குறைந்து வரும் குற்ற உணர்வுகள்!

குறைந்து வரும் குற்ற உணர்வுகள்! முன்பெல்லாம் ஒரு கொலைகாரன் கொலை செய்வதைக் கூட உணர்ச்சி வேகத்தில் கொலை செய்து விட்டதாக சொல்வார்கள். அந்த நேரத்துக் கோபத்தில் கண்மூடித்தனமாக செய்திருப்பதாக மற்றவர்கள் கூறுவார்கள். ஏன் அவனே கூட அப்படி சொல்லுவான். கொலை செய்துவிட்ட பிறகு ஒவ்வொரு நொடியும் பயத்துடனும் குற்ற உணர்ச்சியுடனும்தான் அவன் வாழ்ந்துகொண்டிருப்பான். அதுதான் காலம்…

யார் நம்பர் 1?

யார் நம்பர் 1? யார் நம்பர் 1 எழுத்தாளர்? என்ற விவாதம் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பதிப்பாளர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்ன விஷயம்தான் நினைவுக்கு வந்தது. ‘நாங்கள்தான் பதிப்பகத் துறையிலேயே இதுவரை இத்தனை கோடி எழுத்துக்களை எங்கள் நூல்களுக்கு பயன்படுத்தி புத்தகமாக்கியுள்ளோம்….’ என்றாரே பார்க்கலாம். அதாவது இத்தனை புத்தகம் வெளியிட்டுள்ளோம்…

குற்ற உணர்ச்சியைத் தூண்டாதீர்!

குற்ற உணர்ச்சியைத் தூண்டாதீர்! எனக்குத் தெரிந்து அறக்கட்டளை நடத்தி வரும் ஒரு பெண் வருடா வருடம் பிரமாண்டமாக தங்கள் அறக்கட்டளை ஆண்டு விழாவை பிரமாண்டமான அரங்குகளை எடுத்து நடத்துவார். அரங்கிற்கே லட்சத்தில் முக்கால் பங்கு கட்டணம் ஆகும், தவிர உணவு, விளம்பரம், போட்டோ வீடியோ அது இது என எப்படியும் சில லட்சங்கள் செலவு பிடிக்கும்….

அகத்தின் Better Version தான் புறத்தின் பொலிவு

அகத்தின் Better Version தான் புறத்தின் பொலிவு! இன்று உங்கள் முகம் பொலிவாக இருக்கும் என காலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிடர் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு நாளில் மட்டும் நம் முகம் எப்படி பொலிவாக இருக்கும் என சிரித்தபடி நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். ஜோதிட ரீதியாக கோள்களின் / கிரஹங்களின் இடத்துக்கு ஏற்ப மனதிலும் எண்ணத்திலும்கூட…

மோட்டிவேஷன்?

மோட்டிவேஷன்? திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகி இருந்த ஒரு இளம் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தேன். நல்லதொரு கேட்டட் கம்யூனிட்டி அப்பார்ட்மெண்ட்டில் குடி இருக்கிறார். அவர் திருமணத்துக்கு முன் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியில் இருந்தவர். திருமணத்துக்குப் பிறகு வேலையை விட்டு விட்டார். அவர் கணவன் சிறிய பிசினஸ் செய்கிறார். ‘ஏன் வேலையை விட்டுட்டீங்க?’ என்றேன். ‘கல்யாணம்…

பாராட்டில் பங்கீடா? வேண்டாமே!

பாராட்டில் பங்கீடா? வேண்டாமே! யாரேனும் தங்கள் குழந்தைகள் பற்றி பெருமையாக சொல்லும்போது ‘இந்தக் கால குழந்தைகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு, நம் காலத்துல அதெல்லாம் எங்கே…’ என பெருமூச்சு விட்டபடி கேட்க வேண்டாமே? காரணம் வாய்ப்புகள் நிறைய இருந்தாலும் அதைப் பற்றிக்கொள்பவர்கள் ஒருசிலர் தானே. அவர்களுக்குத்தானே பெருமைகளும் வந்து சேர்கின்றன. போலவே, எவரேனும் தங்கள் வீட்டுப்…

சிலமணி நேர ஈர்ப்புகள்!

சிலமணி நேர ஈர்ப்புகள்! சென்ற வாரம் மருத்துவமனையில் இரண்டு மணி நேர காத்திருப்பு. ‘அடடா என்ன உடம்புக்கு?’ என பதற வேண்டாம். பெற்றோரின் வழக்கமான உடல்நலப் பரிசோதனைதான். எத்தனை நேரம்தான் கையையும் காலையும் கட்டிக்கொண்டு ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது. எவ்வளவு நேரம்தான் சுற்றி அமர்ந்திருப்பவர்களை, வருவோர் போவோரை, நர்ஸுகளை கவனித்துக்கொண்டிருப்பது? பையில் சமர்த்தாக அமர்ந்திருந்த செல்போனை…

‘என் அம்மா இப்படி… உங்கள் அம்மா எப்படி?’

‘என் அம்மா இப்படி… உங்கள் அம்மா எப்படி?’ நேற்று, ‘என் அம்மா நல்ல அரசியல் விமர்சகர்… உங்கள் அம்மா எப்படி?’ என ஒரு சிறு கேள்வியை எழுப்பி இருந்தேன். அதற்கு பலரும் பலவிதமாக பதில் கொடுத்திருந்தார்கள். என் வார்த்தைக்கு மதிப்பளித்து பதிலளித்த அனைவரும் என் அன்பு நன்றிகள். அம்மாவின் நகைச்சுவை உணர்வு, 90 வயது அம்மாவின்…

வெர்ச்சுவல் பாராட்டு!

  வெர்ச்சுவல் பாராட்டு! முன் குறிப்பு: மொபைல் ஆப்களை இன்ஸ்டால் செய்யும்போதோ அல்லது பயன்படுத்தும்போதோ அவை நம்மிடம் இருந்து நம் தகவல்களை எடுத்துக் கொண்டு அதற்கு நம்மிடம் ஒப்புதல் பெற்ற பிறகே செயல்பட ஆரம்பிக்கும். ஆகவே, கண்களில்படும் அத்தனை ஆப்களையும் உங்கள் கண்முன் கடைவிரித்து ஆசை காட்டும் ஆப்களையும் விட்டில் பூச்சிகளாய் பயன்படுத்த முனையாதீர்கள். அத்தியாவசிய…

அமைதி Vs ஆக்ரோஷம்!

அமைதி Vs ஆக்ரோஷம்! அமைதியான சுபாவம் உடையவர்களுக்குத்தான் நேரடி / மறைமுக எதிரிகள் அதிகம் உருவாவார்கள். காரணம், அவர்கள் மீது தாங்களாகவே ஒரு சாஃப்ட் கார்னரை உருவாக்கி வைத்துக்கொண்டு அவர்களை ஏதேனும் ஒரு விஷயத்துக்காக அணுகி அவர்கள் தங்கள் கருத்தை மிக உறுதியாக சொல்லும்போது அல்லது மறுக்கும்போது சண்டைக்கோழிகளாக வலம் வருபவர்களைக்கூட ஏற்றுக்கொள்ளும் இந்த சமூகம்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon