கடமையும், பொறுப்பும்!

  கடமையும், பொறுப்பும்! எங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு காரணம் வைத்துக்கொண்டு விருந்தினர்களை வரவழைத்து உபசரிப்போம். நேற்று அப்பாவுக்கு நட்சத்திரப் பிறந்த நாள். இந்த முறை எங்கள் விருந்தினர் அப்பாவின் மாமா பெண் 86 வயதான பாட்டி, 96 வயதான தாத்தா. உடன் வந்திருந்த சஷ்டியப்த பூர்த்தி நிறைவடைந்த அவர்களின் மகனுக்கும், மருமகளுக்கும் என் அப்பா…

பாதுகாப்பாய் இருப்போம்!

பாதுகாப்பாய் இருப்போம்! நேற்று மாலை. சரியான ராகு கால நேரம் 4.40. எங்கள் குடியிருப்பில் நடந்த ஒரு சம்பவம். ஆணும் பெண்ணுமாய் இரண்டு இளைஞர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் வந்தார்கள். வயது 20, 21 தான் இருக்கும். மார்டனாக உடை அணிந்திருந்தார்கள். ஆங்கிலமும் தமிழும் கலந்து அழகாகவே பேசினார்கள். எங்கள் வீட்டில் அப்பாதான் கதவைத் திறந்தார். அந்த…

விருட்சங்கள்!

விருட்சங்கள்! விதைகளின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்! ஒரு முறை எங்கள் நெடுந்தூரப் பயணத்தில் எங்கள் கார் டிரைவாக வந்தவர் பெயர் நரேஷ் குமார். நான் வழக்கமாக எல்லா டிரைவர்களிடமும் பேச்சுக் கொடுப்பதைப் போல்தான் அவரிடமும் பெயர் கேட்டேன். அவர் தன் பெயரை சொல்லிவிட்டு, எங்கப்பாவுக்கு விவேகானந்தர் மேல் நல்ல மரியாதை மேடம், அதனால் எனக்கு நரேஷ்குமார் என்று…

கறக்கும் வரை கறந்து கொள்வோமே!

கறக்கும் வரை கறந்து கொள்வோமே! பத்து ஆண்டுகளுக்கு முன்பே, பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் கிராமப்புறத்தில் இருந்து பேசுவதாக அறிமுகம் செய்துகொண்ட வாசகர் ஒருவர் ‘மொபைலில் நம்முடன் மற்றவர்கள் பேசுவதை நாம் எப்படி ரெகார்ட் செய்யலாம்?’ என கேட்டார். அப்போதெல்லாம் அதற்கு ஆப்கள் வெளிவரவில்லை. அதனால் அவர் அந்த சந்தேகத்தை கேட்டார். இதற்கு முன்பே இப்படி பல…

தார்மீகத் தயக்கம்!

தார்மீகத் தயக்கம்! என் 32 ஆண்டு கால தொழில்நுட்ப அனுபவத்தில் எங்கள் காம்கேரில் நாங்கள் மேற்கொண்ட அத்தனை ஆராய்ச்சிகள் மற்றும் அவை சார்ந்த ப்ராஜெக்ட்டுகளினாலும் கிடைத்த அனுபவங்களை எழுத்து, பேச்சு, ஓவியம், ஆடியோ, வீடியோ என எந்த வகையில் எல்லாம் இந்த சமுதாயத்துக்குத் திருப்பி அளிக்க வேண்டுமோ அதையெல்லாம் அவ்வப்பொழுது அந்தந்த காலகட்டத்திலேயே கொடுத்து வந்துள்ளேன்….

இயந்திரத் தமிழ்!

இயந்திரத் தமிழ்! சமீபகாலமாய் தமிழில் எழுதப்பட்ட சில தொழில்நுட்பக் கட்டுரைகளை வாசிக்கிறேன். தமிழில் தொழில்நுட்பத்தை எப்படி எழுதி இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவதற்காகவே. மிகைப்படுத்தல் இல்லாமல் சொல்ல வேண்டுமானால், அவற்றுக்கு ‘இயந்திரத் தமிழ்’ என பெயர் வைத்துவிடலாம் என்பதுபோல் வெகு கடினமான மொழி நடை. நிச்சயம் அவை எழுத்தாளர்களின் சிந்தனை நடை அல்ல. தங்கள் அனுபவத்திலும் எழுதவில்லை….

‘ஸ்ட்ரெஸ்’

‘ஸ்ட்ரெஸ்’ எதுவும் இல்லாததால் வருவதல்ல, எல்லாமே இருப்பதால் வருவது. உடன் பிறந்தோரிடம் கொஞ்சம் சண்டை, அப்பா அம்மாவிடம் செல்ல கோப தாபங்கள், உறவினர்களுடன் வெட்டிப் பேச்சுகள், ஒருவர் செய்த உதவியை நீண்ட நாட்கள் (காலம் முழுவதும்கூட) நினைவில் வைத்து போற்றுதல், நேரம் கிடைக்கும்போது உதவி செய்தவரிடமே அதை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்து நெகிழ்ச்சியாய் இருப்பது, தேவை…

பாகுபாடு தொடங்கும் இடம்!

பாகுபாடு தொடங்கும் இடம்! அந்த குடியிருப்பு செக்கியூரிட்டி ஒரு பெண். ஐம்பத்தைந்தை தாண்டி இருக்கும். நான் அவரை பார்க்க ஆரம்பித்தது பத்து பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர், பட்டறையில் பணிக்குச் செல்லும் கணவன் மற்றும் ஐந்து குழந்தைகளுடன் அந்தக் குடியிருப்பிலேயே வசித்து வந்தார். 8 வீடுகள் கொண்ட குடியிருப்புதான். ஒரு சமையல் அறை. ஒரு குளியல் அறை….

பெற்றோரை இழக்கும் குழந்தைகள் பாடும், மனநலம் பாதிக்கப்படுவர் பாடும்!

பெற்றோரை இழக்கும் குழந்தைகள் பாடும், மனநலம் பாதிக்கப்படுவர் பாடும்! ஒடிசா ரயில் விபத்தை கேள்விப்பட்ட போது நான் தயாரித்துக் கொண்டிருந்த மெட்டாவெர்ஸ் பிரசன்டேஷனை தொடர்ந்து தயாரிக்க முடியாமல் அப்படியே சில மணி நேரங்கள் நிறுத்தி வைத்தேன். என்ன தொழில்நுட்பம் வந்தால் என்ன? என்ற ஒரு வறட்சியான மனநிலைக்குள் தள்ளப்பட்டேன். விபத்துக்கான காரணம் தொழில்நுட்பத்தை மீறிய மனிதத்…

நாம் என்ன AI ரோபோக்களா?

நாம் என்ன AI ரோபோக்களா? வயதில் மூத்த பெண்மணி. இலக்கியத் துறையில் சாதித்தவர். சில வருடங்களுக்கு முன்னர், இலக்கிய உலகில் அவரது 70-ஐக் கொண்டாடினார்கள். எனக்கும் அழைப்பு வாட்ஸ் அப்பில் வந்தது, நிகழ்ச்சிக்கு முதல்நாள். என்னுடன் நட்பாகப் பேசுவார் என்பதால் வாட்ஸ் அப் அழைப்பிற்கே அகமகிழ்ந்து அவரை நானே போனில் அழைத்துப் பேசினேன். மனமார வாழ்த்தினேன்….

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon