கனவு மெய்ப்பட[4] – நம் பலம் நம் கையில்தான்! (minnambalam.com)

‘அதிர்ஷ்டக்காரர்கள்’, ‘கொடுத்து வைத்தவர்கள்’, ‘பிக்கல் பிடுங்கள் இல்லை’, ‘பணம் கொட்டிக் கிடக்கு’ – இவை சாதனையாளர்களுக்குக் கிடைக்கும் இலவச பட்டப்பெயர்கள். பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம்போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந்தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும், விடா முயற்சிகளும்தான். இவர்களின் சாகசங்களைப் பார்த்து வயிற்றில் எரிச்சலும் காதில் புகையும் வருபவர்கள் தாழ்வு மனப்பான்மையை கேடயமாக வைத்துக்கொள்வதால் அவர்களை நோக்கி வர இருக்கும் வெற்றியும் உள்ளே வரமுடியாமல் விலகிச் செல்கின்றன. ஏழாம் வகுப்பு…

சேவாலயா விதைப் பிள்ளையார் கொடுத்த கீரை வகைகள்!

உண்மை படக்கதை! செப்டம்பர் 11, 2018: சேவாலயா பிள்ளையார் வீடு தேடி வந்தது. செப்டம்பர் 13, 2018: பிள்ளையார் சதுர்த்தியில்  விதை பிள்ளையாராய் அமர்ந்திருந்த எங்கள் வீட்டு பிள்ளையார். நவம்பர் 19, 2018: விதைப் பிள்ளையார் வளர ஆரம்பித்துவிட்டார்…. சிறுகீரையாகவும், பருப்புக் கீரையாகவும் பச்சைப் பசேல் என… நவம்பர் 28, 2018: ஒரு மணிக்கு எங்கள் அப்பார்ட்மெண்ட் பணிப்பெண் ‘அம்மா பருப்புக்கீரையும், சிறு கீரையும் தொட்டில வளர்ந்திருக்கே… நான் பறிச்சிக்கவா?’…

இங்கிதம் பழகுவோம்[8] பாசத்தைப் பகிரலாமே! (https://dhinasari.com)

சென்ற வாரம் நெருங்கிய உறவினரின் பீமரத சாந்திக்கு (70 வயது நிறைவு) அப்பா அம்மாவுடன் சென்றிருந்தேன்.  வழக்கம்போல தாத்தா பாட்டிகள் என் நலன் விசாரிக்க, என் வயதை ஒத்தவர்கள் ‘செளக்கியமா?’ என்று கேட்டு நகர அப்பா அம்மா முன்னே சென்று அமர என் கையைப் பிடித்து இழுத்து பக்கத்து நாற்காலியில் அமர வைத்தார் ஒரு பாட்டி. முதலில் என் ஆஃபீஸ் பற்றி விசாரித்தவர் அடுத்து தன் வீட்டு விஷயங்களைப் பகிர…

சேவாலயா ஆஸ்ரம குழந்தைகளுடன் பாரதியார் தினம்

இந்தப் புகைப்படங்கள் 10 வருடங்களுக்கு முன் சேவாலயாவில் எடுத்தவை… 1992-ம் ஆண்டில் இருந்து வருடா வருடம் எங்கள் காம்கேரின் COMPCARE DAY – ஐ எங்கள் நிறுவனத்தில் என்னுடன் இணைந்து பணிபுரிபவர்களுடன் இணைந்து அலுவலகத்தில் பூஜை செய்து கொண்டாடிய பிறகு அன்றைய தினம் ஏதேனும் ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று எங்களால் ஆன உதவிகளை செய்து, அவர்களுடனும் எங்கள் நேரத்தை செலவிடுவோம். 2007-ம் ஆண்டுவரை ஒருசில வருடங்கள் சேவாலயாவிற்கும் சென்றிருக்கிறோம். 1988…

‘பாரதி திருவிழா’ / ‘தேசபக்திப் பெருவிழா’

வானவில் பண்பாட்டுமையம் 1994 –ல் இருந்து தொடர்ந்து 24 ஆண்டுகளாக மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறது. இந்த வருடம் மகாகவியின் பிறந்த நாளை வானவில் பண்பாட்டு மையத்தின் வெள்ளிவிழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதன் பொருட்டு டிசம்பர் 8,9,10,11 இந்த 4 நாட்களை ‘பாரதி திருவிழா’ / ‘தேசபக்திப் பெருவிழா’ என்ற கான்செப்ட்டில் நிகழ்ச்சிகளை தயார் செய்துவருகிறார்கள். டிசம்பர் 8,9 – இந்த இரண்டு தினங்கள் சென்னை…

