
ஹலோ With காம்கேர் – 2 : துரோகம் செய்தவர்களை மறப்பது எப்படி?
ஹலோ with காம்கேர் – 2 ஜனவரி 2, 2020 கேள்வி: துரோகம் செய்தவர்களை மறப்பது எப்படி? துரோகம். எத்தனை வலி நிறைந்த வார்த்தை. உழைப்பாலும், உணர்வாலும், பொருளாலும் நம்மை ஏய்ப்பவர்களின் செயல்பாடுகள் எத்தனை வலி மிகுந்ததாக இருக்கும் என்பதை அதை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர முடியும். நம் உழைப்பைச் சுரண்டி அதற்கு தக்க சம்மானமும்,…

ஹலோ With காம்கேர் – 1 : சுயத்தை இழக்காமல் வாழ இயலுமா?
ஹலோ with காம்கேர் – 1 ஜனவரி 1, 2020 கேள்வி: தன் சுயத்தை இழக்காமல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா? நிச்சயமாக ஜெயிக்க முடியும். தம்மைத் தாமே மதிப்பவர்களுக்கு அது சாத்தியமே. எந்த ஒரு விஷயத்தையும் நமக்கு அதில் ஈடுபாடு இல்லாமல் செய்யவே முடியாது. அலுவலக மீட்டிங், நண்பர்களின் அன்புத்தொல்லை என்று சொல்லிக்கொண்டு மது அருந்துவதையும்…

ஹலோ With காம்கேர்
ஹலோ with காம்கேர் நாளை 2020 – ம் ஆண்டின் தொடக்க நாள். இன்று ஜனவரி 1, 2019 அன்று தொடங்கிய ‘இந்த நாள் இனிய நாள்’ பதிவுக்கான 366-வது எபிசோட். யாருக்கும் அறிவுரை சொல்லவோ, யாரிடமும் என்னுடைய கருத்துக்களை திணிப்பதற்காகவோ இந்தப் பதிவைத் தொடங்கவில்லை. இந்தத் தொடர் மூலம் எனக்குத் தெரிந்ததை நான் உணர்ந்ததை நான்…

அறம் வளர்ப்போம் 1-5
அறம் வளர்ப்போம்-1 ஜனவரி 1, 2020 அறம் என்றால் என்ன? அன்புதான் அறம். அறம்தான் அன்பு. நம்மால் முடிந்ததை தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து உதவுவதே அறம். அறம் என்பது பொருளாகவோ, பணமாகவோ கொடுப்பது மட்டும் அல்ல. எதுவெல்லாம் நல்லதோ அதுவெல்லாம் அறம். சொல்லாலும் செயலாலும் மனதாலும் நல்லது செய்வது அனைத்துமே அறம். அந்த அறமே அன்பு. சோர்வுற்றிருக்கும்…

வாழ்க்கையின் OTP-17 (புதிய தலைமுறை பெண் – டிசம்பர் 2019)
சில வாரங்களுக்கு முன்னர் கற்றறிந்த கல்வியாளர்கள் சந்திப்பில் எங்கள் உரையாடலுக்குப் பிறகு எனக்கு Uncompromised Honesty என்ற அங்கீகாரம் கிடைத்தது. இது பட்டமோ, விருதோ அல்ல. என்னுடைய நேர்மையான செயல்பாடுகளுக்கு என்னைவிட வயதில் பெரியவர்கள் மனதார வாழ்த்திய மாபெரும் அங்கீகாரம். இதன் தாக்கத்தில், படித்து முடித்துவிட்டு திறமைகளுடன் கனவுகளையும் சுமந்துகொண்டு கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் இருந்து…

ராஜகோபால கனபாடிகள்!
ராஜகோபால கனபாடிகள்! எங்கள் நெருங்கிய உறவினரும் ஆகச் சிறந்த வேதவித்தகருமான நன்னிலம் ராஜகோபால கனபாடிகள் (56) டிசம்பர் 24-ம் தேதி இரவு 10 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். இவர் சிறந்த வேத வித்வான். பாரம்பரியமான வைதீகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். வைதீகஸ்ரீ என்ற வேத பத்திரிகை நடத்தி வந்தார். http://www.vaithikasri.com/. பல்வேறு ஆன்மிக பத்திரிகைகளில்…

பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்க!
(NCBH குழும வெளியீடு, போன்: 044-26251968, 044-26258410, 044-26241288) சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட 2013–ம் ஆண்டு முழுவதும் ‘விவேகானந்தம்150 டாட் காம்’ என்ற இணையதளத்தில் விவேகானந்தர் குறித்த கட்டுரைகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தனர். அந்த இணையதளத்துக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் செயல்படும் வாய்ப்பும் கிட்டியது. அந்த வருடம் முழுவதும் விவேகானந்தர்…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[9] : ஆராய வேண்டாம், புரிந்துகொள்வோம்! (நம் தோழி)
நேற்று ஓர் ஓட்டல் வாசலில் ஆரஞ்சு கலர் டீ-ஷர்ட்டுடன் கவுண்டரில் பில்லை நீட்டிக்கொண்டு பார்சலுக்காக காத்து நிற்கும் இளைஞர் கூட்டத்தைக் கடந்து வந்தபோது அவர்களில் பெரும்பாலானோர் இன்ஜினியரிங் படித்திருக்கிறார்கள் என்று படித்த செய்தியும் நினைவுக்கு வந்தது. மொபைல் App-ல் உணவை ஆர்டர் செய்கின்றவர்களுக்கு அவர்கள் சொல்லும் ஓட்டலில் அவர்கள் குறிப்பிடும் உணவை வாங்கி அவர்கள் இருப்பிடத்துக்கே…

தயவு செய்து புகைக்காதீர்கள் (அமுதசுரபி டிசம்பர் 2019)
இந்த நாள் இனிய நாள் – 305 சென்ற வாரம் தாம்பரத்திலுள்ள இந்து மிஷன் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கு நுழைவாயிலில் எடுத்த புகைப்படம்தான் இது. என் உறவினருக்கு லங்க்ஸில் பிரச்சனை. வயது 70+. மூச்சு விடமுடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருகிறார். லங்க்ஸின் ஒரு பகுதி பாதிப்படைந்துவிட்டது. அருகிலேயே ஒரு இளைஞர். வயது 30+. அவருக்கும் அதே பிரச்சனை. மூச்சு…

எழுத்தும் கிரியேட்டிவிட்டியும் தொழில்நுட்பமும் – நேர்காணல்! (November 17, 2019)
எத்தனையோ நேர்காணல்கள். என் பிசினஸ் குறித்தும், சாஃப்ட்வேர் தயாரிப்புகள் குறித்தும் நிறைய பேசியிருக்கிறேன். அவற்றில் என் மனதுக்கு நெருக்கமான ஒரே ஒரு கேள்வியையும் அதற்கு என் பதிலையும் மட்டும் பதிவிடுகிறேன். ‘உங்கள் எழுத்தையும் கிரியேட்டிவிட்டியையும் தொழில்நுட்பத்துடன் எப்படி இணைக்க முடிந்தது?’ நான் உருவாக்கி வளர்த்தெடுத்துள்ள எங்கள் காம்கேர் நிறுவனத்தின் அச்சாரமே என் படிப்பும், திறமையுமே….