#மலேசியா: மலேசியாவும், அரசியலும்!
மலேசியாவும், அரசியலும்! மலேசிய பயணத்தில் ஒரு இஸ்லாமிய பெண் தான் வாழ்க்கையில் முன்னுக்கு வந்ததை, தன்னம்பிக்கையாக வளர்ந்ததை, சுயதொழில் முனைவராக உயர்ந்ததை எல்லாம் உணர்ச்சிப் பெருக்குடன் சொல்லிக் கொண்டே வந்தார். அவர் பெற்றோர், உற்றார், உறவினர், கணவர் வீட்டில் இப்படி எல்லோருக்கும் புரிய வைக்க பிரம்மப் பிரயத்தனப்பட்டு, அப்படியே புரிந்துகொள்ளாவிட்டாலும் அதை பெரிதுபடுத்தாமல் தன் வழியில்…
மலேசியா: யார் அந்தப் பெண்?
யார் அந்தப் பெண்? மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட 500 பேர்கள் கலந்து கொண்டார்கள். மாநாடு ஜூலை 21 முதல் 23 வரை. ஆனால் மாநாட்டுக்கு 2 நாட்கள் முன்னதாகவே மலேசியாவில் இருக்கும்படி உள்ளூர் சுற்றுலாவுக்காக அனைவரையும் ஒருங்கிணைத்திருந்தார்கள். சென்னையில் இருந்து குழு குழுவாக சிறப்பு விருந்தினர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும்…
#மலேசியா: நல்லவைப் பெருக!
நல்லவைப் பெருக! மலேசியாவில் நடைபெற்ற 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டபோது அங்குள்ள சில பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் என்னிடம் சிறு நேர்காணல் செய்து ஒலி(ளி) பரப்பினார்கள். இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே சென்னையைச் சார்ந்த லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை ஆசிரியர் உயர்திரு கிரிஜா ராகவன் என்னை வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டறிந்து…
#மலேசியா: ‘லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகை (August 2023)
-லேடீஸ் ஸ்பெஷல்- பத்திரிகையிலேயே படிக்க இங்கு கிளிக் செய்யவும்! உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்ட சாஃப்ட்வேர் கம்பெனி முதலாளி காம்கேர் நிறுவனர் காம்கேர் கே. புவனேஸ்வரி (கொண்டாடி மகிழ்ந்த ‘லேடீஸ் ஸ்பெஷல்’ மாத இதழ்) ஜுலை 21 முதல் 23 வரை மலேசியாவில் நடைபெற்ற 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொழில்நுட்பம் குறித்து பேசுவதற்கு…
#மலேசியா: மலேசிய நாட்டு மீடியாக்கள் (July 21, 2023)
மீடியா செய்திகள்! 2023 ஜூலை 19-23 வரை மலேசியாவில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொழில்நுட்பத் துறை சார்ந்து ’அசத்தும் Ai, மிரட்டும் Metaverse, இனி நடக்கப் போவது என்ன?’ என்ற தலைப்பில் உரையாற்றிய காம்கேர் கே. புவனேஸ்வரியின் நேர்காணல் மலேசியா நாட்டு மீடியாவில்!
#மலேசியா: உணவும், சுயகட்டுப்பாடும்!
உணவும், சுயகட்டுப்பாடும்! காலை வழக்கம்போல் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, காபி குடித்துவிட்டு லேப்டாப்பை ஆன் செய்தபடி வாட்ஸ் அப் பார்த்தேன். நேற்று இரவு 10.15 மணிக்கு ஒரு வாட்ஸ் அப் தகவல் இலக்கியாவிடம் இருந்து. அவர் அனுப்பி இருந்த தகவல் மகிழ்ச்சியாக இருந்தது. இருக்காதா பின்னே? என் எழுத்து அவருக்குள் உண்டாக்கிய தன்னம்பிக்கையை அவர் உணர்ந்து…
#மலேசியா: உணவு!
உணவு! உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக நம் நாட்டில் இருந்து மலேசியா சென்றவர்களுக்கு அங்கிருந்த ஐந்து நாட்களும் உணவுக்கு எந்த குறையுமில்லை. வேளா வேளைக்கு விதவிதமான சுடச்சுட உணவு. அதற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இந்தியக் கிளை பொறுப்பேற்றிருந்தது. நான் யாரையும் குறை சொல்லவில்லை. தாழ்வாகவும் எண்ணவில்லை. உணவு என்பது அவரவர் விருப்பம். அவரவர்…
#மலேசியா: பிரமாண்ட மேடையில் கெளரவம்!
பிரமாண்ட மேடையில் கெளரவம்! 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை மலேசியா நாட்டுப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்தார். மாநாட்டின் நிறைவு விழாவில் மலேசியா துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, மலாயாப் பல்கலைக்கழகம் துணைவேந்தர், மலாயாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இராஜேந்திரன் போன்றோர் வீற்றிருக்கும் மேடையில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக…
#மலேசியா: மாநாட்டின் நிறைவு நாள்!
மாநாட்டின் நிறைவு நாள்! 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2023 ஜூலை 21 முதல் 23 வரை மிக சிறப்பாக கோலாகலமாக மலேசியாவில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் அமர்க்களமாக நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (International Association of Tamil Research) செயலாளர் நந்தன் மாசிலாமணி அவர்களின் பங்களிப்பு அளப்பறியது….