கனவு மெய்ப்பட[3] – தடை உடைப்போம், இலக்கை அடைவோம் (minnambalam.com)

சமீபத்தில் ஆங்கிலத்தில் ‘கௌர் கோபால் தாஸ்’ என்பவரின் தன்னம்பிக்கை உரை வீடியோவை பார்த்தேன். காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் ‘Fresh Vegetables Sold Here’ என்ற விளம்பரப் பலகையுடன் தன் வியாபாரத்தைத் தொடங்கினார். அந்த வழியாகச் சென்ற ஒருவர் வியாபாரியிடம், ‘உங்கள் காய்கறிகள் புத்தம் புதிதாகத் தானே இருக்கிறது. அதற்கு எதற்கு விளம்பரம்… எனவே Fresh என்ற வார்த்தையை எடுத்து விடலாமே’ என்றார். வியாபாரி அப்படியே செய்ய, இப்போது…

இதயம் தொட்ட ‘காற்றின் மொழி’

ஹிந்தியில் வெளியான ‘தும்ஹாரி சூலு’ என்ற படத்தை ரீமேக் செய்து  ‘காற்றின் மொழியாக’ இயக்கியுள்ளார் ராதா மோகன். இந்தத் திரைப்படத்தின் கதாநாயகி ஜோதிகா  +2-வில் தோல்வி. வேலைக்குச் செல்லவில்லை. கணவன்(விதார்த்) , ஒரே மகன்(தேஜஸ் கிருஷ்ணா) என அழகான நடுத்தரக் குடும்பம். சமயோஜமாகப் பேசுவதும், மிமிக்கிரி செய்வதும் நாயகியின் இயல்பு. தான் போகவே போகாத ஹரிதுவார் டூரை உணர்ச்சிப் பூர்வமாய் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் போனில் பேச அதற்கு பரிசும்…

இங்கிதம் பழகுவோம்[7] விருந்தும் கசக்கும்! (https://dhinasari.com)

பெரும்பாலும் 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே நம் எல்லோருக்குமே ஏதேனும் ஒரு காரணத்தால் உடல் உபாதைகள். தீய பழக்க வழக்கங்கள் இருந்தால் 50 வயதில் வரும் உபாதைகள் 30 வயதிலேயே வந்துவிடும். அவ்வளவுதான். உரம் ஏற்றிப் பயிரிடப்படும் காய்கறிகள் உட்பட நாம் சாப்பிடும் அனைத்துப் பொருட்களிலும் இராசயனக் கலப்பிடம். மாசு கலந்த காற்று. தூய்மையில்லாத தண்ணீர். இவற்றுடன் ஏதோ ஒரு காரணத்தால் வீட்டிலும், பணியிடத்திலும், கல்விக்கூடத்திலும் ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸினாலும் இளம்…

எனக்கு ‘தன்னம்பிக்கைத் தாரகை’ விருதளித்த தன்னம்பிக்கைப் பெண்மணி!

டாக்டர் சரஸ்வதி ராமநாதன் அவர்களுக்கு நாளை நட்சத்திரப் பிறந்தநாள். நவம்பர் 19 – பிறந்த தேதியின்படி பிறந்தநாள். வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் மேடம். உங்கள் ஆசியை வேண்டி உங்கள் குறித்த சில நினைவலைகள்…. டாக்டர் சரஸ்வதி ராமநாதன்… தமிழுக்காகவே உலகம் முழுவதும் சென்று தமிழ் பரப்பி  முத்தமிழ் பேரரசி என்ற பட்டம் பெற்றவர். எங்கள் காம்கேர் நிறுவனம் வெளியிட்ட இராமாயணம் அனிமேஷன் சிடியில் கதை சொல்லி வாய்ஸ் கொடுத்து சிறப்பித்தவர். மேலும்…

ராஜத்தில்… ‘அம்மா பொய் சொல்கிறாள்’ (ஆகஸ்ட் 1990)

ராஜம் மாத இதழில் ‘அம்மா பொய் சொல்கிறாள்’! கல்லூரி காலத்தில் பல்வேறு பத்திரிகைகளில் நான் எழுதிய 100-க்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றைத் தொகுத்து புத்தகமாக்கும் முயற்சியில்… முதலில் லே அவுட் ஆன கதை கலைமகளில் ‘வேரை விரும்பாத விழுதுகள்’. இரண்டாவதாக சாவியில் பரிசு பெற்ற கதை ‘நியதிகள் மாறலாம்’ மூன்றாவதாக நேற்று லே அவுட் ஆன கதை ‘மயக்கம்’. நான்காவதாக நேற்று லே அவுட் ஆன…

error: Content is protected !!