வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[12] : சொர்க்கத்தையும் நரகத்தையும் உணர்த்துவோம்! (நம் தோழி)

சொர்க்கத்தையும் நரகத்தையும் உணர்த்துவோம்! எங்கள் அலுவலகத்தில் சிறிய மரவேலை. வந்திருந்த கார்ப்பென்டர் எனக்கு ஏற்கெனவே அறிமுகம். சென்ற வருடம் எங்கள் நிறுவனத்தில் சில மாற்றங்கள் செய்து சீரமைத்தோம். அப்போது மரவேலை முழுவதையும் அவர்தான் செய்துகொடுத்திருந்தார். அப்போது அவருடைய மகன் ப்ளஸ் டூ முடித்திருந்தார். அவர் மகனை எந்த குரூப்பில் சேர்க்கலாம் என என்னிடம் ஆலோசனை கேட்டு…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[11] : நன்றும் தீதும்! (நம் தோழி)

நன்றும் தீதும்! சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் இளம் பெண் டாக்டருக்கு நடந்த கொடுமை குறித்து ஃபேஸ்புக்கில் நான் எழுதிய எச்சரிக்கைப் பதிவுக்கு ‘அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ ஒன்றிரண்டு தீய செயல்கள் நடைபெறுவதால் ஆண்கள் எல்லோருமே கெட்டவர்களாகிவிட மாட்டார்கள்…’  என ஒரு நண்பர் பின்னூட்டமிட்டிருந்தார். அந்த ஒன்றிரண்டு கொடூரங்கள் நமக்கே நடந்துவிடலாம் என்ற பதற்றம் இல்லாமல்…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[10] : பிள்ளைகளே ஆனாலும் பார்த்துப் பேசுவோம்!! (நம் தோழி)

ஒரு ஞாயிற்றுக்கிழமை. கோயிலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு வயதான பாட்டி சைக்கிளில் தண்ணீர் பாட்டிலை வைத்து தள்ளிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். பாட்டி சைக்கிள் தள்ளுவது எனக்கு ஆச்சர்யமாகவும் அதே சமயம் பரிதாபமாக இருக்கவே, ‘சைக்கிள் ஓட்டத் தெரியுமா பாட்டி?’ என்று வியப்புடன் பேச்சை ஆரம்பித்தேன். ‘இல்லைம்மா, பக்கத்தில் உள்ள அம்மா உணவகத்தில் தினமும் ஒரு கேன்…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[9] : ஆராய வேண்டாம், புரிந்துகொள்வோம்! (நம் தோழி)

நேற்று ஓர் ஓட்டல் வாசலில் ஆரஞ்சு கலர் டீ-ஷர்ட்டுடன் கவுண்டரில் பில்லை நீட்டிக்கொண்டு பார்சலுக்காக காத்து நிற்கும் இளைஞர் கூட்டத்தைக் கடந்து வந்தபோது அவர்களில் பெரும்பாலானோர் இன்ஜினியரிங் படித்திருக்கிறார்கள் என்று படித்த செய்தியும் நினைவுக்கு வந்தது. மொபைல் App-ல்  உணவை ஆர்டர் செய்கின்றவர்களுக்கு அவர்கள் சொல்லும் ஓட்டலில் அவர்கள் குறிப்பிடும் உணவை வாங்கி அவர்கள் இருப்பிடத்துக்கே…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[8] : நம் பலத்தை நாம் அறிவோமே! (நம் தோழி)

சமீபத்தில் நடிகை நயன்தாராவை அதே சினிமா துறைச் சார்ந்த ஒரு நடிகர் ஒரு சினிமா  நிகழ்ச்சியில் எதிர்மறையாக விமர்சித்ததை  தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். இது சினிமா துறைச் சார்ந்த பெண்களுக்கு மட்டுமல்ல. எல்லா துறை சார்ந்த பெண்களுக்கும் பகிரங்கமாக நடக்கின்ற நிகழ்வுகளே. இன்று சமூக வலைதளங்களும் மீடியாக்களும் பெருகி தொழில்நுட்ப உச்சத்தில் இருப்பதால் பெரும்பாலானோருக்கு…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[7] : எல்லாவற்றிலும் வெற்றிபெற வேண்டுமா! (நம் தோழி)

