அன்பெனும் கூட்டில் நாமோர் அங்கமே, நாமே கூடல்ல!
அன்பெனும் கூட்டில் நாமோர் அங்கமே! நேற்று எங்கள் காம்கேரில் தயாரித்த Ai சாஃப்ட்வேர் வாங்கிய ஒரு கிளையிண்ட், ஏற்கெனவே என்னை அறிந்தவர், என்னை பெருமைப்படுத்துவதாக நினைத்து சிலாகித்துப் பேசினார். ‘நீங்கள் உங்கள் அப்பா அம்மா உங்களுடன் இருக்கிறார்கள்… அவர்களை நீங்கள் வைத்து காப்பாற்றுகிறீர்கள்… எத்தனை பெரிய விஷயம்… இந்தக் காலத்தில் இதெல்லாம்… ரொம்ப பெருமையா இருக்கு…’…
ஒரு சிறுதுளியில் பெருங்கடல்!
ஒரு சிறுதுளியில் பெருங்கடல்! பிப்ரவரி மாதம் (2024) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு தொழில்நுட்பக் கருத்தரங்கில் தலைமை ஏற்று Ai குறித்து சிறப்புரை ஆற்ற அழைத்திருந்தார்கள். ‘ராஜமரியாதை’ என்பார்களே அதுபோன்றதொரு வரவேற்பு. மிக மிக கெளரவமாக நடத்தினார்கள், பழகினார்கள். அவர்களின் மரியாதையும், அன்பும், பண்பும் வியக்க வைத்தன. இரண்டு நாட்கள் பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுஸில்…
பாரதியும், விவேகானந்தரும், கிருஷ்ணரும்!
பாரதியும், விவேகானந்தரும், கிருஷ்ணரும்! சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் எங்கள் காம்கேர் நிறுவனம் தொடங்கிய புதிது. படித்து முடித்து சென்னை வந்த புதிதும் கூட. ப்ராஜெக்ட்டுகளுக்காக நிறைய பேர் நேரில் சந்திக்க வருவார்கள். 24 மணி நேரமும் கனவிலும் நனவிலும் ப்ராஜெக்ட்டுகள், லாஜிக்குகள், தீர்வுகள் என காம்கேர் குறித்த சிந்தனைதான். இப்போதும் அப்படித்தான். அப்போதெல்லாம் ஒரு…
ஆஹா ஆசுவாசம்!
ஆஹா ஆசுவாசம்! இப்போதெல்லாம் ‘இது கூடவா தெரியாமல் இருக்கும்?’ என்று மேன்மையாக யோசித்து, ‘இதுவும் தெரியாமல் இருக்கலாம்’ என ஜாக்கிரதையாக சிந்தித்து இரண்டுக்கும் இடையில் மனதை பண்படுத்தி அவர்களுக்குத் தோதாக இன்புட்டுகளை கொடுத்து தட்டிக் கொடுத்து செயல்பட வேண்டி உள்ளது. ஒரு பிரிண்ட்டிங் பணிக்காக சென்னையிலேயே மிகப்பெரிய அச்சகத்தாருடன் மல்லு கட்டிய பொழுதில் உதித்த பொன்…
விருதுகளும், தேர்வாளர்களும்!
விருதுகளும், தேர்வாளர்களும்! தொழில்நுட்பப் புத்தகங்களை விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உள்ளவர்கள் அந்தத் துறையில் ஒரு துளியும் அப்டேட் ஆகாதவர்களாக இருப்பதும், அவர்கள் அந்த நூலாசிரியரை மதிப்பிடும் முறையை நினைத்தும் பலமுறை சினம் கொண்டதுண்டு. (மனதுக்குள்தான்) சில வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய ‘போட்டோஷாப்’ புத்தகம் ஒரு சேவை நிறுவனத்தில் விருதுக்குத் தேர்வாகியது. அந்தக் குழுவில் இருந்தவர்தான்…
நிதர்சனங்களும், அபத்தங்களும்!
நிதர்சனங்களும், அபத்தங்களும்! என்னையும் காம்கேரையும் 25, 30 வருடங்களுக்கு முன் அறிந்தவர்கள், என்னைப் பற்றியோ (காம்கேர் புவனேஸ்வரி) பற்றியோ அல்லது எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் பற்றியோ எதையுமே அப்டேட் செய்துகொள்ளாமல், நீண்ட காலத்துக்குப் பிறகு என்னை சந்திக்கவோ அல்லது போனில் பேசவோ செய்பவர்கள் ‘நீங்க காம்கேர்ன்னு ஒரு வச்சிருந்தீங்களே…. அது இருக்கா… மூடிட்டீங்களா’ அப்படின்னு…
Ai என்பது அனிமேஷனா?
Ai என்பது அனிமேஷனா? நங்கநல்லூரில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று. காம்கேரில் நாங்கள் அனிமேஷன் சிடிக்கள் விற்பனை செய்து வந்த சமயம் அவர்களிடமும் விற்பனைக்குக் கொடுப்போம். சிடிக்கள் காலம் முடிந்த பிறகு பெரிய அளவில் தொடர்பில் இல்லை. எங்கள் குடும்ப நிகழ்ச்சிக்காக சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது. அப்பாதான் மாடல் அனுப்பி…
விஞ்ஞான கண்டுபிடிப்புகளும், சமூக வலைதளங்களும்!
பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ரிலாக்ஸ்டான மனநிலையில் இருக்கும்போதுதான் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும், நம் வியாபாரத்துக்கு எப்படி சமூக வலைதளங்களை பயன்படுத்தலாம் என்பதையும் ஒரு ஜென் கதை மூலம் விளக்கி இருக்கிறேன், 10 ஆண்டுகளுக்கு முன்பே, மக்கள் தொலைக்காட்சியில். இந்த நிகழ்ச்சி குறித்து, இரண்டு தினங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தேன். இது நான் நிகழ்த்திய 2500 க்கும்…
நல்லதை விதைக்கத் தவறினால்!
தி கேரளா ஸ்டோரி! – திரைப்படம் வெளியாகி மிகத் தாமதமாகவே பார்த்தேன் நேற்று. ஒவ்வொரு காட்சியும் பதபதைக்க வைக்கிறது. ‘குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், நல்லபடியாக ஆளாக்குங்கள்’ என்று மட்டுமே சொல்ல முடிகிறது. நாம் நம் இருப்பிடத்திலும், நம்மைச் சுற்றியும் நமக்குத் தேவையான நல்லவற்றை, நல்ல ஒழுக்கத்தை நாம் விதைக்கவும் பரப்பவும் பாதுகாக்கவும் தவறினால், மற்றவர்கள்…
வாயாடி என சொல்லாதீர்கள், குரல்வளையை நசுக்காதீர்கள்!
வாயாடி என சொல்லாதீர்கள், குரல்வளையை நசுக்காதீர்கள்! ஒரு குடும்ப நிகழ்வு. வயது வித்தியாசமின்றி சிறியவர் பெரியவர் என அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். 70 வயது தாத்தா ஒருவர், மூன்றாம் வகுப்புப் படிக்கின்ற சுட்டியிடம் விளையாட்டாக ‘என்னை கல்யாணம் பண்ணிக்கறியா?’ என வேடிக்கையாக கேட்டார். அதற்கு அந்த சிறுமி, ‘ஏன் பாட்டி அழகாகத் தானே இருக்கா?’…