
ஆகஸ்ட் 15, 2022: கதையல்ல சம்பவம்!
ஆகஸ்ட் 15, 2022: கதையல்ல சம்பவம்! ஆகஸ்ட் 15, 2022 – நம் நாட்டின் சுதந்திர தினத்துக்காக எங்கள் வீட்டில் நாங்களே தயாரித்த இனிப்பை டிஜிட்டல் புகைப்படமாக்கி உங்கள் அனைவருக்கும் கொடுக்க நினைத்துப் பகிர்ந்துள்ளேன். மகிழ்ச்சியாக இந்த நாளை கொண்டாடி மகிழ்வோம். எத்தனையோ வீரர்களின் தியாகங்களினால் நமக்குக் கிடைத்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்திப் போற்றுகிறோமா…

சின்னச் சின்ன சிந்தனைகள் (ஆகஸ்ட் 10 – ஆகஸ்ட் 14, 2022)
ஊருக்கும் உலகத்துக்கும் குரல் கொடுக்க! நாம் சம்மந்தப்பட்டப் பணிகளில் ஏதேனும் தவறு செய்பவர்களிடம் அதை சுட்டிக் காட்டி சரி செய்ய முயலும்போது சம்மந்தப்பட்ட தனிநபர் அல்லது நிறுவனங்களிடம் நாம் உறுதியாக பேசிப் போராடும்போது கிடைக்கின்ற பலன் என்ன தெரியுமா? நம் எதிரிகளின் எண்ணிக்கை அல்லது நம்மைப் பிடிக்காதவர்களின் எண்ணிக்கையில் ஒரு எண் கூடுவது மட்டுமே நடக்கிறது….

அய்யன்குறளும் அபிநயமும்!
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம்! எங்கள் காம்கேர் நிறுவனம் வாயிலாக, திருக்குறள் 1330 -யும் பாண்டிச்சேரி FM -ல் சில வருடங்களுக்கு முன்னர் தினம் ஒரு திருக்குறளாக எடுத்துக்கொண்டு அன்றாட வாழ்வில் நடக்கும் நடைமுறை உதாரணங்களுடன் விளக்கி வெளியிட்டோம். ‘தினம் ஒரு குறள்’ என்ற தலைப்பில் ஒலிபரப்பானது. தவிர, திருக்குறள் 1330-யும்…

பணம், பதவி, புகழ்!
பணம், பதவி, புகழ்! ஐஐடி மெட்ராஸ் டைரக்டர் திரு காமகோடி அவர்கள் மாணவர்களிடையே பேசிக்கொண்டிருந்ததன் கடைசி சில நொடிகள் அற்புதம். ‘நல்ல கொள்கையை நோக்கி நாம் சென்று கொண்டிருந்தால் பணம், புகழ், பதவி இவை அனைத்தும் நாம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் நமக்கு வரும்…’ சாதித்தவர்கள் சொல்கிறார்கள். வணங்கி வாழ்த்தி அவர் கருத்தை ஏற்றுக்கொண்டு…

நான் என்பது ‘நான்’ மட்டுமல்ல!
நான் என்பது நான் மட்டும் அல்ல! கர்மா : இதற்கு எத்தனையோ விளக்கங்கள். நல்ல கர்மா, கெட்ட கர்மா, நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தால் கெட்டது கிடைக்கும், முன்னோர் செய்த பாவங்கள் பிள்ளைகள் தலையில், பித்ரு சாபம், முந்தைய ஜென்மத்து வினை அப்படி இப்படி என அவரவர்கள் புரிந்துகொண்ட விதத்தில் கேள்விப்பட்ட விதத்தில்….

நடங்கள், பிரச்சனைகள் சல்யூட் அடிக்கும்!
நடங்கள், பிரச்சனைகள் சல்யூட் அடிக்கும்! எங்கள் நிறுவன கிளையிண்ட் ஒருவர் போன் செய்திருந்தார். பல வருடங்களுக்கு முன்பு அவருக்காக சில ப்ராஜெக்ட்டுகள் செய்து கொடுத்திருக்கிறோம். கொரோனாவுக்குப் பிறகு அவர் செய்துகொண்டிருந்த பிசினஸில் தொய்வு ஏற்பட்டதால் மிகவும் சோர்வாகவே பேசிக்கொண்டிருந்தார். பொதுவான விஷயங்களை பேசிய பிறகு ‘தினமும் வாக்கிங் செல்லுங்கள்’ என்றேன். ‘வாழ்க்கையில் மோட்டிவேஷனே போய்…

நீல வானம் நோக்கி அலகுடைந்த காக்கை!
நீல வானம் நோக்கி அலகுடைந்த காக்கை! சில தினங்களுக்கு முன்னர் ஒரு மாற்றுத்திறனாளி காகம் பற்றி எழுதி இருந்தேன். அதற்காவது அலகில் ஒரு பகுதி மட்டும் உடைந்திருந்தது. ஆனால், ஆடி அமாவாசை அன்று வந்திருந்த மற்றொரு மாற்றுத்திறனாளி காகத்தின் கதை ரொம்பவே பரிதாபம். அதற்கு ஒரு கால் இல்லை. அலகின் மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்தது….

‘சின்னதா செஞ்சு பழக்கமே இல்லையே’ – ராக்கெட்ரி!
‘சின்னதா செஞ்சு பழக்கமே இல்லையே’ – ராக்கெட்ரி! ‘சின்னதா செஞ்சு பழக்கமே இல்லையே’ என சொல்லி ஆராய்ச்சிக் கூடங்களில் கலகலப்பாகத் தொடங்கும் நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை ‘I am a Rocket Scientist’ என போலீஸ்காரர்களின் அடி உதை சித்திரவதைக்கு நடுவிலும் சொல்லும் அவருடைய கம்பீரம் என திரைப்படம் நெடுக ஒவ்வொரு காட்சியும் நாட்டுப்…

ஆப்பிள், காம்கேர் என்றல்ல, எல்லாவற்றுக்கும்தான்!
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரான ஸ்டீவ் ஜாப் தனது புதிய நிறுவனத்துக்கு லோகோ உருவாக்கிக் கொடுக்க ஒரு கலைஞரை அழைத்தார். அவரிடம் நான்கைந்து லோகோக்களை உருவாக்கி வருமாறும் தனக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். அந்த கலைஞரோ தன்னால் ஒரே ஒரு லோகோ மட்டுமே உருவாக்க முடியும், அதை பிடித்திருந்தால் வாங்கிக்கொள்ளவும் இல்லை என்றால் அதற்காக தான்…

வாழ்வோம், வாழ வைப்போம்!
வாழ்வோம், வாழ வைப்போம்! பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா! பாரதியின் இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது பெருமதிப்புக்குரிய திரெளபதி முர்மு அவர்கள் இந்தியாவின் 15-வது ஜானாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பாரதத்தின் முதல் குடிமகளாக பொறுப்பேற்று கூடுதல் சிறப்பைப் பெற்றுள்ளதை காணும்போது! 2022 அரசியலில் இவருக்கு வெள்ளி விழா ஆண்டு. ஒடிசாவில் மயூர்பஞ்ச்…