கனவு மெய்ப்பட[9] – பழக்கம்: பிடிவாதமும் நெகிழ்வும்! (minnambalam.com)

சிரிப்பு யோகா சொல்லிக்கொடுக்கும் நண்பர் சிரிப்பானந்தா அவர்களின் சமீபத்திய ஃபேஸ்புக் பதிவைப் படித்தேன். எய்ட்சால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்கு சிரிப்பு யோகா சொல்லிக்கொடுக்கும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்த நண்பர்,  நிகழ்ச்சி முடிந்ததும் அவரிடம் ரகசியமாக வந்து ஒரு பாக்கெட்டைக் கொடுத்ததாகவும், அது  ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி, ஒருமுறை சாப்பிட்டால் பின்பு விட மாட்டீர்கள், ருசி சூப்பராயிருக்கும், என்று சொல்லி அவர் விருப்பத்தைக் கேட்டறியாது அவரது கைகளில் திணித்துச் சென்றதாகவும் சொல்லியிருந்தார். ஆனால் அன்புடன்…

கனவு மெய்ப்பட[8] – வேண்டாமே ‘ஈ அடிச்சான் காப்பி!’ (minnambalam.com)

ஜேகே என பரவலாக அறியப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி  ஒரு புரட்சியாளர். அவரது சொற்பொழிவுகளிலும் எழுத்திலும் அலங்காரங்கள் இருக்காது. அவர் என்றுமே  நான் பேசப்போகிறேன், எனக்கு உண்மை தெரியும், என் பேச்சைக் கேட்டு உண்மையை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் என  சொன்னதேயில்லை.  மாறாக ‘நாம் அனைவரும் இணைந்து ஒன்றாக பயணிக்க இருக்கிறோம்’  என்றுதான்  தன்  சொற்பொழிவுகளைத்  தொடங்குவார். இவரைப்போலவே, மேடை நிகழ்ச்சிகளில் எனக்கெனவும் சில கொள்கைகள் உள்ளன. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் வயது…

கனவு மெய்ப்பட[7] – பணம்-பதவி-புகழ்! (minnambalam.com)

பணம், பதவி, புகழ். மனிதனை ஆட்டுவிக்கும் முன்று மாபெரும் சக்திகள். மூன்றும் ஒருசேர கிடைக்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அது அபூர்வம். மூன்றுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. பதவி வரும்போது பணமும் கூடவே வரும். அதனுடன் இணைப்பாய் புகழும் வரும். அதுபோலவே பணமும் பதவியும் நம்மைவிட்டுச் செல்லும்போது அதனால் உண்டான புகழும் நம்மை விட்டுச் சென்றுவிடும். நம்மிடம் பணமும், பதவியும் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கல்வியினாலும் திறமையினாலும் அது சார்ந்த உழைப்பினாலும் கிடைக்கப்பெற்ற புகழ்…

கனவு மெய்ப்பட[6] – நம் செயலே நம் அடையாளம்! (minnambalam.com)

நம் ஒவ்வொருவருக்குமான உயரம்-குள்ளம், கருப்பு-சிவப்பு, குண்டு-ஒல்லி போன்ற புற அங்க அடையாளங்கள் பெரும்பாலும் பொதுவானவை. நம் பெயர், படிப்பு, திறமை, வேலை, குணநலன்கள், பழக்கவழக்கங்கள், செயல்பாடுகள் போன்றவை ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை வாய்ந்தவை. அவையே நம்மை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது. நம் அடையாளமாகிறது. இதுபோல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு அடையாளம். பாரத நாடு அன்பிலும், கருணையிலும், அறிவிலும், வீரத்திலும், மானத்திலும், கற்பிலும், இரக்கத்திலும், ஆன்மீகத்திலும் சிறந்த நாடு. எல்லா மொழி பேசுபவர்களும்,…

கனவு மெய்ப்பட[5] – தினம் ஒரு கிழங்கு! (minnambalam.com)

