#மலேசியா: என் உரை குறித்து – Self iNtroduction Video (July 10, 2023)
என் உரை குறித்தும், எங்கள் காம்கேர் குறித்தும்! எழுதுவது என்பது ஒரு கலை என்றால் பலர் முன் பேசுவது மற்றொரு கலை. இரண்டும் ஒன்றல்ல. எழுதும்போது எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். எந்த சூழலிலும், எந்த நேரத்திலும், எப்படி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்துகொண்டு எழுதமுடியும். குறிப்பாக எந்த உடை வேண்டுமானாலும் அணிந்துகொள்ளலாம். எழுதும்போது…
madraspaper.com – மகளிர் தினச் சிறப்பிதழ் – March 8, 2023
‘இருநூறு புத்தகங்களின் ஆசிரியர்!’ பா. ராகவன் அவர்களின் மெர்டாஸ் பேப்பர் (madraspaper.com) என்ற ஆன்லைன் பத்திரிகையில் மார்ச் 8, 2023 மகளிர் தினச் சிறப்பிதழில் என் பேட்டி வெளியானது. தலைப்பு: ‘இருநூறு புத்தகங்களின் ஆசிரியர்!’
‘வாவ் தமிழகம்’ யூடியூப் சேனல் : 46-வது சென்னை புத்தகக் காட்சியில் காம்கேர் புவனேஸ்வரியின் பங்களிப்பு (January 21, 2023)
‘வாவ் தமிழகம்’ யு-டியூப் சேனலில் ஜனவரி 21, 2023 அன்று சென்னை 46-வது புத்தகக்காட்சியில் காம்கேர் கே. புவனேஸ்வரியின் பங்களிப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. வீடியோ:https://youtu.be/o0GDC2mXpxM (6.30 நிமிடத்தில் இருந்து – 8.40 நிமிடம் வரை காம்கேர் புவனேஸ்வரி குறித்த செய்தி)
ஆடியோ: சாவித்திரி டீச்சரின் வாழ்த்து! – December 22, 2022
சாவித்திரி டீச்சர்! என் பள்ளி ஆசிரியர், வயது 80+. கிட்டத்தட்ட 38 ஆண்டுகாலம் கணித ஆசிரியராக அரசுப் பள்ளியில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவர். எங்கள் பெற்றோரின் பணி இட மாற்றல் காரணமாக பல்வேறு ஊர்களில் வசித்ததால் பள்ளிப்படிப்பும், கல்லூரிப் படிப்பும் பெரும்பாலும் வெவ்வேறு ஊர்களில்தான். அந்த வகையில் 8 மற்றும் 9-ம் வகுப்பு மயிலாடுதுறையில்….
தினத்தந்தி: சிடி கேசட் வெளியீடு – Jan 12, 2002
தினத்தந்தி பத்திரிகையில் வாசிக்க: DinaThanthi 12 JAN 2002 ‘சிடி கேசட்’ புதுசா இருக்கா? சிடிக்கள் அறிமுகம் ஆகி இருந்த காலக்கட்டத்துக்கும் கேசட்டுகள் மெல்ல மெல்ல பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்த சூழலுக்கும் இடையேயான மெல்லிய நூலிழையில் (Transition period) வெளியான எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் முதல் அனிமேஷன் படைப்பான ’தாத்தா பாட்டி நீதிக்கதைகள்’ என்ற…
கல்கி: கூகுள் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே! – 2003
கல்கி பத்திரிகையிலேயே வாசிக்க: Kalki 2003 கூகுள் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே! படக்குறிப்பு: கல்கியில் வெளியான செய்தி! 2003-ம் ஆண்டே, கூகுள் போன்ற சர்ச் இஞ்சின்கள் பிரபலமாவதற்கு முன்பே மல்டிமீடியாவில் Search Option வைத்து திருவாசகத்தின் 658 பாடல்களையும் Text, Audio, Video என முழுமையாக வடிவமைத்தோம். 658 பாடல்களின் மூலம் ஒருபுறம், அதன் எதிர்புறம்…
TTN: சாஃப்ட்வேரும் எழுத்தும் சாத்தியமானது எப்படி? – மே 2011
பேட்டி கொடுப்பதைப் போலவே! இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சி (TTN) நேர்காணல். அயல்நாட்டு தமிழர்களுக்கான நிகழ்ச்சி. (புகைப்படம்: TTN ஸ்டுடியோவில் என்னை நேர்காணல் செய்தவர்கள் உயர்திரு. மாலா பாலு மற்றும் கார்மெல், வருடம் 2000.) நேர்காணலின் இறுதியில் மாலா பாலு அவர்கள் மென்மையான குரலில் ஒரு கேள்வி கேட்டார். ‘நீங்கள் நடத்துவதோ சாஃப்ட்வேர்…
வியக்க வைத்த 2004!
உழைப்பில் ஊறிய நாட்கள்! வியக்க வைத்த 2004! 1992-ல் ஆரம்பித்த எங்கள் காம்கேர் நிறுவனத்தின் 31 ஆண்டுகால உழைப்பின் சாராம்சத்தை ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆதியோடு அந்தமாக விரிவாக பின்னர் எழுதுகிறேன். கடந்த ஒரு வார காலமாக, இத்தனை வருடங்களில் மீடியாக்களில் வெளியான செய்திகளை படமாக்கிக்கொண்டிருக்கிறோம். எனவேதான் சுவாரஸ்யமான மீடியா செய்திகளை மட்டும் அவ்வப்பொழுது பகிர்ந்து வந்தேன்….
அமுதசுரபி: 2004-லேயே பொன்னியின் செல்வன்! – June 2004
அமுதசுரபி பத்திரிகையில் விரிவாகப் படிக்க: Amuthasurabi June 2004 MIN 2004-லேயே பொன்னியின் செல்வன்! PS-1 : பொன்னியின் செல்வன் குறித்து நீங்கள் எதுவுமே சொல்லவில்லையே இதுவரை என ஒருசிலர் கேட்டார்கள். நாங்கள் எல்லாம் 2004-லிலேயே பேசி இருக்கிறோமே! அப்படியா? ஆமாம். 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் அமுதசுரபி பத்திரிகையில் ‘வெற்றித் திருமகள்’ என்ற தலைப்பில் மூன்று…
‘தி இந்து’ தமிழ்: என் குழந்தைப் பருவம் (July 21, 2022)
என் குழந்தைப் பருவம்! சாக்லெட்டுகளுக்கெல்லாம் மயங்காத குழந்தை! நான் பிறந்தது கும்பகோணத்தில். அப்போது என் அப்பாவும் அம்மாவும் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் தொலைபேசி துறையில் பணி. அப்பா பெயர் கிருஷ்ணமூர்த்தி. அம்மா பெயர் பத்மாவதி. குழந்தையாக இருக்கும்போது அக்கம்பக்கத்தினர் என்னை தூக்கி வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்களாம். நான் வர மாட்டேன் என்பதால் சாக்லெட்டுகளை நீட்டி ஆசை…