டெக்னோஸ்கோப்[5] – நீங்களாக இ-புத்தகம் வெளியிட ஆசையா?

புத்தகம் வெளியிட ஆசையா? நீங்கள் எழுதும் புத்தகங்களை இ-புத்தகங்களாக வெளியிட்டு சம்பாதிக்கவும் உதவக்கூடிய வகையில் சில நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஒருசில புத்தக பதிப்பளர்கள் தங்கள் புத்தகங்களை தாங்களே தங்கள் தளத்தில் இ-புத்தகங்களாக வெளியிட்டு விற்பனை செய்கிறார்கள். இன்று பல பதிப்பகங்கள் அமேசான் போன்ற தளங்களில் அவர்களுடன் விற்பனை ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விற்பனை செய்கிறார்கள். உலக அளவில்…

ஆன்லைன் இங்கிதங்கள்

ஆன்லைன் இங்கிதங்கள் நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் – சைபர் க்ரைம் குறித்த விழிப்புணர்வு புத்தகத்தை ஆன்லைனில் ஏற்படுத்தும் அத்தனை அச்சுறுத்தல்களுக்குமான தீர்வு குறித்து சென்னை கமிஷ்னர் அலுவலகத்தின் வழிகாட்டலுடன் நான் எழுதிய புத்தகம் விகடன் பிரத்தில் விற்பனையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இப்போது லேட்டஸ் தொழில்நுட்ப வளர்ச்சிகளுடன் புதிதாய் முளைத்திருக்கும் ஆன்லைன் அச்சுறுத்தல்களுக்கான தீர்வுகள் குறித்து  ‘ஆன்லைன்…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[3] : ஆண் தேவதைகளும் பெண் தெய்வங்களும்! (நம் தோழி)

ஆண் தேவதைகளும் பெண் தெய்வங்களும்! ஒரு மேடை நிகழ்ச்சி. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மைக்கில் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் அந்த நிகழ்ச்சிக்கு ஒரு பெண்மணியை சிறப்பு பேச்சாளராக அழைத்தாராம். அதற்கு அந்தப் பெண்மணி வீட்டில் கேட்டுச் சொல்கிறேன் என்று சொன்னாராம். இப்படித்தான் பெண்கள் தங்கள் முடிவை தாங்கள் எடுக்காமல் வீட்டில் கேட்டுச் சொல்கிறேன், கணவரிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று…

டிஜிட்டல் ட்ரெண்ட்!

கிராமங்களில் ஓடு மாற்றுபவர்கள் ஓடு மாற்றிய பிறகு அதில் கொஞ்சம் பட்டாணியை வீசிவிட்டுச் செல்வார்களாம். அதைத் தின்பதற்காக அவ்வப்பொழுது பறவைகளும், குரங்குகளும் வந்து அவற்றை எடுக்க முற்படும்போது ஓடு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டே வருமாம். நாளடைவில் ஓட்டு வீட்டுக்குள் வெயிலும் மழையும் அழையா விருந்தாளியாய் எட்டிப் பார்க்கத் தொடங்குமாம். சில மாதங்களுக்குப் பிறகு திரும்பவும் அவர்கள்…

‘கோடு’ ஓவியக்கூடம்!

‘கோடு’ ஓவியக்கூடம்! ஓவியத்துக்கு மிக நெருக்கமான பெயர். வேளச்சேரி 100 அடி ரோடில் அண்மையில் திறந்துள்ளார் திரு. சீராளன் ஜெயந்தன். இன்று இந்த ஓவியப் பள்ளிக்கு நேரில் சென்றிருந்தேன்.  பல்வேறு ஓவியர்களின் கைவண்ணத்தில் ஓவியங்களை காட்சிப்படுத்திய கண்காட்சியுடன் தொடங்கியுள்ளார். ஓவியக்கூடம் கலைநயத்துடன் பல்வேறு வண்ணக்கலவைகளால் சரஸ்வதி கடாக்ஷத்துடன் காட்சியளிக்கிறது. பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் பழகுவதற்கும் எளிமையான மனிதராக…

டெக்னோஸ்கோப்[4] – இ-புக்ஸ் படிப்பதும் சுலபமே!

