கண்ணியமான காதல், அருமையான திரைப்படம்!

கண்ணியமான காதல், அருமையான திரைப்படம்! இந்தியா, காஷ்மீர், இராணுவ வீரர்கள், ஹைத்ராபாத் இளவரசி இவற்றுடன் வெகு கண்ணியமான காதல். இத்தனை கண்ணியமாகக் கூட திரைப்படத்தை எடுக்க முடியும் என நிரூபித்துள்ளார்கள். படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் இடத்தைவிட்டு நகர விடாமல் பார்க்க வைத்தத் திரைப்படம். Simply telling Very Decent Film. காட்சி அமைப்புகள்,…

மனித நேயம்!

மனிதநேயம்! சமீபத்தைய பயணத்தில் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள நவகிரஹ கோயில்களை தரிசனம் முடித்தவிட்டுத் திரும்பும்போது அந்தந்த கோயில் வாசலில் உள்ள கடைகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுதான் நகர்ந்தோம். சில நேரம் கோயில் உள்ளே செல்லும் முன்னரேகூட பார்த்தோம். அப்போது மனதைக் கவரும் பொருட்கள் ஏதேனும் இருந்தால் வாங்கிவிட்டு பர்ஸைப் பார்த்தால் பணம் 500 ரூபாய்களாக மட்டுமே இருக்கும்,…

நாளைய நல்மரம், இன்றைய விதை!

நாளைய நல்மரம், இன்றைய விதை! எங்கள் இருப்பிடத்துக்கு அருகில் ஒரு அரசுப் பள்ளி. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக நான் கவனித்து வியக்கிறேன், கட்டுக்கோப்புடன் இயங்கி வரும் அந்தப் பள்ளியை. மாணவர்கள் யாரையும் பள்ளி முடிந்ததும் அங்கே இங்கே நின்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பதையும் வீண் பொழுது போக்கிக் கொண்டிருப்பதையும் பார்க்கவே முடியாது. பள்ளிக்கு கொண்டுவிடுவதற்கும், பள்ளியில்…

சின்னச் சின்ன விஷயங்களுக்கு!

சின்னச் சின்ன விஷயங்களுக்கு! நகைக்கடையை மிஞ்சும் அளவுக்கு பிரமாண்டமான வடிவமைப்பில் தமிழகம் முழுவதும் பலகிளைகள் கொண்ட மொபைல் விற்பனை நிலையம். உள்ளே சென்றதும் கைகூப்பி வணக்கம் சொல்லி அழைப்பதில் இருந்துத் தொடங்கி சீருடை அணிந்துகொண்டு துறுதுறுவென வேலை செய்துகொண்டிருந்த இளம் ஆண்களும் பெண்களும் ‘அட’ போட வைத்தார்கள். கடை முழுவதும் அடர்ந்த குளிர்ச்சி. பரவலான கூட்டம்….

காலம் செய்யும் மாயம்!

காலம் செய்யும் மாயம்! எங்கள் சிறு வயதில் வீட்டுக்கருகில் வசித்த, தற்போது பதினைந்து பதினாறு வயதில் மகன் இருக்கும் என்னுடன் படித்த ஒரு மாணவி, வீட்டுக்கு வந்திருந்தாள், திருமண செய்தியுடன். அப்போது அவள் எங்கள் குடும்ப உறுப்பினர் போல நன்றாக பழகுவாள். எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவாள். என் பெற்றோரின் பணி நிமித்த இடமாற்றல் காரணமாக…

ஒப்பீடு!

ஒப்பீடு! ஒரு வாசகியின் போன் கால். ’இன்று ஒரு தகவல் போல நீங்க நல்லா எழுதறீங்க… ஆனா தென்கச்சி சுவாமிநாதன் ஐயா போல கொஞ்சம் காமெடியா இருந்தா நல்லா இருக்கும். ரொம்ப சீரியஸா சொல்றீங்க விஷயங்கள…’ ‘நன்றி… யாரையும் யாரோடும் ஒப்பிடுவது சிறப்பாக இருக்காது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு டிஸைன். உங்களைப் போல் உங்கள் பிள்ளைகள்…

ஒரு டாக் ஷோ!

ஒரு டாக் ஷோ! ஒரு பெண் தன் கணவனுக்கு ஏபிசிடி கூட தெரியாது என்று சாதாரணமாக வீட்டில் பேசுவதைப்போல் பேசிவிட அதைவைத்து அந்த அம்மாவை வில்லி போலவும் அந்தக் குழந்தையின் அப்பாவை ஹீரோ போலவும் ஆக்கி அப்பாவையும் மகளையும் நெகிழ்ச்சியான இணைப்புக்குள் கொண்டு சென்றதுதான் நேற்றில் இருந்து சமூக வலைதளத்தின் பேசுபொருள். TRP-க்காக அதற்காக இதற்காக…

அறிவாளித்தனத்தை அடக்கி வாசிப்போமே!

அறிவாளித்தனத்தை அடக்கி வாசிப்போமே! எல்லா தலைமுறையினருடனும் ஒத்து வாழ்வது என்பது என்னவென்றால் பிறர் சொல்வது நமக்கு தெரிந்தாலும் ‘அப்படியா?’ என அவர்கள் சொல்வதை காதுகொடுத்துக் கேட்டுக்கொள்வதே! குறிப்பாக எளிய மனிதர்களிடம் கூடுதல் பிரியம் பெறுவதற்கான வழியும் இதுவே. பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் எங்கள் உறவினரின் வீட்டுக்குச் சமீபத்தில் சென்றிருந்தோம். அவர்…

ஆசிரியர்கள்!

  ஆசிரியர்கள்! பள்ளியில் தன் மகளுடன் படிக்கும் சக மாணவன் மகளுக்கு படிப்பில் போட்டியாக இருப்பதால் அவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்துக் கொன்ற தாய்- நேற்றைய மகா கொடுமையான செய்தி. பள்ளியில் தன் வகுப்பில் படிக்கும் மாணவிதான் பள்ளி இறுதித்தேர்வின் போது முதலாவதாக வர வேண்டும் என்பதால் அவளுக்குப் போட்டியாகவும் மாநில அளவிலும் முதலாவதாக வர…

சிவா கிராஃபிக்ஸ் – எஸ். எஸ் கிராஃபிக்ஸ் செந்தில்குமார்!

ஆழ்ந்த இரங்கல்கள்! இன்று திரு. செந்தில்குமாரின் மனைவியிடம் போனில் பேசியதில் இருந்து மனதே ஆறவில்லை. அவர் நேற்று இரவு 10 மணிக்கு மெசஞ்சரில் தன் கணவர் திரு செந்தில்குமார் 20 நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டார் என்று தகவல் கொடுத்திருந்தார். அதிர்ச்சியாக இருந்தது. 41 வயதே ஆனவர். கடுமையான உழைப்பாளி. மதியம் சாப்பிட்டு தட்டைக் கழுவி வைத்தவர்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon