
#AI: மெட்டாவெர்ஸ்
மெட்டாவெர்ஸ் இன்டர்நெட்டில் ஒரு புதிய உலகம். அந்த உலகை நாம் நம் விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள முடியும். நம் அலுவலகமாகவோ, வீடாகவோ, திரை அரங்காகவோ, பூங்காவாகவோ, திருமண மண்டபமாகவோ, கல்லூரியாகவோ இப்படி எதுவாக வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். அங்கே நம் உறவினர்களை, நண்பர்களை, அலுவகப் பணியாளர்களை யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம், விருந்தளிக்கலாம், பணி ஆலோசனை…

வேலையும், பக்தியும்!
வேலையும், பக்தியும்! சென்ற வாரம், பட்டுக்கோட்டைக்கு திடீர் பயணம். திருப்பட்டூரில் உள்ள A2B -ல் டிபன் சாப்பிட்டு செல்லலாம் என நினைத்துச் சென்றோம். சாப்பிட்டு முடித்ததும் ரெஸ்ட் ரூம் பயன்படுத்தச் சென்றேன். அந்த ஓட்டல் பெயர் பொறித்த சீருடை அணிந்துகொண்டிருந்த பெண் ஒருவர், கருமமே கண்ணாயினராக சுத்தம் செய்து கொண்டிருந்தார். கழிவறைகள் சுத்தமோ சுத்தம். அந்த…

அழுகை!
அழுகை! ஒரு சென்சிடிவான விவாதம் ஒன்றில் நான் பகிர்ந்து கொண்டது. அது என்ன விவாதம், அதன் முடிவு என்ன என்பதையெல்லாம் அதற்கு ஒரு முழு வடிவம் கிடைத்தவுடன் பகிர்கிறேன். இப்போதைக்கு நான் பகிர்ந்துகொண்ட “சிறு” விஷயத்தை மட்டும் சொல்கிறேன். பெண்கள் என்றால் தங்கள் சோகத்தை அழுது ஆர்பரித்துத்தான் வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. அதுவும் பொறுப்பற்ற…

#மலேசியா: யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! (திருமந்திரம்) 2023 ஜூலையில் மலேசியாவில் நடைபெற இருக்கும் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொழில்நுட்பம் குறித்து பேசுவதற்காக 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே ‘உங்களால் கலந்துகொள்ள முடியுமா?’ என கேட்டிருந்தார்கள். இதற்கு முன்பில் இருந்தே, அதாவது இந்த மாநாட்டுக்காக குழு அமைத்து விவாதங்கள் நடைபெற ஆரம்பித்த…

#AI: யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! (திருமந்திரம்)
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! (திருமந்திரம்) 2023 ஜூலையில் மலேசியாவில் நடைபெற இருக்கும் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொழில்நுட்பம் குறித்து பேசுவதற்காக நான்கைந்து மாதங்களுக்கு முன்பே ‘உங்களால் கலந்துகொள்ள முடியுமா?’ என கேட்டிருந்தார்கள். எங்கள் ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனம் நம் நாட்டில் கம்ப்யூட்டர் அடி எடுத்து வைக்கவே தயங்கிக்கொண்டிருந்த 1990-களிலேயே தொடங்கப்பட்ட…

பேசும் படைப்புகள்!
சில வருடங்களுக்கு முன்னர், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. ஐந்தாறு சாதனைப் பெண்கள் கலந்துகொண்டு தங்கள் சாதனைகளை பேசுவார்கள். நான் அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி அவர்களின் சாதனைகள் குறித்து என் பார்வையை பேச வேண்டும். நிகழ்ச்சிக்கு 1 மணி நேரம் முன்பே, அதாவது காலை 8 மணிக்கு சென்றுவிட்டதால் நான்தான் முதல் ஆளாக அங்கிருந்தேன். அந்தக்…

பேட்டி எடுப்பவரும் சேர்ந்தே கவனிக்கப்படுகிறார்!
பேட்டி எடுப்பவரும் சேர்ந்தே கவனிக்கப்படுகிறார்! ஒருவரை நேர்காணல் செய்யும்போது நேர்காணல் செய்பவரும் சேர்ந்தே கவனிக்கப்படுகிறார். அவரது அறிவாற்றலும் கணிக்கப்படுகிறது. அவரும் சேர்ந்தே போற்றப்படுகிறார். அவரும் சேர்ந்தே உயர்கிறார். இப்போதுதானே சோஷியல் மீடியாக்கள். உடனுக்குடன் பேட்டி எடுத்தவருக்கும் நன்றி சொல்லி எல்லாம் பாராட்டுகள் கிடைக்கின்றன. 1992-ல் ஏது சோஷியல் மீடியாக்கள். அன்றில் இருந்து இன்று வரை வெளியான…

பழக்கமா? போதையா?
பழக்கமா? போதையா? ஒரு டாக் ஷோ. ஒருபக்கம் கணவனை திருத்த முடியும் என்று கூறும் பெண்கள். எதிர்பக்கம் திருத்துவது சாத்தியமே இல்லை என்று கூறும் பெண்கள். இதில் பேசுவதற்கு நிறைய வெவ்வேறு கருத்துகள் இருந்தாலும் அது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களை திருத்துவது முடியுமா முடியாதா என்ற கோணத்தில் சென்றுவிட்டது. ஒரு பக்கம் குடிபழக்கம் உள்ள கணவர்,…

#கதை: அறை எண் 1011-ல் போதிமரம்!
அறை எண் 1011 –ல் போதிமரம்! காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO ComPcare Software அதிகாலை 5.00. ‘அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம். அத்தையும் மாமாவும் வந்து பார்த்தால் நல்லது’ அன்றைய காலை இப்படியான வாட்ஸ் அப் தகவலுடன் விடிந்தது அகிலனுக்கு. மாமாவின் மகள் அஸ்வினிதான் தகவல் கொடுத்திருந்தாள். அதிகாலை 6.00. அகிலன் வழக்கம்போல் வாக்கிங் செல்லக்…

#AI: செயற்கை நுண்ணறிவு மனித மூளையையே விழுங்கிவிடுமா?
செயற்கை நுண்ணறிவு மனித மூளையையே விழுங்கிவிடுமா? நேற்று நடைபெற்ற ஒரு மீட்டிங்கில் என்னிடம் ஒரு கேள்வி வைக்கப்பட்டது. 1990-களில் இருந்த தொழில்நுட்பத் தொடக்கத்துக்கும் இப்போது 2023-ல் நடந்துகொண்டிருக்கும் தொழில்நுட்ப புரட்சிக்கும் என்ன வித்தியாசம்? 1990-களில் மக்கள் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தங்கள் வேலைக்கு உலை வைத்துவிடும் என பயந்தார்கள். எதிர்ப்பு தெரிவித்தார்கள். கம்ப்யூட்டர் பக்கம் பார்வையைத் திருப்பாமலேயே…