பெயர்

நேற்று முன் தினம் ஒரு பத்திரிகைக்காக நான் கொடுத்த நேர்காணலின் ஒரு பகுதி உங்கள் பார்வைக்காக… ‘புவனேஸ்வரியில் இருந்து காம்கேர் புவனேஸ்வரி வரை…’ எப்படி சாத்தியமானது?  – இதுதான் கேள்வி. ‘இரண்டு பெயர்களுமே என் அப்பா அம்மா வைத்ததுதான்… என் பெயருக்கு முழு காப்புரிமையும் என் பெற்றோருக்கே’ என்ற சிறிய நகைச்சுவையுடன் ஆரம்பித்தேன்… 25 வருடங்களுக்கு…

இங்கிதம் பழகுவோம்[27] 1992 முதல் 2019 வரை தொழில்நுட்பப் பயணம் (https://dhinasari.com)

1992-ஆம் ஆண்டு எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் மூலம் பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை,  மளிகை கடை முதல் மருத்துவமனைகள் வரை  எல்லா விதமான நிறுவனங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் முயற்சியில் இறங்கினோம். அப்போதெல்லாம் வீடுகளுக்கு வரும் மருத்துவர்களைப் பார்த்து பயப்படும் குழந்தைகளைப் போலவே கம்ப்யூட்டர் என்ற வார்த்தையுடன் பேச ஆரம்பிக்கும் என்னைப் பார்த்தும் பயந்தார்கள். ஏனெனில்…

கனவு மெய்ப்பட[22] – பெற்றோர் VS பிள்ளைகள் (minnambalam.com)

தினந்தோறும் காலை ஆறு மணிக்கு ஃபேஸ்புக்கில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில் தினம் ஒரு செய்தியுடன் ‘அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்’ என்ற வாழ்த்துடன் பதிவிட்டு வருகிறேன். எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள்தான் என்றாலும் அதை எல்லா தரப்பினருக்கும் புரியும்படி சுவாரஸ்யமாகச் சொல்வதால் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எந்த ஒரு படைப்பானாலும் அது…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[1] : பலிகடாக்களும் பட்டப் பெயர்களும்! (நம் தோழி)

பலிகடாக்களும் பட்டப் பெயர்களும்! ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.’ அடிக்கடி இந்தக் குறள் என் மனதுக்குள் வந்துபோகும். நமக்குத் துன்பம் ஏற்படுத்துகிறவர்களுக்கு நன்மைகள் செய்தாலும், அவர்கள் நாணமெல்லாம் படுவதில்லை இந்தக் காலத்தில். ஏனெனில் பலருக்கும் தாங்கள் செய்வது தவறு என்ற எண்ணமே இருப்பதில்லை. சிலர் தெரிந்தே தவறு செய்கிறார்கள். ஒரு சிலர்…

வாழ்க்கையின் OTP-9 (புதிய தலைமுறை பெண் – ஏப்ரல் 2019)

சிம்மாசனத்துக்கு ‘ரிசர்வேஷன்’ செய்துவிடுங்கள்! அப்பாவின் தியாகத்தைப் பற்றிய வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அதற்கு பலரின் கமெண்ட்டுகள் மனதை கனக்கச் செய்தன. எனக்கும் சின்ன ஃப்ளாஷ்பேக் எட்டிப் பார்த்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சென்னை வந்து என் நிறுவனத்தைத் தொடங்கியபோது பல்துறை சார்ந்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது என் கிளையிண்ட் ஒருவர் என்னிடம் ஒரு…

இங்கிதம் பழகுவோம்[26] பெயர் சொல்லி அழைப்பதில் என்ன இருக்கிறது? (https://dhinasari.com)

என் நிறுவனத்தில் பணி புரிந்து அனுபவம் பெற்று இப்போது வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் எப்போதெல்லாம் வேறு பணி மாறுகிறார்களோ அப்போதெல்லாம் ‘அவர்கள் என் நிறுவனத்தில் பணி புரிந்ததற்கான Employee Verification’ கேட்டு அந்த நிறுவனங்களில் இருந்து இமெயிலும், போனும் வரும். அவர்கள் என் நிறுவனத்தில் வேலை செய்தபோது அவர்களின் வேலை, திறமை, பண்பு எல்லாவற்றையும் விலாவரியாக…

எப்படி ஜெயித்தார்கள் – புத்தக மதிப்பீடு

‘இறக்கை முளைத்தது பறக்கத் தெரிந்தது பறப்பது சுதந்திரமில்லை நிர்பந்தம் என்பது புரிந்தது’   ‘ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்’  நிறுவனர் திரு. கிருஷ்ணன் தன் டேபிளில் வைத்திருந்த இந்த கவிதை வரிகளே இந்த புத்தகம் முழுவதும் படிக்கத் தூண்டியது. ‘இந்த அழகான உலகில் அனைவரும் அடைய விரும்பும் ஒரு விஷயம் வெற்றி. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெற்றிக்கான இலக்கும் அளவுகோளும்…

விரும்பாததை ஏற்றுக்கொள்வது மிகப் பெரிய துறவறம் (மல்லிகை மகள் ஏப்ரல் 2019)

இந்த நாள் இனிய நாள் – 54 சாப்பாடு விஷயத்தில் சிறுவயதிலேயே எங்கள் பெற்றோர் எங்களுக்கு ஒரு விஷயத்தைச்  சொல்லிக் கொடுத்தார்கள். எந்த காய்கறியை சமைத்திருந்தாலும் முதலில் தட்டில் வைப்பதை வேண்டாம் என்று ஒதுக்காமல் சாப்பிட்டுவிட வேண்டும். பிடித்திருந்தால் இன்னும் கேட்டுச் சாப்பிடலாம். அது கசக்கும் பாகற்காயாக இருந்தாலும் சரி, சுவையைக் கூட்டும்  உருளைக்கிழங்கு ரோஸ்ட்டாக…

கனவு மெய்ப்பட[21] – ‘நோ காம்ப்ரமைஸ்’! (minnambalam.com)

சமீபத்தில் நடிகை நயன்தாரா மீதான வார்த்தை அத்துமீறலை அதே சினிமா துறைச் சார்ந்த ஒரு நடிகர் ஒரு சினிமா மேடையிலேயே விமர்சித்தார். இது சினிமா துறைச் சார்ந்த பெண்களுக்கு மட்டுமல்ல. எல்லா துறை சார்ந்த பெண்களுக்கும் பகிரங்கமாக நடக்கின்ற நிகழ்வுகளே. இன்று சமூக வலைதளங்களும் மீடியாக்களும் பெருகி தொழில்நுட்ப உச்சத்தில் இருப்பதால் பெரும்பாலானோருக்கு அது குறித்து…

சேவை மனப்பான்மையும் தொழில் வாய்ப்பும்!

மாணவர்களின் ஆர்வம் என்ன, திறமை என்ன என்பதைக் கண்டறிந்து இரண்டும் ஒருங்கிணையும் ஒரு புள்ளியை அவர்களின் எதிர்காலமாகக் கொண்டு அதற்கான வாய்ப்பைத் தேடுவதில்தான் அவர்களின் வெற்றி உள்ளது. அந்த வகையில் பிறருக்கு உதவும் மனப்பான்மைகூட ஒரு திறமைதான். அதனடிப்படையில் அவர்கள் பணியை தேர்ந்தெடுக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon