
இதுதான் தர்மம்!
இதுதான் தர்மம்! உலகறிந்த வேளச்சேரி டிராஃபிக். பரபரப்பான காலை நேரம். 9.30 மணி. சிக்னலைக் கடக்க கார் திணறிக் கொண்டிருந்தது. இடதுபக்கம் பார்த்தேன். சாலை ஓரத்தில் ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்திருந்த 30 வயதிருக்கும் ஒருவர், மொபைல் கவர் விற்பனை செய்யும் கடையை அப்போதுதான் திறந்தார். கால்களில் இருந்த செருப்பை கழற்றினார். ஊதுவத்தியை ஏற்றி கடையைச் சுற்றிக்…

யாரையும் பழிவாங்க நினைக்காதீர்கள்!
யாரையும் பழிவாங்க நினைக்காதீர்கள்! யாரையும் பழி வாங்க நினைக்க வேண்டாம்… யாரையும் திருத்தவும் முயற்சிக்க வேண்டாம்… யாரிடமும் சவாலும் விட வேண்டாம்… இதையெல்லாம் நீங்கள் யாரிடம் செய்ய நினைக்கிறீர்களோ அவர்கள் ஏற்கெனவே நல்லவர்கள் என்ற நிலைக்குக் கீழே இருப்பதால் நீங்கள் எதைச் செய்தாலும் அது அவர்கள் கீழ்மையான குணத்தைக் கிளறி விடவே செய்யும். குறிப்பாக வாழ்ந்து…

Work From Home
Work From Home சென்ற வருடம் வேலை கிடைத்து Work From Home வேலை செய்து வரும் அண்ணனுக்கும், இந்த வருடம் வேலை கிடைத்து Work From Home வேலை செய்ய ஆரம்பித்திருக்கும் தங்கைக்கும் அடிதடி சண்டை வருவதை சமாளிக்க முடியவில்லையாம் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்லும் வீடொன்றில் ! கல்லூரியில் காம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி…

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம்!
விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம்! மருத்துவத்துறையில் Ai-ன் பங்களிப்பு குறித்து இன்னும் ஆழமாக தெரிந்துகொள்ள அந்த மருத்துவமனை டீனை சந்திப்பதற்காக காத்திருந்தேன். அப்பாயின்மெண்ட் வாங்கி இருந்த நேரத்துக்கு முன்பே சென்றுவிட்டதால் காத்திருந்தேன். காத்திருந்த நேரத்தில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த சுட்டிப் பையன் வெகுவாகக் கவர்ந்தான். அவனைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் அம்மாவும் பாட்டியும். பேச்சுக்…

யாரையும் எதுவும் சொல்ல முடியலை!
யாரையும் எதுவும் சொல்ல முடியலை! ஆசிரியர் தலைமுடியை திருத்தச் சொல்லியதால் மாணவர் ஒருவர் தற்கொலை என்ற செய்தியை படித்தபோது எனக்கு என்னத் தோன்றுகிறது தெரியுமா? பள்ளியில் என்ன, அலுவலகத்தில் கூட கொஞ்சம் வலுவாக நிர்வாக விதிமுறைகளை சொல்ல முடிவதில்லை. அப்புறம்தானே பள்ளி மாணவர்களைச் சொல்ல? பள்ளி மாணவர்களுக்கு மட்டுமா, பொதுவாக இப்போதெல்லாம் யாரையுமே, அவர்கள் நமக்கு…

மனநலன்!
மனநலன்! எங்கள் குடும்ப நண்பர் ஒருவரது குடும்ப நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். மிக நீண்ட வருடங்கள் கழித்த சந்திப்பு. பரஸ்பர நலன் விசாரிப்புகள் முடிந்த பிறகு, ‘இப்போது உங்கள் பிசினஸ் எப்படி போய்க் கொண்டிருக்கிறது?’ என விசாரித்தவர் அன்பின் நெகிழ்ச்சியாக ‘நீங்கள் ஒரு கம்பெனில வேலை செய்திருந்தா சி.ஈ.ஓ லெவலுக்கு போயிருப்பீங்க…’ என்றார். அதற்கு நான் ‘இப்பவும்…

நீங்கள் டிவி சீரியல் பார்ப்பீர்களா?
நீங்கள் டிவி சீரியல் பார்ப்பீர்களா? நேற்று இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து அவர்கள் இறந்த செய்தியைப் பகிர்ந்த பலர், குறிப்பாக ஆண்கள் தாங்கள் என்னவோ அவர் நடித்து வரும் ‘எதிர் நீச்சல்’ சீரியலைப் பார்க்காததைப் போல தங்கள் மனைவிகள் தான் பார்ப்பதாகவும், அப்போது காதில் விழும் வசனத்தை வைத்து மாரிமுத்து நடிகரின் நடிப்பை வியந்ததாகவும் கூறினார்கள். அதாவது…

The Best!
The Best! இஸ்ரோ (ISRO) சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு பரவலாக காதில் கேட்கும் / கண்களில் படும் வாக்கியம் ‘அரசுப் பள்ளியில் படித்தே விஞ்ஞானி ஆன…’ என்பதே. ‘அரசுப் பள்ளியில் படித்தே…’ என்ற வாக்கியத்தில் உள்ள இழுவை, ஏதோ ஒரு வகையில் அது ஒரு படி கீழ் என்ற நோக்கில் இழுக்கப்படுகிறது. அங்கு படித்தே…

நாற்காலி மேஜையும், தன்னம்பிக்கையும்!
நாற்காலி மேஜையும், தன்னம்பிக்கையும்! நாங்கள் படித்து முடித்து சென்னைக்கு இடம் பெயர முடிவெடுத்து, வீடு மாற்ற ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். நாங்கள் படிக்கப் பயன்படுத்தும் டேபிள் (அப்போதெல்லாம் எல்லோர் வீட்டிலும் ரீடிங் டேபிள் இருக்கும்) கொஞ்சம் உடைந்து போயிருந்ததால் அதை கடையில் போட்டுவிடலாம் என நினைத்து ஓரமாய் போட்டுவிட்டு மற்ற சாமான்களை எல்லாம் வண்டியில் ஏற்றிக்…

குழந்தையாக மாறிடுவோமே!
குழந்தையாக மாறிடுவோமே! ஒரு குடும்ப நிகழ்ச்சி. ஒன்பது வயது சிறுவன் ஒருவன் தன் வயதை ஒத்தவர்களுடன் விளையாடி ஓய்ந்த பின்னர் ஒரு ஓரமாக அமர்ந்து லேகோ வைத்து விளையாட ஆரம்பித்தான். நான் அவன் அருகில் சென்று அமர்ந்து ‘உனக்கு ஸ்கூல் நண்பர்கள் எல்லாம் நிறைய உண்டா?’ என்று பேச்சை ஆரம்பித்தேன். ‘ஓ. நிறைய உண்டு. என்…