‘நாம் ஒரு முயற்சி செய்கிறோம். அதன் பலன் பாசிட்டிவாக இருந்தால் அது வெற்றி, நெகட்டிவாக இருந்தால் அது தோல்வி’ இப்படித்தான் நம்மில் பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நம்முடைய முயற்சியே வெற்றிதான். நாம் எடுக்கின்ற முயற்சியின் பலன் நேர்மறையாக பாசிட்டிவ் பலனைக் கொடுக்கலாம், எதிர்மறையாக நெகட்டிவ் பலனைக் கொடுக்கலாம் அல்லது இரண்டுமே இல்லாமல் ஒரு செயல் நடைபெற்றது என்ற அளவில் எந்த பலனும் இல்லாமல் நியூட்ரலாகவும் இருக்கலாம். உண்மையில் முயற்சி செய்வதே…

கனவு மெய்ப்பட[4] – நம் பலம் நம் கையில்தான்! (minnambalam.com)

‘அதிர்ஷ்டக்காரர்கள்’, ‘கொடுத்து வைத்தவர்கள்’, ‘பிக்கல் பிடுங்கள் இல்லை’, ‘பணம் கொட்டிக் கிடக்கு’ – இவை சாதனையாளர்களுக்குக் கிடைக்கும் இலவச பட்டப்பெயர்கள். பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம்போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந்தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும், விடா முயற்சிகளும்தான். இவர்களின் சாகசங்களைப் பார்த்து வயிற்றில் எரிச்சலும் காதில் புகையும் வருபவர்கள் தாழ்வு மனப்பான்மையை கேடயமாக வைத்துக்கொள்வதால் அவர்களை நோக்கி வர இருக்கும் வெற்றியும் உள்ளே வரமுடியாமல் விலகிச் செல்கின்றன. ஏழாம் வகுப்பு…

கனவு மெய்ப்பட[3] – தடை உடைப்போம், இலக்கை அடைவோம் (minnambalam.com)

சமீபத்தில் ஆங்கிலத்தில் ‘கௌர் கோபால் தாஸ்’ என்பவரின் தன்னம்பிக்கை உரை வீடியோவை பார்த்தேன். காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் ‘Fresh Vegetables Sold Here’ என்ற விளம்பரப் பலகையுடன் தன் வியாபாரத்தைத் தொடங்கினார். அந்த வழியாகச் சென்ற ஒருவர் வியாபாரியிடம், ‘உங்கள் காய்கறிகள் புத்தம் புதிதாகத் தானே இருக்கிறது. அதற்கு எதற்கு விளம்பரம்… எனவே Fresh என்ற வார்த்தையை எடுத்து விடலாமே’ என்றார். வியாபாரி அப்படியே செய்ய, இப்போது…

கனவு மெய்ப்பட[2] – பெண்களின் உடன் பிறந்த கவச குண்டலம்? (minnambalam.com)

ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரேனும் ஒருவர் பெண்களுக்காக குரல் எழுப்பியபடிதான் இருக்கிறார்கள். தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த நூற்றாண்டில் #metoo இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்குத் தாங்களே குரல்கொடுக்கத் துவங்கியுள்ளனர். இதன் மூலம் சினிமா துறை சார்ந்த பெண்கள் தாங்கள் பல வருடங்களுக்கு முன்பு பட்ட கஷ்டங்களையும் அவமானங்களையும் பகிர்ந்துகொள்ளத் துணிந்துள்ளனர். கீழே இழுக்கும் கரங்கள் சினிமா துறையில் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் மேலே…

கனவு மெய்ப்பட[1] – நிம்மதியாக வாழ்கிறோமா? (minnambalam.com)

Women Empowerment குறித்து எழுதப் போவதாய் சமூக வலைதளங்களில் அறிவிப்பைக் கொடுத்த சில நிமிடங்களுக்குள் எங்களுக்காகவும் எழுதுங்களேன் என பல ஆண்கள் வேண்டுகோள் வைத்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் என் எழுத்துக்கும், கருத்துக்களுக்கும்  ஏற்கெனவே அறிமுகமானவர்கள். பெண்களின் முன்னேற்றத்துக்காக எழுதும்போது அதில் ஆணும் அடக்கமே. எனவே இருபாலருக்கும் பொதுவாகவேதான் இந்த கான்செப்ட் என பதில் கொடுத்தேன். சென்ற வருடம் ஒரு பத்திரிகையில் என்னை சுயமுன்னேற்றக் கட்டுரைத் தொடர் எழுதக் கேட்டிருந்தார்கள். தொலைபேசியில்தான்…

error: Content is protected !!