வறட்சியாகி விட்டதா நேர்மை?

வறட்சியாகி விட்டதா நேர்மை? நேற்று வேளச்சேரியில் ஒரு பகுதியில் டிராஃபிக் ஜாம். வேளச்சேரியில் ‘டிராஃபிக் ஜாம்’ ஆகாத இடம் ஏதேனும் இருக்கிறதா என நானே என்னைக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன். யோக நரசிம்மர் கோவிலின் மெயின் ரோடை பார்த்த நுழைவாயிலில் காரை நிறுத்திவிட்டு ஒருவர் உள்ளே சென்றிருப்பார் போல. அதனால் எதிரில் இருந்து பஸ் முன்னேறி…

இன்னுமா அதே கம்பெனியில் வேலை செய்கிறாய்?

இன்னுமா அதே கம்பெனியில் வேலை செய்கிறாய்? புகைப்படம்: நான்கு மாதங்களுக்கு முன்னர் (பிப்ரவரி மாதம்) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் Ai குறித்து பேசுவதற்காக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு எடுத்த செல்ஃபி. —- இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 14 வருடங்களுக்கு மேல் பணிபுரியும் ஒரு இளைஞரை (36) சந்தித்தேன். அவருடைய அப்பா அம்மா எங்கள் குடும்ப நண்பர்கள்…

திருமணங்கள்!

திருமணங்கள்! ஒரு பெண் 53 ஆண்களை மேட்ரிமோனி வெப்சைட் மூலம் தொடர்பு கொண்டு ஏமாற்றி திருமணம் செய்ததுதான் நேற்றைய பேசுபொருள். இதற்கு தன் சொந்தப் பதிவுகள் மூலமும், பிறரது பதிவுகளுக்கு கமெண்ட் செய்வதன் மூலமும் வயது வித்தியாசம் இல்லாமல் நிறைய ஆண்கள், தங்கள் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்கள். ஒவ்வொன்றிலும் மூன்றாம்தர எண்ண ஓட்டங்கள், வக்கிர எண்ணங்கள். என்னடா…

Favour அல்ல Privilege!

Favour அல்ல Privilege! ஒரு முறை என் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கோயில் சென்றுவிட்டு அருகிலேயே கைவினைப்பொருட்கள் மற்றும் உடைகள் கண்காட்சி போட்டிருந்ததால் அங்கும் சென்றிருந்தோம். ஒரு சுடிதாரை என் அப்பாம்மாவிடம் காண்பிப்பதற்காக ‘அப்பா… அம்மா…’ என சப்தமாக கூப்பிட்டேன். உடன் வந்திருந்த உறவினர் ‘பெரிய கம்பெனி நடத்துகிறாய்… ஒரு சுடிதார் வாங்குவதற்கு அப்பா அம்மாவை…

மாறிவரும் வியாபாரக் கண்ணோட்டம்!

மாறிவரும் வியாபாரக் கண்ணோட்டம்! முன்பெல்லாம் ஒரு கடை முதலாளியோ அல்லது நிறுவனத் தலைவரோ தான் வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்த மிகவும் தன்மையாகவும், அறிவார்த்தமாகவும் யோசிப்பார்கள். செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் தன் பணியாளர்களில் திறமையானவர்களை கூப்பிட்டு அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண சொல்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் நிலைமை அப்படியே உல்டா. நிர்வாகத் தலைமை வாடிக்கையாளர் பிரச்சனை…

தலைவாழை விருந்தும், பஃபே சிஸ்டமும்!

  தலைவாழை விருந்தும், பஃபே சிஸ்டமும்! அண்மையில் ஒரு குடும்ப நிகழ்ச்சி. உயர்தர ஓட்டலில் அருமையான ருசியான விருந்து. பஃபே சிஸ்டம். தலைவாழை இலை போட்டு வடை பாயசத்துடன் விருந்து உபசரிப்பு ஒரு ரகம் என்றால் தேவையானதை, விருப்பமானதை கேட்டு வாங்கி சாப்பிடும் பஃபே என்பது வேறொரு ரகம். இரண்டுமே எந்த விதத்திலும் சளைத்தது இல்லை….

அடிப்படை நாகரிகம்!

பொதுவாக ஏதேனும் ஒரு காரணத்தினால் என்னைப் பிடிக்காதவர்கள் தங்கள் நட்பு வட்டத்தில் பேசிக் கொள்வது என்னவாக இருக்கிறது தெரியுமா? ‘அவங்க தன்னைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே இருப்பாங்க…’ அவர்களுக்குள் பேசிக் கொள்வது எப்படி எனக்குத் தெரியும்? ஞானக் கண் ஏதேனும் இருக்கிறதா என நினைக்க வேண்டாம். அந்த நட்பு வட்டத்தில் இருப்பவர்களில் யாரேனும் ஒருவர்…

நீங்கள் சொர்க்கத்தைக் காண விரும்புகிறீர்களா? 

நீங்கள் சொர்க்கத்தைக் காண விரும்புகிறீர்களா?  ஜூன் 22, 2024 : அப்பாவின் ஜென்ம நட்சத்திரம் அன்று (Star Birthday)  சென்னை பனையூரில் உள்ள மத்ஸ்ய நாராயணா கோயில் சென்றிருந்தோம். மத்ஸ்ய நாராயணா பெருமாள் – சொர்க்கத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை உண்டாக்கும் கோயில் நம் சென்னைக்கு மிக அருகில்! மச்சாவதார பெருமாள் 10 அடிக்கும் மேல்…

ருசியைக் கூட்டும் மைக்ரோ கருணை!

ருசியைக் கூட்டும் மைக்ரோ கருணை! வைதீஸ்வரன் கோயிலில் புதிதாக வண்ணம் பூசப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆடு வாகனத்தை புகைப்படம் எடுத்த போது என்னை கடந்து சென்ற குருக்கள் ‘அங்காரகன் வாகனம்’ என்று சொல்லியபடி செல்ல, நாங்கள் அங்காரகன் சன்னதிக்கு சென்று செவ்வாய் பகவானை வணங்கிவிட்டு மற்ற சன்னதிகளுக்கும் சென்று பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு கோயிலை விட்டு வெளியே…

முளப்பாக்கம் ஸ்ரீஐயனார் திருக்கோயில்!

முளப்பாக்கம் ஸ்ரீஐயனார் திருக்கோயில்! மயிலாடுதுறையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முளப்பாக்கம் கிராமத்தில், என் தாத்தா டாக்டர் வெங்கட்ராம ஐயர் 1962 ஆம் ஆண்டு கட்டி கும்பாபிஷேகம் செய்த ஸ்ரீஐயனார் திருக்கோயில் இடித்துவிட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது குறித்த சிறு வீடியோவில் நான் பேசி இருக்கிறேன், இதோ உங்கள் பார்வைக்கு! நன்கொடை அளிக்க விரும்புவோரும்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon