Office housework) செய்வதற்கு அல்ல. ஒரு மீட்டிங்கில், பெண் என்பதாலேயே உங்களை டீ பரிமாறச் சொல்கிறார்கள் என்றால், அதைச் செய்ய மறுத்துவிடுங்கள். ‘இத்தனை ஆண்கள் இருக்கும் இடத்தில் நான் மட்டும் ஏன் இதை செய்ய வேண்டும்?’ என்று துணிந்து கேளுங்கள். நாளை நம் மகள்களையும் இவர்கள் டீ பரிமாறச் சொல்லாமல் இருக்க, இன்று நாம் இந்தக் கேள்வியை ஆரம்பித்து வைக்க வேண்டியது முக்கியம். நியூ வெர்ஷன் பெண்களாக இருப்போம்!’
அவள் விகடன் பத்திரிகையில்…
ஆன்லைனில் படிக்க: https://www.vikatan.com/social-affairs/women/stop-exploiting-women
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மார்ச் 3, 2022