கற்றதும், பெற்றதும், கொடுத்ததும்!
கற்றதும், பெற்றதும், கொடுத்ததும்! என் பெற்றோருடன் ஒரு வேலையாக வெளியில் சென்றுவிட்டு அப்படியே ஐபோனில் லேட்டஸ்ட் வெர்ஷன் வாங்குவதற்கு ஷோ ரூம் சென்றிருந்தேன். பில் போட்டு பணம் செலுத்தி ஐபோன் கைக்கு வந்ததும், பழைய போனில் இருந்து ஃபைல்களை டிரான்ஸ்ஃபர் செய்து கொடுக்கிறேன் என சொல்லி வாங்கிய ஆப்பிள் அட்வைஸராக பணியில் இருந்த இளம் பெண்,…
அநாயாச மோட்சம் உண்டாக!
அநாயாச மோட்சம் உண்டாக! என் நெருங்கிய நட்பு மற்றும் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் சிலர் உடல் நலம் இல்லாமல், நடமாடவும் முடியாமல், படுத்தப் படுக்கையில் தன் எல்லா தேவைகளுக்கும் பிறரின் உதவியை நாடி, நினைவு இருந்தும் நினைவில்லாத கொடிய துயரில் காலத்தைக் கடத்தி வருகிறார்கள். தினமும் எங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது அவர்கள் நலனுக்கும்…
மங்கும் மனிதமும், ஏங்கும் மனிதர்களும்!
மங்கும் மனிதமும், ஏங்கும் மனிதர்களும்! ஆங்கிலப் புத்தாண்டுக்கு முதல்நாள், அதாவது சென்ற வருடத்தின் கடைசி நாளன்று, என் அப்பாவும் அம்மாவும் புது செடி வைக்கவும் மண்ணும், உரமும் வாங்கவும் எங்கள் பகுதியில் பல வருடங்களாக இருக்கும் நர்சரிக்கு சென்றார்கள். அவர்களிடம் வருடத்துக்கு ஒருமுறை ஏதேனும் வாங்குவோம். ஆனாலும் மறக்காமல் நினைவில் வைத்துக்கொண்டு குசலம் விசாரித்தார்கள் அந்த…
பிறந்ததின் நோக்கம் என்ன?
பிறந்ததின் நோக்கம்! இந்த ஆண்டு என்ன செய்தோம் என்றெல்லாம் என்றுமே நான் திரும்பிப் பார்ப்பதில்லை. காரணம் எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ‘நாம் பிறந்ததன் குறிக்கோள் என்ன?’ என்று பொருள்படும் வகையில் வெவ்வேறு கேள்விகள் என் மனதில் தோன்றும் என்பதால் நினைத்துக் கொள்ளும் நேரத்தில் எல்லாம் என் பாதையை திரும்பி பார்த்துக் கொள்வதுண்டு. எனவே கணக்கை அவ்வப்பொழுது…
சவால் விட வேண்டாமே!
சவால் விட வேண்டாமே! சிலர் சவால் விடுவார்கள். ‘நாங்கள் வாழ்ந்து காட்டுகிறோம்… அவர்கள் மூக்கில் விரல் வைத்து ஆச்சர்யப்படும் அளவுக்கு வளர்ந்து காட்டுகிறோம்’ என்று சீறிக்கொண்டு பேசுவார்கள். அவர்களை பகையாய் நினைப்பவர்கள் என்றுமே அவர்கள் வளர்ச்சியைக் கொண்டாடப் போவதில்லை. அந்த வளர்ச்சிக்கும் ஏதேனும் அவதூறு சொல்லிக்கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். அவர்களை நட்பாய் நினைப்பவர்களுக்கு நிரூபணம் செய்ய…
பெண் எனும் புது லாஜிக்!
பெண் எனும் புது லாஜிக்! மருத்துவர்கள், சில நோய்களுக்கு மென்மையான மருந்துகளை பரிந்துரைப்பார்கள். சில நோய்களுக்கு ஸ்டீராய்ட் போன்று கடுமையான மருந்துகளை பரிந்துரை செய்வார்கள். தேவையில்லாமல் ஸ்டீராய்ட் கொடுக்க மாட்டார்கள். அவசியம் தேவை என்றால் மட்டுமே கொடுப்பார்கள். அப்படி செய்து அந்த நோயை கீழிறக்கி அதன் தாக்கத்தைப் படியவைத்து பின்னர் வழக்கமான மருத்துவ முறைகளை பின்பற்றுவார்கள்…’…
இயல்பில் வாழ்வது வரம்!
இயல்பில் வாழ்வது வரம்! அந்தப் பத்திரிகையின் அந்த மாதத்தின் அட்டைப்படமாக என் புகைப்படம். உள்ளே என் நீண்ட நெடும் நேர்காணல். அப்போது என்னை சந்திக்க வந்திருந்த ஒரு கிளையிண்டை என் அறையில் அமரச் செய்து, அந்த புத்தகத்தைக் கொடுத்து படிக்கச் சொல்லிவிட்டு, நான் அடுத்த அறையில் உள்ள எங்கள் ஆடியோ ரெகார்டிங் பிரிவுக்குச் சென்றிருந்தேன். பத்து…
ஆண் தேவதைகளும், பெண் காவல்தெய்வங்களும்!
ஆண் தேவதைகளும், பெண் காவல்தெய்வங்களும்! எங்கள் குடும்ப நண்பரின் மருத்துவம் படிக்கும் பெண்ணும் அவள் அம்மாவும் இரவு எட்டு மணிக்கு கையில் ஸ்வீட்டுடன் வந்திருந்தார்கள். அந்த பெண் என் அப்பா அம்மாவுக்கு நமஸ்காரம் செய்து தான் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்து விட்டதாகவும் நேற்றுதான் ரிசல்ட் வந்ததாகவும் சொல்லி வாழ்த்துப் பெற்றாள். ‘அப்போ இனி நீ டாக்டர்…
ஆடியோ: சாவித்திரி டீச்சரின் வாழ்த்து! – December 22, 2022
சாவித்திரி டீச்சர்! என் பள்ளி ஆசிரியர், வயது 80+. கிட்டத்தட்ட 38 ஆண்டுகாலம் கணித ஆசிரியராக அரசுப் பள்ளியில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவர். எங்கள் பெற்றோரின் பணி இட மாற்றல் காரணமாக பல்வேறு ஊர்களில் வசித்ததால் பள்ளிப்படிப்பும், கல்லூரிப் படிப்பும் பெரும்பாலும் வெவ்வேறு ஊர்களில்தான். அந்த வகையில் 8 மற்றும் 9-ம் வகுப்பு மயிலாடுதுறையில்….
அப்போ நீங்க ஹீரோவா, வில்லனா?
அப்போ நீங்க ஹீரோவா, வில்லனா? ஒரே நடிகர் ஒரு சினிமாவில் ஹீரோவாகவும், மற்றொன்றில் வில்லனாகவும் வலம் வருவார். இதேதான் நடிகைக்கும். சில படங்களில் ஹீரோயின், சிலவற்றில் வில்லி. ஹீரோ ஹீரோயின்களாக நடிக்கும்போது அவர்கள் பேரழகன், பேரழகிகளாகவும், வில்லன் வில்லியாக நடிக்கும்போது அவர்கள் கோரமாகவும், வெறுக்கும்படியும் நம் கண்களுக்கும் மனதுக்கும் தோன்றுகிறதல்லவா? ஒரே நடிகர், நடிகைதான். ஆனால்…