வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[22] : பூக்களைவிட முட்களுக்குத்தான் மதிப்பு அதிகம். ஏன் இப்படி? (நம் தோழி)

பூக்களைவிட முட்களுக்குத்தான் மதிப்பு அதிகம். ஏன் இப்படி? பொதுவாக திருமணம் ஆன பெண்ணிடம் கேட்கப்படும் கேள்வி இதுதான். ‘உன் கணவன் உன்னை நன்றாக வைத்துக்கொள்கிறானா… உன்னை நன்றாக பார்த்துக்கொள்கிறானா?’ இந்த கேள்வியே அபத்தமானது என்பேன். யாரும் யாரையும் சதா சர்வ காலமும் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. அந்த ‘யாரும்’ என்பதில் கணவன் மட்டுமில்லை. அப்பா, அம்மா,…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[21] : கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் முயற்சி! (நம் தோழி)

கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் முயற்சி! நேர்மறையாக சிந்திப்பது என்பது வலுக்கட்டாயமாக நாம் சந்தோஷமாக இருப்பதைப் போல வெளிக்காட்டிக்கொண்டு ‘என்னை எதுவும் அசைக்க முடியாதுப்பா’ என வெளிவார்த்தைக்காக பெருமை பேசுவது கிடையாது. அப்படி இருப்பது உள்ளுக்குள் மேலும் மேலும் எதிர்மறை சிந்தனையை தூண்டிவிடுவதாக மட்டுமே இருக்கும். மன அழுத்தத்தை அதிகரிக்கும். இயல்பாக உங்களுக்கு இருக்கும் கஷ்டங்களையும் வருத்தங்களையும்…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[20] : ஆன்லைன் போதைக்கு மயங்க வேண்டாமே! (நம் தோழி)

ஆன்லைன் போதைக்கு மயங்காமல் இருக்க என்ன செய்யலாம்? நாம் வாழும் உலகில் என்னவெல்லாம் நல்லவை கெட்டவை இருக்கின்றனவோ அதுபோல சைபர் உலகம் (Cyber World) என சொல்லப்படும் டிஜிட்டல் உலகிலும் உள்ளன. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், நல்லவை அதீதமாக இருப்பதைப் போலவே தீயவை அதைவிட பலமடங்கு அதீதமாக இருக்கின்றன. ஏனெனில் டிஜிட்டல் உலகில் அனைத்துமே…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[19] : அவளுக்குப் பெயர் பெண் (நம் தோழி)

அவளுக்குப் பெயர் பெண்! பெண் குழந்தைகளுக்கு அதிகமாக பாலியல் தொந்திரவுகள் ஏற்படுவது வீட்டுக்கு அடிக்கடி வந்துபோகும் நெருங்கிய உறவினர்களினாலும், நண்பர்களாலும்தான். எனவே குழந்தைகள் யாரையாவது பார்த்து பயந்தால் அவர்களை ஒதுக்கினால் அவர்களிடம் ‘என்ன மரியாதை கொடுக்க மாட்டேன் என்கிறாய். அங்கிளுக்கு ஹாய் சொல்லு… மாமாவுக்கு வணக்கம் சொல்லு… அண்ணாவுக்கு ஷேக்கன் கொடு…’ என வற்புறுத்தாதீர்கள். அவர்களுடன்…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[18] : வெற்றிக்கான ரகசிய கூட்டுப்பொருள் (நம் தோழி)

வெற்றிக்கான ரகசிய கூட்டுப் பொருள்! ஒவ்வொரு வெற்றிக்கும் உழைப்பு, திறமை, கல்வி, முதலீடு இவற்றை எல்லாம் தாண்டி ஏதேனும் ஒரு ரகசிய கூட்டுப்பொருள் காரணமாக இருக்கும். அதனால்தான் ஒரே படிப்பைப் படித்த ஒத்த திறமையுள்ள சம வயதினர்களின் வெற்றி தோல்விகள் ஒன்றுபோல இருப்பதில்லை. இன்றும் வீடுகளில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சண்டைகளில் முக்கிய இடத்தில் இருப்பது…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[17] : ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது! (நம் தோழி)

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது! தனித்துவமாக இருப்பது குறித்த விழிப்புணர்வே இல்லையோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு ஒரே அச்சில் வார்ப்பதைப்போல மனிதர்கள் பெருகிவிட்டார்கள். ‘என்னவோ போங்க இந்த காலத்து பிள்ளைகளுக்கு…’, ‘என்னவோ போங்க இப்போதெல்லாம்…’ என்று அங்கலாய்க்கும் முந்தைய தலைமுறையினர்கூட தங்கள் இயல்பை இழந்து வருகிறார்கள். வீடும் சமுதாயமும் அவர்களையும் விட்டு வைப்பதில்லை. ஒருவர்…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[16] : ‘டிகாக்ஷன் காபி’ லாஜிக் தெரியுமா? (நம் தோழி)

‘டிகாக்‌ஷன் காபி’ லாஜிக் தெரியுமா? சில நாட்களுக்கு முன்னர் எங்கள் உறவினர் ஒருவர் என் பெற்றோருக்கு போன் செய்திருந்தார். அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். அவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்தவர். ‘கொரோனா’ விசாரிப்புகளை அடுத்து வெளிநாடுகளில் வசிக்கும் அவர்கள் பிள்ளைகள் குறித்தும், என் சகோதரன் சகோதரி நலன் குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். இப்படியாக…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[15] : வெளி வராத அழுகையும், வெளியில் காட்டிய அச்சமும்! (நம் தோழி)

  வெளி வராத அழுகையும், வெளியில் காட்டிய அச்சமும்! ஃபேஸ்புக்கில் ஒரு வித்தியாசமான பதிவைப் படித்தேன். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக படுத்தப் படுக்கையாக இருந்த தன்னுடைய அப்பா இறந்தபோது அழுகையே வரவில்லை என்றும் ஆனால் தான் மிகவும் மதிப்பளித்த இசைப் பிரபலம் இறந்தபோது கதறி அழுததாகவும் சொல்லியிருந்தார் அந்தப் பதிவர். தன்னுடைய அப்பா இறந்தபோது அழுகை…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[14] : வாரிக் கொடுப்பதை அள்ளிப் பருகுவோம்! (நம் தோழி)

வாரிக் கொடுப்பதை அள்ளிப் பருகுவோம்! நேர்மறை சிந்தனைகள் என்பதும் எதிர்மறை சிந்தனைகள் என்பதும் ஏதோ வெவ்வேறு என்று எண்ணிவிட வேண்டாம். இரண்டும் ஒன்று என்று சொல்வதைவிட ‘சிந்தனைகள்’ என்ற ஒற்றை வார்த்தையில் இரண்டையும் அடக்கிவிடலாம். நாம் சிரிக்கிறோம், அழுகிறோம், வருந்துகிறோம் என்பதைப்போல சிந்திக்கிறோம் என்பதும் ஒரு செயல். நாம் பொதுவாக சிந்திப்பதே நேர்மறையாகத்தான் இருக்கும். நாமாக…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[13] : வாழ்வில் தன்னம்பிக்கை தூவுங்கள்! (நம் தோழி)

வாழ்வில் தன்னம்பிக்கை தூவுங்கள்! பணக்காரர்கள், ஏழைகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், நிறைய நண்பர்களை வைத்திருப்பவர்கள், தேர்ந்தெடுத்த சிலரை மட்டும் நட்பில் வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், உள்நாட்டில் இருப்பவர்கள் இப்படி யாராக இருந்தாலும் கஷ்டங்கள், வருத்தங்கள், துக்கங்கள், தோல்விகள் அத்தனையும் எல்லோருக்கும் பொதுவானதே. அதுபோலவே, இவற்றால் உண்டாகும் வேதனைகளும் வலிகளும் அவமானங்களும் ஓரவஞ்சனையின்றி அத்தனைபேருக்கும் பொதுவானதே. இவற்றை எல்லாம்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon