குமுதத்தில் ‘இந்த வார சிறந்த புத்தகம்’ – இ-காம்ர்ஸ் (டிசம்பர் 2001)

2001 – ல் நம் நாட்டில் இன்டர்நெட் கொஞ்சம் கொஞ்சமாக நடை பயில ஆரம்பித்த காலத்திலேயே இ-காமர்ஸ் என்ற தொழில்நுட்ப புத்தகத்தை எழுதியிருக்கிறேன். இது நான் எழுதிய  இரண்டாவது புத்தகம். இன்று நான் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை 120-ஐ தாண்டியுள்ளன. இந்த புத்தகத்துக்கான விமர்சனம் குமுதம் வார இதழில்,  2001 -ம் ஆண்டில்! ‘இந்த வார…

இங்கிலாந்தின் நன்கொடை சகோதரி நிவேதிதை (விகடன் தீபாவளி மலர் 2016 )

இந்தியாவின் நன்கொடை சகோதரி நிவேதிதை ‘வாயாடி’, ‘அதிகப்பிரசங்கி’ – இவைதான் ஏன், எதற்கு என்று அதிகம் கேள்விகள் கேட்கும் மாணவிகளுக்குக் கிடைக்கும் பட்டப்பெயர்கள். ஆனால், ஒரு சிஷ்யை கேட்ட பல சிக்கலான கேள்விகளுக்கு அவரது குரு பொறுமையாக விளக்கம் கொடுத்து, அவர் போக்கில் விட்டு, இறுதி முடிவை அவரிடமே ஒப்படைத்து விட்டிருக்கிறார். மேலும், எதிர்க்கருத்தைக் கூறுகிறார், …

நோ காம்ப்ரமைஸ்

தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்! சில மாதங்களுக்கு முன்னர் மின்னம்பலம் டாட் காமில் நான் எழுதிவந்த ‘கனவு மெய்ப்பட’ என்ற கட்டுரைத் தொடரில் No Compromise என்ற கட்டுரையை எழுதி இருந்தேன். அதில் தங்கள் கொள்கைகளை எதற்கும் காப்ரமைஸ் செய்துகொள்ளாமல் சிறப்பாக செயல்பட்டுவரும் வெவ்வேறு துறைசார்ந்த…

யசோதையின் கண்ணன் – சிறுகதைத் தொகுப்பு

சிறுகதைத் தொகுப்பு – யசோதையின் கண்ணன் கதையாசிரியர்: கமலா நடராஜன் பதிப்பகம்: காயத்திரி பதிப்பகம் (044-24898162) ‘யசோதையின் கண்ணன்’ என்ற சிறுகதை தொகுப்பின் பெயரே ஈர்ப்பாக இருக்க, அந்தக் கதையையே முதல் கதையாக எடுத்துப் படித்தேன். ஒரு சினிமா எடுக்கும் அளவுக்கு கருத்தும் கற்பனையும் நிறைந்த பாசமும் பரிதவிப்பும் கலந்த ஒரு நெடும் நாவலை கதையாக்கியுள்ள…

குங்குமம் குழுமத்தில்! மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடதிட்டமாக! (JULY 25, 2019)

சென்னை பல்கலைக்கழகம்,  அண்ணா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி  பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம்  இவற்றைத் தொடர்ந்து இப்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி…. நான் எழுதி சூரியன் பதிப்பகம் வாயிலாக வெளிவந்த ‘கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் கலக்கலாம் தமிழில்’ என்ற நூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட தன்னாட்சிக் கல்லூரியான சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின்…

தாய்மொழி அத்தனை கஷ்டமா?

தாய்மொழி அத்தனை கஷ்டமா? கம்ப்யூட்டரில் C மற்றும் C++ என இரட்டை மொழிகள் ரொம்ப ‘பிரபலம்’. இதை தொழில்நுட்பத் துறையில் பணியில் இருப்பவர்கள் நன்கறிவர். இந்த இரண்டு மொழிகளில் புலமைப் பெற்றிருந்தால் தொழில்நுட்பத்தில் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம். ஜாவா, டாட் நெட், சி ஷார்ப் டாட் நெட், ஏ.எஸ்.பி டாட் நெட், விபி டாட்…

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்!

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் நூலாசிரியர்கள் – பிரியசகி; ஜோசப் ஜெயராஜ் ச.ச. ‘டிஸ்லெக்சியா’ என்ற கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நூல் கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல் பெற்றோர்களுக்கும் பேருதவியாக இருக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. புத்தகத்தை தன்னம்பிக்கை சொட்ட சொட்ட எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு எழுத்தும் நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த புத்தகத்தில்…

‘கோடு’ ஓவியக்கூடம்!

‘கோடு’ ஓவியக்கூடம்! ஓவியத்துக்கு மிக நெருக்கமான பெயர். வேளச்சேரி 100 அடி ரோடில் அண்மையில் திறந்துள்ளார் திரு. சீராளன் ஜெயந்தன். இன்று இந்த ஓவியப் பள்ளிக்கு நேரில் சென்றிருந்தேன்.  பல்வேறு ஓவியர்களின் கைவண்ணத்தில் ஓவியங்களை காட்சிப்படுத்திய கண்காட்சியுடன் தொடங்கியுள்ளார். ஓவியக்கூடம் கலைநயத்துடன் பல்வேறு வண்ணக்கலவைகளால் சரஸ்வதி கடாக்ஷத்துடன் காட்சியளிக்கிறது. பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் பழகுவதற்கும் எளிமையான மனிதராக…

மனோ தைரியம்!

சரியானதை யோசிப்பவர்… தனக்குப் பிடித்த வேலையை செய்பவர்… தன் மனசாட்சிக்கு சரியெனப்படுவதை பேசுபவர்… மாயவரத்தான் கி ராமேஷ்குமார்… இவரும் என் சகோதரனும் பி.எஸ்.ஸி படித்தபோது நான் எம்.எஸ்.ஸி முதலாம் ஆண்டில்… நாங்கள் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி மாணவர்கள்! என் சகோதரன் வயதை ஒத்த இவருக்கு பைபாஸ் சர்ஜரி என்றதும் கொஞ்சம் அதிர்ந்தேன்! புகை, மது என…

தேவைப்பட்டால் காதுகளையும் மூடிக்கொள்ளலாம்!

தேவைப்பட்டால் காதுகளையும் மூடிக்கொள்ளலாம் தேசிய தொழில்நுட்ப தினம் – National Technology Day மே 11, 2019 1992 – ல் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்த காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகபட்சம் இரண்டே இரண்டு வாய்ப்புகள்தான். ஒன்று திருமணம். மற்றொன்று ஆசிரியர் பணி. அதில் உச்சமாக ஒருசிலர் பள்ளி / கல்லூரி தலைமையாசிரியர்களாகவும் /…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon