#கவிதை: பாசமும், மன்னிப்பும்!

  பாசமும், மன்னிப்பும்! குழந்தைகளிடம் காட்டிய கோபம் குறையும்போது நாம் கொடுக்கும் உணவில் நிரம்பி வழிவது பாசம்! வயதில் முதிர்ந்த பெரியோர்களிடம் காட்டிய கோபம் குறையும்போது நாம் கொடுக்கும் உணவில் ததும்பி வழிவது மன்னிப்பு! அன்புடன் காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO Compcare Software ஏப்ரல் 8, 2022 #காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai

ஸ்ரீசக்தி2022 விருது – Inner Wheel District 323 & Ladies Special Magazine (March 27, 2022)

Inner Wheel District 323 மற்றும் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை இணைந்து நடத்திய ஸ்ரீசக்தி +ve 2022 நிகழ்ச்சி  மார்ச் 26, 2022 மாலை 6.30 மணிக்கு Zoom Meeting மூலம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு ஸ்ரீசக்தி2022 (Shree Shakthi 2022) விருது வழங்கி கெளரவித்தார்கள். யார் யாரெல்லாம் தன் கடின உழைப்பால்…

க்ளப் ஹவுஸ்: ராம்ஜிக்கு ஸ்கிரிப்ட் எழுதத் தெரியலையே! (March 16, 2022)

  க்ளப் ஹவுஸ் ஆப்பில் ஃபாத்திமா பாபு அவர்கள் நான் எழுதிய ‘ராம்ஜிக்கு ஸ்கிரிப்ட் எழுதத் தெரியலையே!’ என்ற கதையை வாசித்தார். வாசகர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாடினார்கள். மிக இனிமையான அனுபவமாக அமைந்தது. ஃபாத்திமா பாபு அவர்கள் இந்தக் கதை தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்று மனம் திறந்து பாராட்டி உள்ளார். தன் அனுபவங்களுடன் சேர்த்து…

அவள் விகடன்: நியூ வெர்ஷன் பெண்களாக இருப்போம் – மகளிர் தினம் (March 15, 2022)

அவள் விகடன் : மார்ச் 15, 2022 மகளிர் தினம் சிறப்பிதழுக்காக எழுதிய  கட்டுரை மகளிர் தினத்தை ஒட்டி அவள் விகடனில் #StopExploitingWomen என்ற கான்செப்ட்டில் ஏழு ஆளுமைகளிடம் உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பாலியல் தொல்லை என வெவ்வேறு தலைப்புகளில் கருத்து கேட்டிருந்தார்கள். என்னிடம் பணி இடத்திலும் கோலம் போடுதல், உணவு பரிமாறுவது, டீ…

#USA: விபூதியும் குங்குமமும்!

விபூதியும் குங்குமமும்! பொதுவாக அமெரிக்கர்கள்  மலர்ந்த முகத்துடன் இருப்பார்கள்  என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா? நம் முகாந்திரமே அறியாதவர்கள் கூட தெருவில் எதிர்பட்டால் நாம் கண்டு கொள்ளாமல் தலைகுனிந்து சென்றாலும் அவர்களாக ‘ஹேவ் அ நைஸ் டே’ என்றோ, ‘குட் டே’ என்றோ சொல்லியபடி நம்மை கடந்து செல்வார்கள். அதற்காக அவர்களுக்கு பிரச்சனைகளே இல்லை என்று…

அவள் விகடன் – மகளிர் தினம் சிறப்பிதழ் – #stopexploitingwomen (March 15, 2022)

அவள் விகடன், மகளிர் தினம் சிறப்பிதழ் மார்ச் 15, 2022 #stopexploitingwomen கான்செப்ட்! ஏழு ஆளுமைகள், ஏழு வெவ்வேறு தலைப்புகள்! எழுவரில் ஒருவராக என்னுடைய எண்ணமும் கருத்தும் இடம் பெற்றுள்ளது! நியூ வெர்ஷன் பெண்களாக இருப்போம்! ‘வீட்டு வேலைகளைப் பெண்களே செய்ய வேண்டும் என்ற ஆணாதிக்கம், அலுவலகத்தில் ஏதேனும் ஒரு விசேஷ தினம் என்றால் அங்கும்…

உக்ரைன் போர்!

உக்ரைனில் உள்ள 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் ராணுவத்திடம் வந்து ஆயுதங்களை பெற்று சண்டையிட அதிபர் உத்தரவிட்டுள்ளார். பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்! – செய்தி. எங்கோ நடக்கும் போரை பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்க்கவே நமக்கு வேதனையாக இருக்கிறதே,  நேரடியாக போரில்…

#USA: அமெரிக்காவில் மாணவர்களின் மனநிலை!

அமெரிக்காவில் மாணவர்களின் மனநிலை! நம் ஊர் குழந்தைகளிடம் சொல்வதைப் போல ‘அவனைப் பார், எப்படி படிக்கிறான்’, ‘இவளைப் பார் எப்படி எல்லாம் எல்லா போட்டிகளில் கலந்துகொண்டு ஜெயிக்கறா…’ என்று அமெரிக்கர்களிடம் மற்றவர்களுடன் ஒப்பிட்டு சொல்ல முடியாது. சொன்னால் கிடைக்கும் எதிர்வினையை தாங்கும் மனநிலை இருந்தால் சொல்லலாம். அப்படி என்ன எதிர்வினை செய்வார்கள்? ‘இருக்கட்டும், அது அவனோட…

தொழில்நுட்ப_இங்கிதங்கள்

#தொழில்நுட்ப_இங்கிதங்கள் மற்றவர்களின் பாராட்டை பெறுவது எப்படி? நான் என்ன செய்தாலும் பாராட்டு கிடைப்பதில்லையே என ஒருவர் கேட்டார். பாராட்டு பெறுவதெல்லாம் பெரிய விஷயமா? சின்ன சின்ன பண்பான செயல்களில் கூட மற்றவர்களை கவர முடியும். உதாரணத்துக்கு ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்புகிறீர்கள். ஏதோ ஒரு காரணத்துக்காக டெலிட் செய்கிறீர்கள். பின்னர் உங்கள் வேலையை கவனிக்கச்…

#கதை: அந்த தேஜஸுக்குப் பெயர் என்ன தெரியுமா? (மலர்வனம் மார்ச் 2022)

மலர்வனம் மார்ச் 2022 இதழில் வெளியான கதை புத்தக வடிவில் படிக்க: மலர்வனம் மார்ச் 2022 அந்த தேஜஸுக்குப் பெயர் என்ன தெரியுமா? அப்போது  நம் கதாநாயகிக்கு பன்னிரெண்டு, பதிமூணு வயதுதான் இருக்கும். ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள். பார்ப்பதற்கு லட்சணமாகத்தான் இருப்பாள். நீண்ட மூக்கும், தீட்சண்யமான கண்களும் அவளை அழகாகவே காண்பிக்கும். ஆனாலும் அவளுக்கு ‘தான் அழகில்லை’…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon