‘Best Digital Contributor’ – By விஜயபாரதம் (ஜூன் 5, 2016)
ஜூன் 5, 2016 அன்று நடைபெற்ற விஜயபாரதம் பத்திரிகையின் சேவா கட்டிடத் திறப்புவிழாவில் காம்கேர் புவனேஸ்வரிக்கு ‘Best Digital Contributor to Vijayabaratham’ என்ற அங்கீகாரம் அளித்து பாராட்டி கெளரவித்தார்கள். விஜயபாரதத்துக்கும் எனக்கும் இன்று நேற்றல்ல நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாளில் இருந்தே தொடர்புண்டு. ‘இளைய பாரதத்தினாய் வா, வா, வா’ என்ற தலைப்பில் அவர்கள்…
Outstanding Alumni Award – AVC College, Mayiladuthurai (March 28, 2016)
ஏவிசி கல்லூரியின் வைரவிழா (Diamond Jubilee) நிகழ்ச்சி 28-03-2016 அன்று நடைபெற்றது. கல்லூரி வளாகமே பரவசத்தோடு விழாக்கோலம் பூண்டிருந்தது. பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களில் 7 நபர்களைத் தேர்ந்தெடுத்து கெளரவித்தார்கள். அதில் காம்கேர் கே. புவனேஸ்வரியும் ஓர் அங்கம். ஏவிசி கல்லூரியில் 1990-1992 எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு Outstanding Alumni Award…
சாதனா விருது – லைன்ஸ் கிளப் இண்டர்நேஷனல் (March 8, 2016)
லைன்ஸ் கிளப் இண்டர்நேஷனல் மார்ச் 8, 2016 அன்று காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு ஐடி துறையில் சாஃப்ட்வேர் தயாரிப்பு, மல்டிமீடியா அனிமேஷன், ஆவணப்படம், எழுத்து என பல்வேறு துறைகளில் சிறப்பாக இயங்கி வருவதற்காக சாதனா விருது வழங்கி சிறப்பித்தது. விருதுவழங்கும் விழாவில் என் மனதைக் கவர்ந்ததும், என்னை நெகிழ வைத்ததும்! 8, மார்ச் 2016. பெண்கள் தின…
Best Book Award – பவித்ரம்:Pavithram – Ramamoorthi Memorial Trust (August 30, 2015)
பவித்ரம் அமைப்பின் சார்பாக, ராமமூர்த்தி நினைவு அறக்கட்டளை வாயிலாக 2015 -ன் சிறந்த புத்தகமாக காம்கேர் கே. புவனேஸ்வரி எழுதிய போட்டோஷாப் – Adobe Creative Cloud – நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு சிறந்த நூலாசிரியர் விருதும், அவர் எழுதிய போட்டோஷாப் நூலுக்கு சிறந்த புத்தக விருதும் (Best Book Award) ஆகஸ்ட் 30, 2015 அன்று …
இளம் தொழிலதிபர் விருது (Young Entrepreneur Award) – புதிய தலைமுறை அறக்கட்டளை (April 30, 2014)
புதிய தலைமுறை அறக்கட்டளை ஏப்ரல் 30, 2014 அன்று காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு இளம் தொழிலதிபர் விருது அளித்து கெளரவித்தது. இந்த நிகழ்ச்சி குறித்த செய்திக்கு புதிய தலைமுறை அறக்கட்டளை செய்திமடலை இங்கு கிளிக் செய்து வாசிக்கலாம்!
Vocational Excellence Award – Rotary Club of Madras Chenna PATNA (January 23, 2014)
கம்ப்யூட்டர் நம் நாட்டில் நடை பயிலத் தொடங்கும் முன்னரே, கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டைப் பட்டம் பெற்றதுடன் (எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்) கூடுதலாக எம்.பி.ஏவும் படித்து, வெளிநாட்டு வாய்ப்புகள் சிவப்புக் கம்பளம் போட்டு அழைத்தாலும் அதை அத்தனையும் உதறித் தள்ளிவிட்டு, இந்தியாவிலேயே முதன் முதலில் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய முதல் பெண் தொழில்நுட்ப வல்லுநர் என்ற அங்கீகாரத்தைப்…
Best Book Award – பவித்ரம்:Pavithram – Ramamoorthi Memorial Trust (July 21, 2013)
பவித்ரம் அமைப்பின் சார்பாக, ராமமூர்த்தி நினைவு அறக்கட்டளை வாயிலாக 2013 -ன் சிறந்த புத்தகமாக காம்கேர் கே. புவனேஸ்வரி எழுதிய ‘கம்ப்யூட்டரில் தமிழ்’ நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு சிறந்த நூலாசிரியர் விருதும், அவர் எழுதிய ‘கம்ப்யூட்டரில் தமிழ்’ நூலுக்கு சிறந்த புத்தக விருதும் (Best Book Award) ஜூலை 21, 2013 அன்று வழங்கப்பட்டது.
கணித்தமிழ் வல்லுநர் விருது – By தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை (March 4, 2013)
சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்த்துறை ஏற்பாடு செய்திருந்த ‘பார்வையற்றோருக்கான தமிழ்க் கணினி மேம்பாட்டுத் திட்டம்’ 04-03-2013 அன்று சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு கணித்தமிழ் வல்லுநர் விருது வழங்கப்பட்டது. சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் டாக்டர் ஆர். ஜெயசந்திரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பார்வையற்றோருக்கான தமிழ்க் கணினி மேம்பாட்டுத்…
கணினிக் கலைவாணி, பல்கலைச் செல்வி – புதுக்கோட்டை இலக்கியப் பேரவை (Decdember 23, 2012)
காம்கேர் கே. புவனேஸ்வரியின் 20 வருட கணினித் தொழில்நுட்பத் துறைப் பணியைப் பாராட்டி புதுக்கோட்டை இலக்கியப் பேரவை, புதுக்கோட்டையில், 23-12-2012, ஞாயிறு அன்று ‘கணினிக் கலைவாணி, பல்கலைச் செல்வி’ என்ற இரண்டு பட்டங்களை வழங்கி கெளரவித்தது. மேலும் இதன் தலைவர் திரு. முத்து சீனிவாசன் அவர்கள் நந்தவனப் பூக்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகத்தில் விருது…
கணினி மேதை – பருத்தியூர் சந்தானராமன், ஹேமா சந்தானராமன் (April 2010)
இலக்கிய மேடைப் பேச்சாளர்கள் பருத்தியூர் கே.சந்தானராமன் மற்றும் அவரது துணைவியார் திருமிகு. ஹேமா சந்தானராமன் அவர்களால் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு, அவரது கம்ப்யூட்டர் தொழில்நுட்பத் துறை சாதனையைப் பாராட்டி ‘கணினி மேதை’ விருது ஏப்ரல் 2010 அன்று அளிக்கப்பட்டது. விரிவாக படிக்க Kalaimagal APRIL 2010