
மொழிபெயர்ப்பா? முழிபெயர்ப்பா?
மொழிபெயர்ப்பா? முழிபெயர்ப்பா? ஆன்லைன் பத்திரிகை ஒன்று. கொஞ்சம் பிரபலமானதும் கூட. அதில் சமீபத்தில் தமிழில் எழுதப்பட்டிருந்த ஒரு தொழில்நுட்பக் கட்டுரையை படித்தேன். எழுதியவர் சிறு வயது பெண்தான். இளங்கலை கம்ப்யூட்டர் சயின்ஸ் இப்போதுதான் முடித்துள்ளார் என கட்டுரையாளர் குறிப்பில் போடப்பட்டிருந்தது. அப்படிப் பார்த்தால் வயது 20, 21 க்குள்தான் இருக்க வேண்டும். அவர் பயன்படுத்தி இருந்த…

Communication makes the successful completion of any task!
Communication makes the successful completion of any task! ஒரு சின்ன கருத்து வேறுபாட்டில் என்னை அதிகம் அறிந்திராத ஒருவர் என்னிடம் ‘நீங்கள் ரொம்ப சுயநலம். உங்களுக்குத் தேவை என்றால் நான்கு முறை அழைக்கிறீர்கள். இரண்டு முறை வாட்ஸ் அப்பில் நினைவூட்டுகிறீர்கள்…’ என்றார். இத்தனைக்கும் அவர் ஒன்றும் எனக்காக மலையைத் தூக்கி வைக்கும் உதவியை…

நெஞ்சு ஒடிவதைவிட கால் ஒடிவது!
நெஞ்சு ஒடிவதைவிட கால் ஒடிவது! எழுத்தாளர் ஜெயகாந்தன் ’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலில் நாயகியின் காலை முடமாக்குவதாக காட்டியிருப்பதற்கு, ‘நெஞ்சு ஒடிவதைவிட கால் ஒடிவது குறைந்த விபத்தல்லவா?’ அதனால்தான் அப்படி கதையின் போக்கைக் கொண்டு சென்றேன் என்று அந்த நாவலின் முன்னுரையில் எழுதி இருப்பார். அந்த நாவலை முழுமையாகப் படித்திருப்பவர்களுக்கு அவர் என்ன கோணத்தில்…

தர்மங்கள் தழைத்தோங்க!
தர்மங்கள் தழைத்தோங்க! ஓவியர்: ஸ்யாம். கதை எழுதியவர்: கே. புவனேஸ்வரி கதை வெளியான பத்திரிகை: ராஜம் இந்தக் கதைக்கு ஓவியம் வரைந்தபோது ஓவியருக்கு வயது 15. இந்தக் கதை எழுதியபோது நான் கல்லூரியில் (பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்) அடி எடுத்து வைத்திருந்தேன். அப்போது ராஜம் பத்திரிகையின் ஆசிரியர் / எடிட்டர் சந்திரா ராஜசேகர் அவர்கள். இந்தக்…

பேசக் கூட லாஜிக்கா?
பேசக் கூட லாஜிக்கா? நான் பரம்பரை மேடைப் பேச்சாளர் அல்ல. பள்ளி கல்லூரியில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டதும் இல்லை. ஆனாலும் பார்வையாளர்கள் கூர்ந்து கவனிக்கும் அளவுக்கு பேச முடிகிறது என்றால் அதற்கு நான் பின்பற்றும் மூன்று உத்திகள்… 1. என் முன்னால் யாருமே இல்லை. பார்வையாளர் பகுதியில் மிக பிரமாண்டமான கண்ணாடி மட்டுமே…

நேரம் ரொம்ப முக்கியம்!
நேரம் ரொம்ப முக்கியம்! பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, விருது வழங்கி, வாழ்த்துரை நிகழ்த்த சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருக்கிறார்கள். என்ன நிகழ்ச்சி? யார் நடத்துவது? என்று? – விவரம் விரைவில் பதிவிடுகிறேன். அவர்கள் அனுப்பி இருந்த செய்தியில் எனக்குப் பிடித்த விஷயம் நிகழ்ச்சி நடைபெறும் நேரம். மாலை 4 to…

சேவைன்னா என்ன?
சேவைன்ன என்ன? சேவைக்கும், சேவை மனப்பான்மைக்குமான ஒப்பீட்டை திரும்பவும் விளக்கும் சூழல் சமீபத்தில்! ரொம்பவெல்லாம் என்னை பேச வைக்கவில்லை. சின்ன உதாரணம் சொன்னேன். புரிந்துகொண்டார்கள். நல்ல டிராஃபிக். அந்த இடத்தில் அன்று பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் மிகவும் பிசியாக போக்குவரத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கண் தெரியாத பெரியவர் ஒருவர் சாலையைக் கடக்க…

‘சுடசுட’ப்பாக இயங்கிய ஓட்டல்!
அண்ணா சாலையில் ஒரு பணியை முடித்துகொண்டு சரவணபவன் ஓட்டலில் காபி குடிக்கலாம் என நினைத்துத் தேடினேன். காணவில்லை. சென்னையில் பல இடங்களில் சரவண பவன் மூடப்பட்டு சிலபல வருடங்கள் ஆகிவிட்டன என தெரிந்தாலும் பிசியான இடங்களில் மூடப்பட்டிருக்காது என்ற அநுமானம். அந்தப் பகுதி முழுவதும் புதிதாக எழுப்பப்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள். சரவண பவன் முன்பிருந்த இடத்தில்,…

சென்னையில் பன்னாட்டுப் புத்தகக் காட்சி – 2023
சென்னையில் பன்னாட்டுப் புத்தகக் காட்சி – 2023 சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக்காட்சி, இந்த ஆண்டு பன்னாட்டுப் புத்தகக் காட்சியாகவும் விரிவடைந்துள்ளது. பல நாடுகளில் இருந்து வந்திருக்கும் பதிப்பாளர்களுடன் நமது பதிப்பாளர்கள் ஒப்பந்தமிடவும் வாய்ப்பாக இது அமையும் என்பதில் ஐயமில்லை. உறுதியாக ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும், அவர்களின் புத்தக வடிவமைப்புகள்…

உணர்வுகளை பங்கீடு செய்ய வேண்டாமே!
உணர்வுகளை பங்கீடு செய்ய வேண்டாமே! யாரேனும் உங்களிடம் ‘உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும், உங்கள் அணுகுமுறை நன்றாக உள்ளது’ என்று சொன்னால் ‘என்னை எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும்…’ என்று பெருமைப்பட ஆரம்பிக்க வேண்டாம். ஏன் என்றால் பொதுவாகவே ஒருவரின் தனிப்பட்ட உணர்வினை பொதுப்படையாக்கினால் அந்த உணர்வின் வீச்சு நீர்த்துப் போகும். ‘அப்படியா, ரொம்ப சந்தோஷம்.’ என்ற…