ஒரு வேலையை இலக்காக்கிக்கொண்டால் அந்த இலக்கை நாம் பற்றிக்கொள்கிறோமா அல்லது இலக்கு நம்மைப் பற்றிக்கொள்கிறதா என்பதில்தான் இருக்கிறது வெற்றியின் சூட்சுமம். ஒரு நாட்டில் ஒரு ஜென்  குரு இருந்தார். அவர் மிகச் சிறந்த வாள் வீரர். அவரைச் சந்திக்க வந்த புதிய சீடன் ஒருவன், ‘இந்த நாட்டிலேயே மிகச்சிறந்த வாள் வீரனாக வேண்டும்… உங்களால் பயிற்சி…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[6] : உங்களுக்கு யார் பாஸ்! (நம் தோழி)

பலருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதைவிட தானே ஒரு பிசினஸ் தொடங்குவதில் விருப்பம் இருக்கிறது. தவறில்லை. ஆனால் சில புரிதல்களை மனதில் நிறுத்திக்கொண்டுத் தொடங்க வேண்டும். பல வருடங்களாக பத்திரிகை துறையில் பணிபுரிந்த நண்பர் ஒருவர் அவர் மனைவியுடன் சேர்ந்து கேட்டரிங் பிசினஸ் தொடங்கியபோது என்னிடம் அவர் பகிர்ந்துகொண்டவை இன்றும் நினைவில் இருக்கிறது. ‘ஒருவரிடம் கை…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[5] : மனதுக்கும் உண்டு டயட்! (நம் தோழி)

ஒரு சிலரை கவனித்திருக்கிறேன். நன்றாகத்தான் இருப்பார்கள். ஆனால் திடீரென உடல் சோர்ந்து கன்னம் ஒட்டி காட்சியளிப்பார்கள். விசாரித்தால் டயட்டில் இருக்கிறேன் என்பார்கள். டயட்டில் இருந்தால் முன்பைவிட புத்துணர்வாக அல்லவா இருக்க வேண்டும். இப்படி உடல் வற்றிப் போவதற்குக் காரணம், அவர்கள் சரியான டயட்டில் இருப்பதில்லை. காலை டிபனை தவிர்த்தல், மதியம் முற்றிலும் அரிசியைத் தவிர்த்துவிட்டு சப்பாத்தி,…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[4] : ஏக்கத்தில் வளரும் பெண் குழந்தைகள்! (நம் தோழி)

ஏக்கத்தில் வளரும் பெண் குழந்தைகள்! ஒரு தொலைபேசி அழைப்பு. வேலூரில் இருந்து  ஒரு வாசகி பேசுகிறார் என சொல்லி என் உதவியாளர் போனை கனெக்ட் செய்தார். போனில் பேச ஆரம்பித்த பெண் நான் எழுதிய ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ என்ற புத்தகம் குறித்தும், அந்தப் புத்தகத்தில் விவேகானந்தர் கொள்கைகளை என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டு…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[3] : ஆண் தேவதைகளும் பெண் தெய்வங்களும்! (நம் தோழி)

ஆண் தேவதைகளும் பெண் தெய்வங்களும்! ஒரு மேடை நிகழ்ச்சி. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மைக்கில் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் அந்த நிகழ்ச்சிக்கு ஒரு பெண்மணியை சிறப்பு பேச்சாளராக அழைத்தாராம். அதற்கு அந்தப் பெண்மணி வீட்டில் கேட்டுச் சொல்கிறேன் என்று சொன்னாராம். இப்படித்தான் பெண்கள் தங்கள் முடிவை தாங்கள் எடுக்காமல் வீட்டில் கேட்டுச் சொல்கிறேன், கணவரிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon