
தட்ஸ் ஆல். அவ்ளோதான்!
தட்ஸ் ஆல். அவ்ளோதான்! பொதுவாக சொல்வார்கள்… ‘நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? மன அழுத்தத்தில் உள்ளீர்களா? சோகமாக உணர்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். தனியாக அமர்ந்துகொண்டு உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றை செய்யுங்கள். ஸ்ட்ரெஸ் அட்ரெஸ் இல்லாமல் ஓடிவிடும்.’ ஆனால் அது அப்படி இல்லை. மிகவும் ’ஸ்ட்ரெஸ்’ ஆக இருந்தாலோ அல்லது தலைவலி உடல் வலி போன்ற உபாதைகள் இருக்கும்போதோ,…

இவ்வளவுதான் வலியும், வலி நிவாரணமும்!
இவ்வளவுதான் வலியும், வலி நிவாரணமும்! காலையில் வழக்கத்துக்கு மாறாய் தலைவலி மண்டையைப் பிளக்க கண் விழித்தேன். ஸ்வாமி அறையில் பிள்ளையாருக்கு அட்டெண்டஸ் போட்டுவிட்டு, பால்கனி கதவைத் திறந்தேன். கும்மிருட்டு. மழை மெல்லியதாய் பூமியை நனைத்துக்கொண்டிருந்தது. சுடச்சுட டிகாஷன் போட்டு அது இறங்கும் வரை நெற்றியின் இருபக்கத்தையும் அழுந்தப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். டிகாஷன் சொட்டு சொட்டாய் மெல்லிய…

வாழ்நாள் கெளரவம்!
வாழ்நாள் கெளரவம்! ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து கல்வி சம்மந்தமான சாஃப்ட்வேர் தயாரிப்புக்காக பேசுவதற்கு என்னை சந்திக்க வந்திருந்தார் தொழில்நுட்பப் பிரிவில் உயர் பதவியில் இருக்கும் பொறியாளர் ஒருவர். ஏற்கெனவே அந்த பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டமாக நான் எழுதிய சில தொழில்நுட்பப் புத்தகங்கள் இருக்கின்றன. அவர் என்னை சந்திக்க வந்திருந்த அன்று எங்கள் அலுவலகத்தில் காம்கேரின் 30 வருட…

சிறிய பிரச்சனைகளும் பெரிய ரியாக்ஷன்களும்!
சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கு பெரிய அளவில் ரியாக்ஷன்களை காட்டிக்கொண்டிருந்தால் பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு நாம் காட்டும் சிறிய ரியாக்ஷன்கள்கூட வலுவிழந்து போய்விடும். ‘சண்டைக்கோழி’ என்ற பட்டம் மட்டுமே மிஞ்சும். சிறிய பிரச்சனைகளை புத்திசாலித்தனத்தால் தீர்த்துக்கொண்டால் பெரிய பிரச்சனைகளுக்கு நாம் கொடுக்கும் குரல் வலுத்துக் கேட்கும்! காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO Compcare Software டிசம்பர் 6,…

ஒரு டாக் ஷோ!
ஒரு டாக் ஷோ! ஒருபக்கம் பெற்றோர். விதவிதமான உணவை சாப்பிட விரும்புபவர்கள். மறுபக்கம் அவர்கள் வளர்த்தெடுத்த பிள்ளைகள். அவர்கள் யாரும் அறியாப் பருவத்தினரோ அல்லது டீன் ஏஜினரோ அல்ல. 30+, 40+ 50+ என வெவ்வேறு வயதினர். பெற்றோரின் உடல் நலம் காரணமாக உணவு சம்மந்தமாக தடை போடும் பிள்ளைகள். பிள்ளைகள் பெற்றோரின் உடல்கருதி அவர்களுக்கு…

ஆளுமைகள்!
ஆளுமைகள்! ஒரு சில ஆளுமைகள் நம்மிடம் நன்றாகவே பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் நட்பும் அன்பும்கூட அபரிமிதமாகவே இருக்கும். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் நடந்துகொள்வதில் வித்தியாசம் தென்படும். அது என்னவென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்போம். நாம் ஏதேனும் தவறாக, மரியாதைக் குறைவாக நடந்துகொண்டு விட்டோமோ என்றும் குழம்பிக் கொண்டிருப்போம். பெரும்பாலும் அதெல்லாம் ஒரு காரணியாகவே இருக்காது. அப்போ…

நான் மதிக்கும் ஒரு சிலருள் நீங்களும் ஒருவர்!
நான் மதிக்கும் ஒரு சிலருள் நீங்களும் ஒருவர்! ஒரு சிலர் சொல்வார்கள் ‘நான் மதிக்கும் ஒரு சிலருக்குள் நீங்களும் ஒருவர்’. இப்படி சொல்பவர்கள்தான் வெகு சீக்கிரம் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள். காரணம், அவர்கள் நம் மீது மனதுக்குள் வைத்திருக்கும் மதிப்பை நமக்கு தெரியப்படுத்துவதன் மூலம் நாமும் அவர்களைக் கொண்டாட வேண்டும் என்ற ஒரு சிறு…

அதைப் போல், இதைப் போல் அல்ல, காம்கேர் போல!
இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், காக்னிஸண்ட், சோகோ போல அல்ல, ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ போல! 1992-ல் ஆரம்பித்த எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்துக்கு வயது 31 நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் குறித்த ஒரு ஆவணத் தொகுப்பிற்கு தேவையானதை தொகுத்துக் கொண்டிருப்பதால் அவ்வப்பொழுது கிடைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை…

காபி சூடா வேணுமா? சுத்தமான வேணுமா?
சூடான காபி வேணுமா? சுத்தமான காபி வேணுமா? பொதுவாகவே குரலை உயர்த்தி நியாயம் கேட்டால் நாம் சண்டைப் போடுவதைப் போன்ற பிம்பத்தை உருவாக்கி விடுகிறார்கள். குரலை உயர்த்தாமல் அமைதியாகக் கேட்டால் அவர்கள் சண்டைப் போடுவதைப் போன்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அமைதியான முறையில் நியாயம் பேசவே முடியாது, எனவே வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான விஷயமே நியாயத்தை…

வலி!
வலி! நமக்குப் புதிதாக அறிமுகம் ஆகும் யாராவது நம்மை காயப்படுத்தி பேசியதாக நினைத்தால் வருத்தப்பட்டு மனதுக்குள் அழுவதற்கு முன் ஒரு விஷயத்தை நினைவில் வைக்க வேண்டும். நாம்தான் காயப்பட்டிருப்போமே தவிர அவர்கள் காயப்படுத்தும் நோக்கத்தில் பேசி இருக்க மாட்டார்கள். அவர்களின் இயல்பாக இயல்புபடி பேசி இருப்பர்கள். திரும்பவும் சொல்கிறேன், இயல்புபடி பேசி இருப்பார்கள் என்றுதான் சொல்லி…