
எப்படித்தான் எழுதுவது?
எப்படித்தான் எழுதுவது? பொதுவாக நேர்காணல்களில் நேர்காணல் செய்யப்படுபவர் என்ன வட்டார மொழியில் / வழக்கு மொழியில் (Slang) பேசுகிறாரோ அதை அப்படியே வெளிப்படுத்த வேண்டும். முக்கியமாக நேரடியாக அவர் சொல்வதை அடைப்புக்குறிக்குள் குறிப்பிடும்போது. ஆனால் என்ன நடக்கிறது தெரியுமா? நேர்காணல் செய்பவர் எந்த வட்டார மொழியை / வழக்கு மொழியைப் பேசுகிறாரோ அதை வைத்து…

குணமும், பணமும்!
மற்றவர்கள் நம்மை விட்டு விலகுவது அவர்கள் நம்மை Inferior ஆகவும், தங்களை Superior ஆகவும் கருதி மட்டும் அல்ல, அப்படியே உல்டாவாகவும் இருக்கலாம். ஆம். நம்மை Superior ஆகவும், தங்களை Inferior ஆகவும் கருதியும் இருக்கலாம். எனவே எல்லாவற்றுக்கும் நம் மீதுதான் குற்றம் இருக்குமோ என வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை! ‘ஐயோ அவங்க லெவலுக்கு…

சவாலாகும் பிள்ளை வளர்ப்பு!
சவாலாகும் பிள்ளை வளர்ப்பு! இப்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை கவனிக்கும்போது, சமுதாயத்தில் சவால்களாக இருக்கும் விஷயங்களில் முதலிடம் பிடிப்பது என்னவென்று யோசித்ததில் என் மனதில் முதலிடம் பிடித்த விஷயம் என்ன தெரியுமா? குழந்தைகளை பாதுகாப்பாய் வளர்ப்பது! நாற்பது வருடங்களுக்கு முன்னர் ஒரு அப்பா அம்மா, தங்கள் குழந்தைகளிடம் தேர்வுத் தாளில் பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பிக்காதீர்கள்…

அம்மன் அந்தம்மாவானக் கதை!
அம்மன் அந்தம்மாவானக் கதை! சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோரின் வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றிருந்தேன். நர்ஸ் ஒவ்வொரு நபரின் பெயரைச் சொல்லி பரிசோதனை அறைக்கு அழைக்கும்போதும் நான் நர்ஸின் முகபாவனையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு பெயரை அழைக்கும்போது மட்டும் நர்ஸை பார்க்காமல் அழைக்கப்பட்ட நபரின் முகத்தைப் பார்த்தேன். அவர் பெயர்: அப்துல் கலாம்!…

மாற்றுத் திறனாளி காகம்!
மாற்றுத் திறனாளி காகம்! இந்த புகைப்படத்தில் இருக்கும் காகத்துக்கு அலகில் கீழ்பாகம் இல்லை. உடைந்து விட்டிருக்கிறது. அதுபோல அதன் ஒரு காலில் நகங்கள் இருக்கும் பகுதியும் இல்லை. உடைந்து விட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமீபமாகத்தான் எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு வருகைத் தருகிறது. உற்று நோக்கினால்தான் அது ஒரு மாற்றுத்திறனாளி என்று தெரியும். இதனால்…

‘எக்ஸ்ட்ரா’ பெருமை வேண்டாமே!
‘எக்ஸ்ட்ரா’ பெருமை வேண்டாமே! அப்போது எனக்கு 35 வயதிருக்கும். ஒரு கிளையின்ட் மீட்டிங். அவர் அலுவலகத்தில் நடந்தது. நாங்கள் இருவரும் பேசி முடித்த பிறகு மீட்டிங்கில் அவருடைய அலுவலகத்தில் இருந்து இரண்டு இன்ஜினியர்கள் கலந்துகொள்ள வேண்டி இருந்தது. அவர் இருவரையும் கூப்பிட்டனுப்பினார். ஏற்கெனவே தயார் நிலையில் இருந்ததால் கையில் நோட்டுடன் வந்தனர். ஆனால் அவர்கள் அமரவில்லை….

காலம் காட்டும் புகைப்படம்!
காலம் காட்டும் புகைப்படம்! ஒரு புகைப்படம். இரண்டு அக்காக்களுக்கு நடுவே ஒரு தம்பி. தம்பி ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறான். அக்காக்கள் இரண்டு பேரும் அந்த நாற்காலியின் இரண்டு பக்கங்களிலும். இரண்டு அக்காக்களுக்கும் 6,4 வயதிருக்கும். தம்பிக்கு 3 வயதிருக்கும். இது ஒரு ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படம். கிட்டத்தட்ட 40…

செளக்கியமாக வாழ்பவர்களுக்கு கருணையேஇருக்காதா என்ன?
செளக்கியமாக வாழ்பவர்களுக்கு கருணையேஇருக்காதா என்ன? இவர் தமிழில் சாஃப்ட்வேர் உருவாக்கியதில் முதன்மையானவர்களுள் ஒருவர் என்றால்… அப்போ, இவர் தமிழ் மீடியம் போல…. இவர் சைபர் க்ரைமுக்காக புத்தகங்கள் எழுதியும் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தியும் வருகிறார் என்றால்… அப்போ, இவங்களும் டிஜிட்டல் உலகில் நிறைய பாதிக்கப்பட்டிப்பாங்க போல… என்று எண்ணும் எல்.கே.ஜி மனோபாவம் எப்போது மாறும் என…

எல்லாமே சூப்பர்தான்!
எல்லாமே சூப்பர்தான்! ஒரு நிகழ்ச்சிக்காக நான் தயாரித்த வீடியோக்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து அனுப்பக் கேட்டிருந்தார்கள். நானும் குவிந்திருக்கும் என் வீடியோக்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துப் பார்க்கிறேன். இரண்டே இரண்டு ரிசல்ட் தான் கிடைக்கிறது. 1. எல்லாமே சூப்பராக இருப்பதைப் போல் இருக்கிறது. 2. எல்லாமே இன்னும் நன்றாக செய்திருக்கலாம் போல் இருக்கிறது. ஒரு வழியாக…

ஃபேண்டசி நம்பிக்கைகள்!
ஃபேண்டசி நம்பிக்கைகள்! ‘நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா… இப்படிச் செய்யுங்கள்’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ பார்த்தேன். வெற்றிலையை நன்கு சுத்தமாக்கி, மஞ்சளை கரைத்து வைத்துக்கொண்டு தீக்குச்சியினால் மஞ்சளைத் தொட்டு தொட்டு வெற்றிலையில் விரும்பியதை சுருக்கமாக எழுதி சுவாமி முன் வைத்து வேண்டிக்கொண்டு அந்த வெற்றிலையை சுருட்டி நம் பையில் வைத்துக்கொண்டு சென்றால் நினைத்த காரியம்…