
யாரையும் எதுவும் சொல்ல முடியலை!
யாரையும் எதுவும் சொல்ல முடியலை! ஆசிரியர் தலைமுடியை திருத்தச் சொல்லியதால் மாணவர் ஒருவர் தற்கொலை என்ற செய்தியை படித்தபோது எனக்கு என்னத் தோன்றுகிறது தெரியுமா? பள்ளியில் என்ன, அலுவலகத்தில் கூட கொஞ்சம் வலுவாக நிர்வாக விதிமுறைகளை சொல்ல முடிவதில்லை. அப்புறம்தானே பள்ளி மாணவர்களைச் சொல்ல? பள்ளி மாணவர்களுக்கு மட்டுமா, பொதுவாக இப்போதெல்லாம் யாரையுமே, அவர்கள் நமக்கு…

மனநலன்!
மனநலன்! எங்கள் குடும்ப நண்பர் ஒருவரது குடும்ப நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். மிக நீண்ட வருடங்கள் கழித்த சந்திப்பு. பரஸ்பர நலன் விசாரிப்புகள் முடிந்த பிறகு, ‘இப்போது உங்கள் பிசினஸ் எப்படி போய்க் கொண்டிருக்கிறது?’ என விசாரித்தவர் அன்பின் நெகிழ்ச்சியாக ‘நீங்கள் ஒரு கம்பெனில வேலை செய்திருந்தா சி.ஈ.ஓ லெவலுக்கு போயிருப்பீங்க…’ என்றார். அதற்கு நான் ‘இப்பவும்…

நீங்கள் டிவி சீரியல் பார்ப்பீர்களா?
நீங்கள் டிவி சீரியல் பார்ப்பீர்களா? நேற்று இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து அவர்கள் இறந்த செய்தியைப் பகிர்ந்த பலர், குறிப்பாக ஆண்கள் தாங்கள் என்னவோ அவர் நடித்து வரும் ‘எதிர் நீச்சல்’ சீரியலைப் பார்க்காததைப் போல தங்கள் மனைவிகள் தான் பார்ப்பதாகவும், அப்போது காதில் விழும் வசனத்தை வைத்து மாரிமுத்து நடிகரின் நடிப்பை வியந்ததாகவும் கூறினார்கள். அதாவது…

The Best!
The Best! இஸ்ரோ (ISRO) சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு பரவலாக காதில் கேட்கும் / கண்களில் படும் வாக்கியம் ‘அரசுப் பள்ளியில் படித்தே விஞ்ஞானி ஆன…’ என்பதே. ‘அரசுப் பள்ளியில் படித்தே…’ என்ற வாக்கியத்தில் உள்ள இழுவை, ஏதோ ஒரு வகையில் அது ஒரு படி கீழ் என்ற நோக்கில் இழுக்கப்படுகிறது. அங்கு படித்தே…

நாற்காலி மேஜையும், தன்னம்பிக்கையும்!
நாற்காலி மேஜையும், தன்னம்பிக்கையும்! நாங்கள் படித்து முடித்து சென்னைக்கு இடம் பெயர முடிவெடுத்து, வீடு மாற்ற ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். நாங்கள் படிக்கப் பயன்படுத்தும் டேபிள் (அப்போதெல்லாம் எல்லோர் வீட்டிலும் ரீடிங் டேபிள் இருக்கும்) கொஞ்சம் உடைந்து போயிருந்ததால் அதை கடையில் போட்டுவிடலாம் என நினைத்து ஓரமாய் போட்டுவிட்டு மற்ற சாமான்களை எல்லாம் வண்டியில் ஏற்றிக்…

குழந்தையாக மாறிடுவோமே!
குழந்தையாக மாறிடுவோமே! ஒரு குடும்ப நிகழ்ச்சி. ஒன்பது வயது சிறுவன் ஒருவன் தன் வயதை ஒத்தவர்களுடன் விளையாடி ஓய்ந்த பின்னர் ஒரு ஓரமாக அமர்ந்து லேகோ வைத்து விளையாட ஆரம்பித்தான். நான் அவன் அருகில் சென்று அமர்ந்து ‘உனக்கு ஸ்கூல் நண்பர்கள் எல்லாம் நிறைய உண்டா?’ என்று பேச்சை ஆரம்பித்தேன். ‘ஓ. நிறைய உண்டு. என்…

வெற்றியின் பின்னணி!
வெற்றியின் பின்னணி! ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை (ஆண் / பெண்) ஒரு துறையில் வெற்றி பெற்று பொதுவெளியில் புகழுடன் திகழ்கிறது என்றால் அதற்குக் காரணம் அப்பா அம்மா என இரண்டு பேருடைய முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம். அப்போதுதான் முழு மனநிறைவுடன் அந்தத் துறையில் மென்மேலும் முன்னேற கவனம் செலுத்த முடியும். குழந்தை…

தலைமுறை கடந்தும் பேசும் படைப்புகள்!
தலைமுறை கடந்தும் பேசும் படைப்புகள்! பெற்றோருடன் பணிபுரிந்தவருக்கு சதாபிஷேகம். சற்றேறக்குறைய என் பெற்றோரின் சமவயது. நான் பிறப்பதற்கு முன்பில் இருந்தே குடும்ப நண்பர்கள். தொலைபேசித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள். சமீபத்தில் இஸ்ரோவில் பணியாற்றும் ஒட்டுமொத்தப் பெண்களின் உற்சாகமான புகைப்படத்தைப் பார்த்தபோது எப்படிப்பட்ட மனமகிழ்ச்சி உண்டானதோ அதைப்போல் அங்கு வந்திருந்த வயதில்…

சாதனையும், குடும்பப் பொருளாதாரமும்!
சாதனையும், குடும்பப் பொருளாதாரமும்! செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் அம்மாவிடம் பேட்டி எடுக்கிறார்கள் ஒரு மீடியாவில். அவர் அம்மா தன்னம்பிக்கையுடன் சிரித்துக்கொண்டுதான் பேசுகிறார். நடுத்தரக் குடும்பத்தில் இரண்டு குழந்தைகளை படிக்க வைத்து இரண்டு பேரையும் செஸ் போட்டிகளுக்கு தயார்படுத்தியதை கொஞ்சமும் சுயபச்சாதாபம் இல்லாமல் கம்பீரமாக பேசுகிறார். ஆனால் பேட்டி எடுப்பவர், ‘எப்படி கஷ்டப்பட்டீங்கன்னு சொல்லுங்க…’ என்று பலமுறை…

ஆத்மார்த்தமான விஷயங்கள்!
ஆத்மார்த்தமான விஷயங்கள்! ஒருவர் நம்மிடம் சில விஷயங்களை ஆத்மார்த்தமாக பகிர்ந்திருக்கிறார் என்றால் *மறந்தும்* அதை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது *உத்தமம்* என்றால்… அந்த விஷயத்தை *அவர்களிடமே கூட* நீங்கள் இப்படி என்னிடம் ஆத்மார்த்தமாக சொல்லி இருந்தீர்கள் என கூறி பெருமைப்பட்டுக் கொள்ளாமலோ அல்லது எடுத்தாளாமலோ அல்லது நினைவு கூறாமலோ இருப்பது *படு உத்தமம்*. ஏனெனில் நாம்…