கூகுள் டிரைவில் புகைப்படம் / வீடியோவை பதிவாக்கும் முறை

யு-டியூபுக்கு மொபைலில் வீடியோ எடுத்து அனுப்புவதற்கான வழிமுறைகள் வீடியோ எடுக்கும்போது நல்ல வெளிச்சத்தில் எடுக்க வேண்டும். கை நடுங்காமல், மொபைலை ஆட்டாமல், பேசுபவரது ஆடியோ தெளிவாக பதிவாகும் தொலைவில் மொபைலை வைத்துக்கொண்டு வீடியோ எடுக்க வேண்டும். வாட்ஸ் அப்பில் வீடியோக்களை நேரடியாக ஃபார்வேர்ட் செய்தால் வீடியோ குவாலிட்டி குறைந்துவிடும்  வீடியோக்களை கூகுள் டிரைவ் வழியாக அனுப்ப வேண்டும். எந்த மொபைலில் வீடியோ எடுக்கிறீர்களோ அந்த மொபைலில் இருந்து மட்டுமே கூகுள்…

ஹலோ With காம்கேர் -31: நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைகிறதா?

ஹலோ with காம்கேர் – 31 ஜனவரி 31, 2020 கேள்வி: நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைகிறதா? சில வருடங்களுக்கு முன்னர் என் நிறுவனத்தின் அனிமேஷன் பிரிவுக்கு ஒரு நேர்காணல். ஒரு மணிநேரத்துக்கு நான்கு பேர் என்ற கணக்கில் செயல்முறை விளக்கமாக ஒரு கான்செப்ட் கொடுத்து அதை அனிமேஷன் செய்யச் சொல்லி இருந்தேன். காலை ஏழு மணியில் இருந்து இரவு எட்டு மணிவரை தொடர்ச்சியாக தேர்வு  நடந்துகொண்டிருந்தது….

ஹலோ With காம்கேர் -30: டீம் ஒர்க்கில் குளறுபடி ஏற்பட்டால் என்ன நடக்கும்?

ஹலோ with காம்கேர் – 30 ஜனவரி 30, 2020 கேள்வி: டீம் ஒர்க்கில் குளறுபடி ஏற்பட்டால் என்ன நடக்கும்? அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது சென்னையில் பரபரப்பாக இயங்கிவரும் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததால், தொடர்ச்சியாக அங்குதான் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறோம். ஒவ்வொரு முறையும் அப்பாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பொதுப் பரிசோதனை செய்த பிறகு இரத்தப் பரிசோதனை, ஈ.சி.ஜி, எக்கோ, ட்ரெட் மில் என வரிசையாக…

ஹலோ With காம்கேர் -29: பேருந்தில்கூட அனிமேஷன்களை உருவாக்க முடியுமா?

ஹலோ with காம்கேர் – 29 ஜனவரி 29, 2020 கேள்வி: ஆடி அசையும் பேருந்தில்கூட அனிமேஷன்களை உருவாக்க முடியுமா? மரங்கள் சூழ்ந்த அழகிய கிராமத்தில் இயங்குகின்ற தொடக்கப்பள்ளியில் பள்ளிநேரம் முடிவடைகிறது. மாணவ மாணவிகளை வீட்டுக்கு அனுப்பிய பிறகு தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும் வீட்டுக்குக் கிளம்புகிறார்கள். ஓரிருவர் ஸ்கூட்டியில் கிளம்பிச் செல்கிறார்கள். மற்றவர்கள் பேருந்து நிறுத்தத்தில் பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறார்கள். பேருந்து வந்ததும் கூட்டத்தில் ஏறி  கிடைக்கின்ற இடத்தில் அமர்ந்து…

ஹலோ With காம்கேர் -28: நிஜத்திலும் கனவிலும் ஏற்பட்ட இன்ப அதிர்வலைகள்

ஹலோ with காம்கேர் – 28 ஜனவரி 28, 2020 கேள்வி: சமீபத்தில் எனக்கு நிஜத்திலும் கனவிலும் ஏற்பட்ட இன்ப அதிர்வலைகள் என்ன தெரியுமா? நேற்று இரவு 9.30. நேற்று அந்த நேரத்தில் மெசஞ்சரில் ஒரு ஃபேஸ்புக் நட்பிடம் இருந்து ஸ்கேன் செய்யப்பட்ட போட்டோக்கள் வந்திருந்தன. சிவகாசி ஸ்ரீஷெண்பகவிநாயகர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கும் எஸ்.சந்தியா என்ற மாணவி சோஷியல் சயின்ஸ் பாடத்துக்காக தமிழ்நாட்டை சேர்ந்த 10 தலைசிறந்த…

ஹலோ With காம்கேர் -27: திருமணம் என்பது வெறும் வைபவம் மட்டும்தானா?

ஹலோ with காம்கேர் – 27 ஜனவரி 27, 2020 கேள்வி: திருமணம் என்பது வெறும் வைபவம் மட்டும்தானா? பதினைந்து வருடங்களுக்கு முன்னர் என்னிடம் பணி புரிந்த அனிமேட்டர் ஒருவர் தன் மகளின் திருமண அழைப்பிதழை வாட்ஸ் அப்பில் அனுப்பியதுடன் என்னையும் பெற்றோரையும் நேரிலும் வந்து அழைத்திருந்தார். என்னிடம் பணிபுரிந்தபோது அவர் மகளுக்கு பன்னிரெண்டு பதிமூன்று வயதிருக்கும். நேற்று ரிசப்ஷனுக்கு சென்றிருந்தேன். சிறுமியாய் பார்த்தது. பிறகு இப்போதுதான் திருமணக் கோலத்தில்…

ஹலோ With காம்கேர் -26: நேர்மையாக இருப்பதால் என்னை யாருக்குமே பிடிப்பதில்லை என புலம்பும் நபரா நீங்கள்?

ஹலோ with காம்கேர் – 26 ஜனவரி 26, 2020 கேள்வி: நான் நேர்மையாக இருப்பதால் என்னை யாருக்குமே பிடிப்பதில்லை என புலம்பும் நபரா நீங்கள்? நான் நேர்மையாக இருப்பதால் என்னை யாருக்கும் பிடிப்பதில்லை என்று சற்றே கழிவிரக்கத்துடன் பேசுகின்றவர்களை மேலோட்டமாக நோக்கினால் அவர்களிடம் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையுடன் பேசுவதாகத் தோன்றும். ஆனால் உண்மையில் அவர்களிடம் இருப்பது தன்னைப் பற்றிய அதீதமான உயர்வு மனப்பான்மையே. நேர்மையாக இருக்கிறேன் என்று…

அறம் வளர்ப்போம் 27-33

அறம் வளர்ப்போம்-27 ஜனவரி 27, 2020 அடக்கம் –  அமைதியை கொடுக்கும், அறியாமையை விலக்கும், பெருந்தன்மையை வளர்க்கும். எத்தனை அறிவாளியாக இருந்தாகும் அடக்கமாக இருக்கும்போது நமக்குள் ஓர் அமைதி உண்டாகும். அடக்கமாக இருக்கும்போது நிறைய சிந்திக்க நேரம் இருக்கும். நம் அறியாமை விலகும். அடக்கமாக இருந்தால் நம் பெருந்தன்மை மனப்பான்மை கூடும். காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO Compcare Software, Chennai அறம் வளர்ப்போம்-28 ஜனவரி 28, 2020 வாய்மை…

அறம் வளர்ப்போம் 20-26

அறம் வளர்ப்போம்-20 ஜனவரி 20, 2020 நம்பிக்கை – குழப்பமின்மை, உறுதியாக இருத்தல், கவனக்குவிப்பு எந்த ஒரு செயலையும் குழப்பமில்லாமல் செய்வதற்கு அந்த செயலை நம்பிகையுடன் தொடங்க வேண்டும். ஆக, குழப்பமின்மை நம்பிக்கையைக் கொடுக்கும் சக்தி வாய்ந்தது. நாம் எடுத்துக்கொண்ட முயற்சி எதுவாக இருந்தாலும் அதை உறுதியாகப் பற்றிக்கொண்டு செயல்படும்போது நமக்குள் நம்பிக்கை ஊற்றெடுக்கும். எந்த ஒரு செயலையும் முழு கவனத்துடன் செய்யும்போது அந்த செயல் மீதான நம்பிக்கை உறுதி…

PON TV Chennai யு-டியூப் சேனலில் என் வாசிப்பு அனுபவம் குறித்த நேர்காணல்!

 ‘வாசிப்பு எனக்கு என்னெவெல்லாம் கொடுத்தது’ என்ற தலைப்பில்  என் வாசிப்பு அனுபவம் குறித்து திரு.பொன். காசிராஜன் அவர்களின் பொன் டிவி தமிழ் (Pon Tv Tamil) யு-டியூப் சேனலுக்காக நான் கொடுத்த நேர்காணல்! https://youtu.be/EpHiX2xjpGk வீடியோவில் பேசியுள்ள விவரங்கள் கட்டுரை வடிவில்! பெரும்பாலும் வாசிப்பு என்றாலே கதை, கவிதை, கட்டுரைகள், இலக்கிய புத்தகங்கள் படிப்பதையே வாசிப்பாகக் கருதுகிறார்கள். வாசிப்பு என்பது எல்லா துறையினருக்குமே மிகவும் அவசியம். வாசித்தால் மட்டுமே அவரவர்…

error: Content is protected !!