‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’ – முதல் ஆவணப் படம்

செப்டம்பர் 2, 2007. தி.நகர் வாணிமஹாலுக்கு காரில் நானும் அப்பா அம்மாவும் பயணித்துக்கொண்டிருந்தோம். ஒரு நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். பெற்றோரையும் அழைத்துவர வேண்டும் என்று வற்புறுத்தியிருந்தார்கள். வாணி மஹால் வந்தடைந்தோம். அப்பா காரை பார்க் செய்ய, எனக்கு ஒரு போன்கால் வரவே, ‘இதோ ஸ்பாட்டில்தான் இருக்கிறோம். இன்னும் சில நொடிகளில் அங்கிருப்போம்’ எனச் சொல்லி, நிகழ்ச்சி நடக்கின்ற ஹாலுக்குச் சென்றோம். ஹால் கும்மிருட்டாக இருந்தது. நாங்கள் குழம்பி…

‘சரஸ்வதி பீடத்தின் சர்வகலா வாணி’ – விருது

  பிப்ரவரி 6, 2005. வாழ்க்கையில் எனக்கு ஒரு பொன்னான நாள். அன்றுதான் குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் புகழை ஒத்த ஒரு விருது எனக்குக் கிடைத்தது. என் நிறுவனத்தில் என்னுடன் இணைந்து பணிபுரிபவர்கள் (Employees) எனக்கு ‘சரஸ்வதி பீடத்தின் சர்வகலாவாணி’ என்று பட்டமளித்து கெளரவித்தார்கள். முதன் முதலில் என் நிறுவனத்தில் எனக்குத் தெரியாமல் அனைவரும் சேர்ந்து ‘சர்ப்ரைஸாக’ ஒரு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று நான்…

மேடம் அப்பா மாதிரிடா…

எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் இருக்கும் இந்த நேரத்தில், எனக்கு எத்தனையோ வாழ்த்துக்களும், விருதுகளும், கெளரவங்களும் கிடைத்திருந்தாலும், ஒரு பெண்மணியின் ‘நம்பிக்கையும், புரிதலும்’ மனதை விட்டு அகலாமல் நான் இன்றுவரை மென்மேலும் சிறப்பாக செயல்பட உதவி வருகிறது. யார் அந்தப் பெண்மணி? தந்தையர் தினத்துக்கான ரேமாண்ட் நிறுவனத்தின் வாழ்த்து வீடியோ ஒன்றை எதேச்சையாகப் பார்த்தேன். ஒரு நிமிட வீடியோதான். அற்புதம். விவரிக்க வார்த்தை இல்லை. தன் சின்னஞ்சிறு மகனுடன்…

error: Content is protected !!