
ஸ்ரீபத்மகிருஷ் 2017 – ஸ்க்ரைப் சாஃப்ட்வேர், கணினியில் பார்வையற்றோர் தேர்வெழுதும் முறை குறித்த கருத்தரங்கம்
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இன்று கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டை ‘திரையைப் படிக்கும் சாஃப்ட்வேர்கள்’ (Screen Reading Software) மூலம் திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள். ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் NVDA இதற்கு பெருமளவில் உதவி செய்து வருகிறது. ஸ்க்ரைப்களின் உதவியுடன் தேர்வு எழுதுவதுதான் இவர்களின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. முன்பெல்லாம் பணிக்குச் செல்லாத தொண்டுள்ளம் கொண்ட பெண்கள்தான்…

ஸ்ரீபத்மகிருஷ் விருதுகள்
ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை செப்டம்பர் 2, 2007 அன்று, எங்களது பெற்றோர் திருமதி கே. பத்மாவதி, திரு வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 40-ஆவது திருமண நாள் அன்று தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் துவக்க நாளை ‘பெருமைமிகு பெற்றொர் தினம்- Ideal Parents Day என்று பெயர் சூட்டி, முத்தமிழ்ப் பேரரசி டாக்டர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பு…

ஸ்ரீபத்மகிருஷ் 2016 – ‘அம்மா, என்னைப் பெற்றெடுக்கும்போது நீ என்ன மாதிரியான உணர்வில் இருந்தாய்?’
ஸ்ரீபத்மகிருஷ் – எங்கள் பெற்றோர் திருமிகு. பத்மாவதி, திரு. கிருஷ்ணமூர்த்தி பெயரில் 2007 –ல் இருந்து நாங்கள் நடத்திவரும் அறக்கட்டளை. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக உதவிவரும் இந்த அமைப்பின் வாயிலாக சூழலுக்கு ஏற்ப பல்வேறுதரப்பு மக்களுக்கும் எங்களால் ஆன உதவிகளை செய்து வருகிறோம். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தரப்பினருக்கு (பெற்றோர், ஆசிரியர், ஓவியர்கள், எழுத்தாளர்கள்) என்று திறமைசாலிகளைத்…

ஸ்ரீபத்மகிருஷ் 2015 – நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை
சென்னை மாவ நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் அனைத்து நூலகங்களையும் பள்ளி, கல்லூரி சேர்ந்த மாணவ / மாணவியரும் மற்றும் பொதுமக்களும் நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றனர். காம்கேர் பப்ளிகேஷன் வாயிலாக காம்கேர் கே.புவனேஸ்வரி எழுதிய Blog வடிவமைப்பது எப்படி? என்ற புத்தகத்தை ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை வாயிலாக சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் அனைத்து…

ஸ்ரீபத்மகிருஷ் 2015 – இயற்கைக்கு மரியாதை
ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம், 13-12-2015, ஞாயிறு அன்று வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை பள்ளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாம்புகளைப் பிடிக்கும் தொழிலைச் செய்கின்ற இருளர் சமூகத்தைச் சார்ந்த 200 குடும்பங்களை ஒருங்கிணைத்தோம். வருண பகவானுக்கான ஒரு சிறிய ஸ்லோகத்துடன் ஆரம்பித்து 10 நிமிடங்கள் அந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினேன். அத்தனை கஷ்டத்திலும் அவர்கள்…

ஸ்ரீபத்மகிருஷ் 2014 – திரையை படிக்கும் சாஃப்ட்வேர் பயிலரங்கம்
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் ஆண்டு விழாவை ஒட்டி, விவேகானந்தரின் பொன்மொழிகள் மற்றும் அறிவுரைகளின் அடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக, காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனமும், ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து சிறப்புக் கட்டுரைப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். இந்தப் போட்டியில், சென்னை, மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் உறைவிடஉயர்நிலைப் பள்ளி மாணவர்களும், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டார்கள். அந்த…

ஸ்ரீபத்மகிருஷ் 2013 – Trust With Kids
2013 -ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, அமெரிக்காவில் வசித்து வரும் என் சகோதரியின் பெண் அக்ஷயாஸ்ரீயின் பிறந்த நாளை, அவ்வை இல்லத்து 30 பெண் குழந்தைகளுடன் Trust with Kids என்ற சிறப்பு நிகழ்ச்சியாக குரோம்பேட்டை பாலாஜி பவன் கான்ஃபரன்ஸ் ஹாலில் கொண்டாடினோம். அதாவது, முப்பது குழந்தைகளும் 30 தீபங்களை ஏற்றி…

ஸ்ரீபத்மகிருஷ் 2012 – திருக்குறள் ஒலி ஓவியம் பார்வையற்றோருக்கான சிறப்புரை
ஓலைச் சுவடியில் எழுதப்பட்டத் திருக்குறள், தொழில்நுட்பம் வளர வளர அதற்கேற்ப, புத்தகங்களில் அச்சு வடிவிலும், ஒலி வடிவில் ஆடியோவாகவும், ஒலி-ஒளி வடிவில் மல்டிமீடியா அனிமேஷன்களாகவும், இன்டர்நெட்டில் வெப்சைட்டுகளாகவும் வளர்ந்து இன்று புதுமையான வடிவம் பெற்று புதுப்பொலிவுடன் திகழ்கிறது. எந்த ஒரு தொழில்நுட்பமும் சமுதாயத்தின் கடைநிலையில் இருக்கின்ற மனிதனைச் சென்றடையும் போது தான் அது முழுமையான வெற்றி…

ஸ்ரீபத்மகிருஷ் 2011 – ‘தானே’ புயல் நிவாரணம்
2011 டிசம்பர் மாதம் வங்கக் கடலில் உருவாகி, வலுவடைந்துள்ள ‘தானே’ புயல் காரணமாக, சென்னை, திருவள்ளுர், நாகை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. கட்டிடங்கள், மரங்கள், மின் விநியோகக் கட்டமைப்பு என பலவற்றிலுமாக ஏராளமான பொருட்சேதங்களுடன் உயிர் சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன. பிடுங்கியெறியப்பட்ட மரங்கள்…

ஸ்ரீபத்மகிருஷ் 2010 – விவேகானந்தர் பிறந்த நாள் விழா
ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை, தேசிய இளைஞர் தினமான விவேகானந்தரின் பிறந்த நாளை ஒட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்காக ‘இயற்கையை காப்பாற்றுவோம் – பூமி வெப்பமயமாவதை தடுப்போம்’ என்ற சிறப்பு கட்டுரைப் போட்டியை 7, ஜனவரி 2010 அன்று நடத்தியது. ஜனவரி மாதம் 12-ம் தேதி மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், இப்போட்டியில்…