சுழல் – வெப்சீரிஸ்!
ஒவ்வொர வருடமும் மாசி அமாவாசை அன்று மயானக் கொள்ளை திருவிழாவை அங்காள பரமேஸ்வர ஆலயங்களில் விமரிசையாக கொண்டாடுவார்கள். ஒரு கிராமத்தில் நடைபெறும் அந்த நிகழ்வையும், ஒரு இளம் காதல் ஜோடியின் மரணத்தையும், அந்த கிராமத்தின் வருமானத்துக்கு வழிவகுத்து வரும் ஒரு தொழிற்சாலை தீப்பிடித்து நாசமான சம்பவத்தையும் மிக அழகாக இணைத்து வெப் சீரிஸாக்கி இருக்கிறார்கள். 90 சதவிகித பெண் குழந்தைகள் இளம் வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளாவது நெருங்கிய உறவினர்களாலும் மிக நெருங்கிய குடும்ப நண்பர்களாலும் என்பதை அடிநாதமாக்கியுள்ளார்கள்.
யாருமே எதிர்பாராத திடீர் திடீர் திருப்பங்கள். அற்புதமான காட்சியமைப்புகள். அருமை.
பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பாடமாக அமைந்துள்ளது.
வாலிபர்களை கெட்டவர்களாக காட்டாமல் நடுத்தர வயது ஆண்களின் மறுபக்கத்தை படம் பிடித்து காட்டியுள்ளது மிகச் சிறப்பு. அதே சமயம் நடுத்தர வயது பெண்களும் தவறு செய்கிறார்கள் என்பதையும் காட்டியுள்ளார்கள்.
இவர்கள் இப்படித்தான், முதாலாளிகள் இப்படித்தான், தொழிலாளர்கள் இப்படித்தான், போலீஸ்கள் இப்படித்தான், விசாரனைக் கமிஷன்கள் இப்படித்தான், ஆண்கள் இப்படித்தான், பெண்கள் இப்படித்தான் என்ற ‘இப்படித்தான்’ அனுமானங்களை எல்லாம் பொடிப் பொடியாக்கியுள்ளார்கள்.
வசனங்கள் அருமை. எனக்கு மிகவும் பிடித்த வசனம்.
‘வாழ்க்கையில் எல்லோரும் ஒரு கில்டி கான்ஷியஸுடன்தான் வாழ வேண்டி உள்ளது. அதுதான் நம் அனுபவத்தின் அடையாளமாகவும் உள்ளது’
அமேசான் ப்ரைமில், 8 அத்தியாயங்களாக ஒவ்வொன்றும் 45 நிமிடங்கள் என்ற கணக்கில் காணக்கிடைக்கிறது!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 27, 2022 | திங்கள்