#கதை: ஹலோ With காம்கேர் -161: அம்மா! நான் ஏன் படிக்கக் கூடாதா?
ஹலோ with காம்கேர் – 161 June 9, 2020 கேள்வி: அம்மா! நான் ஏன் படிக்கக் கூடாதா? என் பெயர் ஜோதிபாலா. வீட்டில் ஜோதி. நட்பு வட்டத்தில் ‘ஜோ’. நான் இந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதப் போகிறேன். தமிழ் டீச்சரை எனக்கு மிகவும் பிடிக்கும். படிப்பு ஒன்றுதான் வாழ்க்கைக்குத் தன்னம்பிக்கைக் கொடுக்கும்…
#கதை: ஹலோ With காம்கேர் -157: விட்டு விடுதலை ஆவது அத்தனை சுலபமா என்ன?
ஹலோ with காம்கேர் – 157 June 5, 2020 கேள்வி: விட்டு விடுதலை ஆவது அத்தனை சுலபமா என்ன? வீடே கலகலவென்றிருக்கிறது. மீனாட்சி, நீ என்னை விட்டுப்போய் நாளையுடன் ஒரு வருடம் முடியப் போகிறது. முதல் வருட திவசம். ஊரில் இருந்து பெரியவன் வந்திருக்கிறான். அவனுடன் நம் மருமகளும் பேரன்களும் வந்திருக்கிறார்கள். காரிலேயே வந்துவிட்டார்கள்….
#கதை: ஹலோ With காம்கேர் -135: அம்மா மன்னிப்பாளா?
ஹலோ with காம்கேர் – 135 May 14, 2020 கேள்வி: அம்மா மன்னிப்பாளா? நான் மஹாதேவன். குற்ற உணர்ச்சியால் துடித்துக்கொண்டிருக்கிறேன். அம்மா இறந்துவிட்டாள் என்ற செய்தியை அக்கா போனில் சொன்னதில் இருந்து படபடப்பு, துக்கம், அழுகை இவை எல்லாவற்றையும் மீறிய குற்ற உணர்ச்சி ஆளைக் கொல்கிறது. பிரிண்டிங் பிரஸ்ஸில் இருந்து வீட்டுக்கு வந்து மனைவியையும்…
#கதை: பிரார்த்தனை – விஜயபாரதத்தில் வெளியான சிறுகதை (2016)
என்னைச் சுற்றித்தான் எத்தனை கம்பி வெலிகள். கூட்டம் கூட்டமாய் மனிதர்கள்? கைக் குழந்தைகளோடும், ஒரு இடத்தில் கால் பாவாமல் ஓடும் விளையாட்டுப் பிள்ளைகளோடும், வயதான காலத்தில் கைத்தடிகளை ஊன்றிக் கொண்டும் தவமாய் தவம் கிடக்கும் மனிதர்களைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது. கூட்டம், வரைமுறை இல்லாத நெரிசல், வியர்வை, நாற்றம், இருமல், கைக் குழந்தைகளின் அழுகைகள், விளையாட்டுப்…
#கதை: சாவியில் பரிசு பெற்ற சிறுகதை – ‘நியதிகள் மாறலாம்’ (நவம்பர் 1990)
1990 ஆம் ஆண்டு நான் எழுதி சாவி இதழில் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை. அந்தந்த காலகட்டத்தை படம்பிடித்துக் காட்டுபவையே கலைகள். அது எந்த வடிவத்தில் இருந்தாலும். நியதிகள் மாறலாம்! என்ற இந்த சிறுகதை அந்த காலத்தில் பெண்களின் நிலையை அப்படியே படம் பிடித்து காட்டுவதைப் போல உள்ளது. பொறுமை இருப்பவர்கள் முழுமையாக படித்துப்…
#கதை: ராஜத்தில்… ‘அம்மா பொய் சொல்கிறாள்’ (ஆகஸ்ட் 1990)
ராஜம் மாத இதழில் ‘அம்மா பொய் சொல்கிறாள்’! கல்லூரி காலத்தில் பல்வேறு பத்திரிகைகளில் நான் எழுதிய 100-க்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றைத் தொகுத்து புத்தகமாக்கும் முயற்சியில்… முதலில் லே அவுட் ஆன கதை கலைமகளில் ‘வேரை விரும்பாத விழுதுகள்’. இரண்டாவதாக சாவியில் பரிசு பெற்ற கதை ‘நியதிகள் மாறலாம்’ மூன்றாவதாக நேற்று…
#கதை: பாக்யாவில்… ‘மயக்கம்’ (டிசம்பர் 1990)
பாக்யாவில் ‘மயக்கம்’! கல்லூரி காலத்தில் பல்வேறு பத்திரிகைகளில் நான் எழுதிய 100-க்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றைத் தொகுத்து புத்தகமாக்கும் முயற்சியில் நேற்று லே அவுட் ஆன கதை ‘மயக்கம்’. இந்தக் கதை 1990-ஆம் ஆண்டு பாக்யா பத்திரிகையில் வெளியானது. அப்போது பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு திருச்சியில் ஸ்ரீமதி இந்திரா…
#கதை: கலைமகளில்… வேரை விரும்பாத விழுதுகள்… (ஜூன் 1989)
கலைமகளில் ‘வேரை விரும்பாத விழுதுகள்…’ சரஸ்வதி பூஜை, விஜயதசமி முடிந்து பல்கலைக்கழக புது பிராஜெக்ட் ஒன்றுக்கும் சேர்த்து பூஜை போட்டு சிறிது கேப் கிடைக்க, என்னவோ திடீரென மனதுக்குள் ஒரு ஸ்பார்க் தோன்ற கல்லூரி காலத்தில் பல்வேறு பத்திரிகைகளில் நான் எழுதிய 100-க்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றைத் தொகுத்து புத்தகமாக்கும் முயற்சியில்…
#கதை: சாவியில்… ‘நியதிகள் மாறலாம்’ (நவம்பர் 14, 1990)
சரஸ்வதி பூஜை, விஜயதசமி முடிந்து பல்கலைக்கழக புது பிராஜெக்ட் ஒன்றுக்கும் சேர்த்து பூஜை போட்டு சிறிது கேப் கிடைக்க, என்னவோ திடீரென மனதுக்குள் ஒரு ஸ்பார்க். நான் கல்லூரியில் M.Sc. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிப்பதற்குள் கோகுலம், கலைமகள், விஜயபாரதம், சாவி, பாக்யா, தினமலர், ராணி, ராஜம், நாரதர், சுபமங்களா என பல்வேறு பத்திரிகைகளில் கதை கவிதை…
#கதை: செய்யும் தொழிலே தெய்வம்… பிள்ளையார் சுழி போட்ட கோகுலம்! (பிப்ரவரி 1982)
கோகுலம் – சிறுவர் இதழ் அக்டோபர் 2018 இதழுடன் நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து மனதுக்குள் இனம்புரியாத வலி. என் எழுத்துக்கும், நம்பிக்கைக்கும், திறமைக்கும் விதை போட்டதே கோகுலம் இதழ்தான். 1982 – ஆம் ஆண்டு கோகுலத்தில் வெளியான நான் எழுதிய ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சிறுகதையே பிரசுரத்துக்கு ஏற்றதாக தேர்ந்தெடுக்கப்பட்ட…