
செளக்கியமாக வாழ்பவர்களுக்கு கருணையேஇருக்காதா என்ன?
செளக்கியமாக வாழ்பவர்களுக்கு கருணையேஇருக்காதா என்ன? இவர் தமிழில் சாஃப்ட்வேர் உருவாக்கியதில் முதன்மையானவர்களுள் ஒருவர் என்றால்… அப்போ, இவர் தமிழ் மீடியம் போல…. இவர் சைபர் க்ரைமுக்காக புத்தகங்கள் எழுதியும் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தியும் வருகிறார் என்றால்… அப்போ, இவங்களும் டிஜிட்டல் உலகில் நிறைய பாதிக்கப்பட்டிப்பாங்க போல… என்று எண்ணும் எல்.கே.ஜி மனோபாவம் எப்போது மாறும் என…

எல்லாமே சூப்பர்தான்!
எல்லாமே சூப்பர்தான்! ஒரு நிகழ்ச்சிக்காக நான் தயாரித்த வீடியோக்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து அனுப்பக் கேட்டிருந்தார்கள். நானும் குவிந்திருக்கும் என் வீடியோக்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துப் பார்க்கிறேன். இரண்டே இரண்டு ரிசல்ட் தான் கிடைக்கிறது. 1. எல்லாமே சூப்பராக இருப்பதைப் போல் இருக்கிறது. 2. எல்லாமே இன்னும் நன்றாக செய்திருக்கலாம் போல் இருக்கிறது. ஒரு வழியாக…

#கவிதை: நினைத்ததை கேட்கும் காதுகள்!
நினைத்ததை கேட்கும் காதுகள்! சிவன் கோயிலின் நந்தியின் காதில் நான்கைந்து வயதிருக்கும் குட்டி தேவதையை தூக்கிக் காண்பித்த ஒரு பாட்டியும் உடன் நின்றிருந்த அம்மாவும் ‘பெயரோடும் புகழோடும் இருக்கணும்னு வேண்டிக்கோ செல்லம்’ என்றார்கள்! நான் தன்னிச்சையாக மனதுக்குள் ‘குணத்துடனும், நல்ல உடல் நலனுடனும் இருக்கணும்னு சேர்த்து வேண்டிக்கோ கண்ணம்மா!’ என்றேன்! நான் மனதுக்குள் நினைத்தது அந்தக்…

ஃபேண்டசி நம்பிக்கைகள்!
ஃபேண்டசி நம்பிக்கைகள்! ‘நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா… இப்படிச் செய்யுங்கள்’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ பார்த்தேன். வெற்றிலையை நன்கு சுத்தமாக்கி, மஞ்சளை கரைத்து வைத்துக்கொண்டு தீக்குச்சியினால் மஞ்சளைத் தொட்டு தொட்டு வெற்றிலையில் விரும்பியதை சுருக்கமாக எழுதி சுவாமி முன் வைத்து வேண்டிக்கொண்டு அந்த வெற்றிலையை சுருட்டி நம் பையில் வைத்துக்கொண்டு சென்றால் நினைத்த காரியம்…

துஷ்டரைக் கண்டால் மட்டும் அல்ல!
துஷ்டரைக் கண்டால் மட்டும் அல்ல! நாம் சந்திக்கும் நபர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவரைப் பார்த்ததும் அப்பாவாக அம்மாவாக நினைக்கத் தோன்றுவதும், தோன்றாததும் அவரவர் இயல்பு. அப்படியே தோன்றினாலும் அப்பா, அம்மா என்று அழைத்துத்தான் அந்த பாசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. ஃபேஸ்புக்கில் வயதில் மூத்த ஒருசிலர் என் பதிவுகள் குறித்து இன்பாக்ஸுக்கு சாட்டில் …

சுழல்!
சுழல் – வெப்சீரிஸ்! ஒவ்வொர வருடமும் மாசி அமாவாசை அன்று மயானக் கொள்ளை திருவிழாவை அங்காள பரமேஸ்வர ஆலயங்களில் விமரிசையாக கொண்டாடுவார்கள். ஒரு கிராமத்தில் நடைபெறும் அந்த நிகழ்வையும், ஒரு இளம் காதல் ஜோடியின் மரணத்தையும், அந்த கிராமத்தின் வருமானத்துக்கு வழிவகுத்து வரும் ஒரு தொழிற்சாலை தீப்பிடித்து நாசமான சம்பவத்தையும் மிக அழகாக இணைத்து வெப்…

#கதை: அவனும் அவன் அம்மாவும் பின்னே ஒரு புத்தகக்கண்காட்சியும்!
அவனும் அவன் அம்மாவும் பின்னே ஒரு புத்தகக்கண்காட்சியும்! அது ஒரு புத்தகக் கண்காட்சி போல் இருக்கிறது. அவள் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி புத்தகங்களை பார்த்துவிட்டு இறங்கும்போது ஒரு கடையில் ஒரு சிறுவன் அவன் அம்மாவின் இடுப்பைவிட்டு இறங்காமல் அடம்பிடித்துக்கொண்டே வருகிறான். அவனுக்கு ஏழெட்டு வயதிருக்கலாம். ஆனால் வளர்த்தி அதிகம். அவன் அம்மாவினால் தூக்கவும் முடியாமல்…

#கவிதை: அப்பாக்களின் பரிதாபங்கள்!
அப்பாக்களின் பரிதாபங்கள்! நிகழ்ச்சிகளில் எண்பதை நெருங்கும் அல்லது எண்பதைத் தாண்டிய அப்பாக்களுக்குத்தான் எத்தனை சந்தோஷம் தன்னை மட்டும் பிரத்யோகமாக கவனித்து புகைப்படம் எடுப்பவர்களைப் பார்த்து… புகைப்படம் எடுத்தவரிடம் எம் பொண்ணு / எம் பையன் அதோ இருக்காள் / இருக்கான் பாருங்கள்… அவளிடம் / அவனிடம் காண்பியுங்கள் என்று கண்கள் சிரிக்க சொல்லும் போது கொஞ்சம்…

மெல்லப் பரவி வரும் கொரோனாவின் அடுத்த அலை!
மெல்லப் பரவி வரும் கொரோனாவின் அடுத்த அலை! விருந்து விசேஷங்கள் என களைக்கட்டத் தொடங்கி இருக்கும் நேரமிது. கொரோனா காலத்துக்குப் பிறகு குடும்பங்களும் உறவுகளும் குதூகலமாக சந்திக்கும் வைபவமாகவும் மாறி வருகிறது. சந்தோஷமாகத்தான் உள்ளது. ஆனாலும் கொரோனா இன்னும் முழுமையாக ஓடவும் இல்லை. ஒளியவும் இல்லை. நம்முடன்தான் பயணிக்கிறது என்பதை நினைவில் கொண்டு சில விஷயங்களை…

அக்னிபத் – சந்தேகங்களும் விளக்கங்களும்!
Disclaimer ‘அக்னிபத்’ மற்றும் ‘அக்னி வீரர்கள்’ குறித்த இந்தக் கட்டுரையில் நான் சொல்லி இருக்கும் கருத்துக்கள் அனைத்தும் தொலைக்காட்சி, பத்திரிகை செய்திகள் மற்றும் அரசு சார்பில் வெளியிடப்படும் செய்திகள் மற்றும் அவர்களின் பிரத்யோக இணையதளம், சமூகவலைதள செய்திகள் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்தக் கட்டுரையின் சாராம்சம் எதுவும் என் சொந்தக் கருத்தல்ல. கற்பனையும் அல்ல. எனக்குத் தெரிந்த…