மின்னூல்கள் என்பதும் இ-புக்ஸ் என்பதும் ஒன்றா? ஆம். இ-புக்ஸ், இ-புத்தகங்கள், மின்னூல்கள் இவை அனைத்துமே ஒரே பொருள் தரக்கூடியவை. இ-புக்ஸ் என்பது PDF ஃபைலா? இ-புக்ஸ் என்பது PDF ஃபைல்கள் என்றே பலரும் கருதி வருகிறார்கள்.  இ-புக்ஸ்களை பயன்படுத்துவதற்கு PDF ஃபைல்களைப் படிப்பதைப் போல இருப்பதால் அப்படித் தோன்றலாம்.  மின்கருவிகளில் படிப்பதற்கு pdf  தவிர  epub,…

மனோ தைரியம்!

சரியானதை யோசிப்பவர்… தனக்குப் பிடித்த வேலையை செய்பவர்… தன் மனசாட்சிக்கு சரியெனப்படுவதை பேசுபவர்… மாயவரத்தான் கி ராமேஷ்குமார்… இவரும் என் சகோதரனும் பி.எஸ்.ஸி படித்தபோது நான் எம்.எஸ்.ஸி முதலாம் ஆண்டில்… நாங்கள் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி மாணவர்கள்! என் சகோதரன் வயதை ஒத்த இவருக்கு பைபாஸ் சர்ஜரி என்றதும் கொஞ்சம் அதிர்ந்தேன்! புகை, மது என…

டெக்னோஸ்கோப்[3] – தமிழ் அச்சுப் புத்தகங்களின் நிலை என்ன ஆகும்?

தமிழ் அச்சுப் புத்தகங்களின் நிலை என்ன? முன்பெல்லாம் புத்தக வாசிப்பு பெரும்பாலானோரின் ஹாபியாக இருந்து வந்தது. அதிலும் பஸ் ரயில் பிரயாணங்களில் புத்தகங்கள் வாசிப்பது பலரின் பழக்கமாகவும் இருந்தது. வாசிப்பு என்பது பெரும் இலக்கியங்களாக இல்லையென்றாலும் பத்திரிகைகள், நாவல்கள் என்ற அளவில் பரவி இருந்தது. இதற்காகவே பஸ் / ரயில் நிறுத்தங்களில் புத்தகக் கடைகள் நிறைந்திருக்கும்….

ஹலோ… ஹலோ… தொலைபேசி துறையின் உச்சக்கட்ட வளர்ச்சி!

மே 17: உலக தொலைத்தொடர்பு தினம் [Courtesy: 40 ஆண்டுகாலம் தொலைபேசி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அப்பா வி. கிருஷ்ணமூர்த்தி – Sub Divisional Engineer, அம்மா பத்மாவதி – Senior Telephone Supervisor] இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறோம். 1990 – களில் நம் நாட்டில் தலைகாட்டிய கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மெல்ல…

‘வாட்ஸ் அப்’ எடிஷனில் புத்தகங்கள்

நேற்று ஒரு கல்லூரி மாணவி போன் செய்திருந்தார். ஆங்கிலத்தில் பேசினாள். சைபர் க்ரைம் குறித்து பிராஜெக்ட் செய்துகொண்டிருப்பதாகவும்  அதற்குப் பயன்படுத்துவதற்காக நான் எழுதிய ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’ என்ற சைபர் கிரைம் விழிப்புணர்வு புத்தகத்தின்   ஆங்கில எடிஷன் வந்துவிட்டதா என்று கேட்டார். ‘Not yet published… Do you have the Tamil Edition of that…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon