கனவு மெய்ப்பட[15] – மேடைக் கூத்துகள்!! (minnambalam.com)

ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு சற்றே தாமதமாகச் சென்றிருந்த என் உறவினர் ஒருவர் அந்த அரங்கின் உள்ளே உட்கார இடம் இருக்கிறதா என தேடியபோது முன் வரிசையில் ஒரு இடம் இருந்ததால் அங்கு சென்று உட்கார முற்பட அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓடி வந்து, ‘அது சிறப்பு விருந்தினர்களுக்கு’ என மறுத்ததால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் வீடு…

கனவு மெய்ப்பட[14] – அட்வைஸும் ஒரு கலையே! (minnambalam.com)

ஒருவருக்கு ஆறுதல் சொல்வதும், அட்வைஸ் செய்வதும் அத்தனை எளிதான செயலாக எனக்குத் தோன்றவில்லை. அது ஒரு கலை. சில பத்திரிகைகளில் பெண்களின் உளவியல் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து பெண்களுக்காக எழுதச் சொல்லிக் கேட்பார்கள். ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து வாழும் அமைப்புதான் சமுதாயம். அதில் பெண்களின் உளவியல் பிரச்சனைகளுக்கு ஏதோ ஒருவிதத்தில் காரணமாக…

கனவு மெய்ப்பட[13] – பெற்றோர்களே நீங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள்! (minnambalam.com)

பள்ளியில் ஏற்பட்ட சிறிய உளவியல் பிரச்சனைக்காக ஏற்கெனவே என்னிடம் கவுன்சிலிங் பெற்ற ஒரு பள்ளி மாணவி எனக்கு போன் செய்து பேசினாள். நடந்து முடிந்த தேர்வு குறித்தும் அவள் பள்ளி, படிப்பு, நண்பர்கள் குறித்தும் விசாரித்தேன். லீவில் சினிமா ஏதாவது பார்க்கப் போகிறாயா? என்று கேட்டதற்கு ‘ஆமாம் ஆண்ட்டி… நாளைக்கு விஸ்வாசம் புக் செய்திருக்கோம். அம்மாவும்…

கனவு மெய்ப்பட[12] – ஸ்மார்ட்டா இருக்க என்ன செய்யணும்? (minnambalam.com)

சாதாரண வேலையைக் கூட உன்னதமாக நினைத்து பூரண ஈடுபாட்டுடன் செய்யும்போது நமக்கு மனநிறைவு கிடைப்பதுடன், நிறைவடைந்த வேலையிலும் அழகு ததும்புவது நிச்சயம். ஒரு வேலையை செய்ய ஆரம்பிக்கும்போதே அதை முடிக்கும்போது எப்படி இருக்கும் என கற்பனையில் மனக்கண் முன் கொண்டுவந்து பார்த்து மகிழ்ந்தபடி செய்தால் வேலை செய்வதும் சுலபமாக இருக்கும். மனமும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் இயங்கி…

கனவு மெய்ப்பட[11] – வளையத்துக்குள் சர்கஸ் சிங்கங்கள்! (minnambalam.com)

வெற்றி பெற்றவர்களை உற்று நோக்கினால் ஒரு உண்மை புலப்படும். அவர்கள் தங்கள் Comfort Zone  விட்டு வெளியே வந்து தங்கள் வாழ்க்கையை எதிர்கொண்டவர்களாக இருப்பார்கள். புதிதாக திருமணம் ஆன ஒரு பெண் டெல்லிக்குச் செல்கிறார். டிகிரி படித்திருந்தாலும் வேலைக்குச் செல்லவில்லை. இந்தி சுத்தமாக தெரியாது. இந்தி இல்லாமல் டெல்லியில் காலம் தள்ளுவது கடினம். அவர் சைகை…

கனவு மெய்ப்பட[10] – அந்தப் பத்தாவது ஆப்பிள்! (minnambalam.com)

நம் சந்தோஷம் என்பது நம்முடைய செயல்பாடுகளினாலும், வெற்றியினாலும் கிடைக்கும் என்பது பொதுவிதியாக இருந்தாலும் பெரும்பாலும் நம்மை பிறர் பாராட்டினாலோ அல்லது நமக்குப் பிடித்த நபர் நம்முடன் வலிய வந்து பேசினாலோ நாம் மகிழ்ச்சியாகி விடுகிறோம். நம்முடைய மகிழ்ச்சி மற்றவர்களின் நடவடிக்கையால் தீர்மானிக்கப்படும்போது நாம் மற்றவர்களைச் சார்ந்து இயங்க ஆரம்பித்து விடுகிறோம். இந்த கண்ணோட்டம் இன்னும் ஆழமாகும்போது…

கனவு மெய்ப்பட[9] – பழக்கம்: பிடிவாதமும் நெகிழ்வும்! (minnambalam.com)

சிரிப்பு யோகா சொல்லிக்கொடுக்கும் நண்பர் சிரிப்பானந்தா அவர்களின் சமீபத்திய ஃபேஸ்புக் பதிவைப் படித்தேன். எய்ட்சால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்கு சிரிப்பு யோகா சொல்லிக்கொடுக்கும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்த நண்பர்,  நிகழ்ச்சி முடிந்ததும் அவரிடம் ரகசியமாக வந்து ஒரு பாக்கெட்டைக் கொடுத்ததாகவும், அது  ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி, ஒருமுறை சாப்பிட்டால் பின்பு விட மாட்டீர்கள், ருசி சூப்பராயிருக்கும், என்று சொல்லி…

கனவு மெய்ப்பட[8] – வேண்டாமே ‘ஈ அடிச்சான் காப்பி!’ (minnambalam.com)

ஜேகே என பரவலாக அறியப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி  ஒரு புரட்சியாளர். அவரது சொற்பொழிவுகளிலும் எழுத்திலும் அலங்காரங்கள் இருக்காது. அவர் என்றுமே  நான் பேசப்போகிறேன், எனக்கு உண்மை தெரியும், என் பேச்சைக் கேட்டு உண்மையை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் என  சொன்னதேயில்லை.  மாறாக ‘நாம் அனைவரும் இணைந்து ஒன்றாக பயணிக்க இருக்கிறோம்’  என்றுதான்  தன்  சொற்பொழிவுகளைத்  தொடங்குவார். இவரைப்போலவே, மேடை…

கனவு மெய்ப்பட[7] – பணம்-பதவி-புகழ்! (minnambalam.com)

பணம், பதவி, புகழ். மனிதனை ஆட்டுவிக்கும் முன்று மாபெரும் சக்திகள். மூன்றும் ஒருசேர கிடைக்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அது அபூர்வம். மூன்றுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. பதவி வரும்போது பணமும் கூடவே வரும். அதனுடன் இணைப்பாய் புகழும் வரும். அதுபோலவே பணமும் பதவியும் நம்மைவிட்டுச் செல்லும்போது அதனால் உண்டான புகழும் நம்மை விட்டுச் சென்றுவிடும். நம்மிடம் பணமும்,…

கனவு மெய்ப்பட[6] – நம் செயலே நம் அடையாளம்! (minnambalam.com)

நம் ஒவ்வொருவருக்குமான உயரம்-குள்ளம், கருப்பு-சிவப்பு, குண்டு-ஒல்லி போன்ற புற அங்க அடையாளங்கள் பெரும்பாலும் பொதுவானவை. நம் பெயர், படிப்பு, திறமை, வேலை, குணநலன்கள், பழக்கவழக்கங்கள், செயல்பாடுகள் போன்றவை ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை வாய்ந்தவை. அவையே நம்மை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது. நம் அடையாளமாகிறது. இதுபோல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு அடையாளம். பாரத நாடு அன்பிலும், கருணையிலும், அறிவிலும்,…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon