காபி சூடா வேணுமா? சுத்தமான வேணுமா?

சூடான காபி வேணுமா? சுத்தமான காபி வேணுமா? பொதுவாகவே குரலை உயர்த்தி நியாயம் கேட்டால் நாம் சண்டைப் போடுவதைப் போன்ற பிம்பத்தை உருவாக்கி விடுகிறார்கள். குரலை உயர்த்தாமல் அமைதியாகக் கேட்டால் அவர்கள் சண்டைப் போடுவதைப் போன்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அமைதியான முறையில் நியாயம் பேசவே முடியாது, எனவே வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான விஷயமே நியாயத்தை…

வலி!

வலி! நமக்குப் புதிதாக அறிமுகம் ஆகும் யாராவது நம்மை காயப்படுத்தி பேசியதாக நினைத்தால் வருத்தப்பட்டு மனதுக்குள் அழுவதற்கு முன் ஒரு விஷயத்தை நினைவில் வைக்க வேண்டும். நாம்தான் காயப்பட்டிருப்போமே தவிர அவர்கள் காயப்படுத்தும் நோக்கத்தில் பேசி இருக்க மாட்டார்கள். அவர்களின் இயல்பாக இயல்புபடி பேசி இருப்பர்கள். திரும்பவும் சொல்கிறேன், இயல்புபடி பேசி இருப்பார்கள் என்றுதான் சொல்லி…

தட்ஸ் ஆல்! அவ்ளோ தான்!

தட்ஸ் ஆல்! அவ்ளோ தான்! வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககத்தில் இருந்து நேர்காணல் என சொல்லி இருந்தேன் அல்லவா? அதில் மற்றொரு கேள்வி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு தொழில்முனைவராக உங்களுக்கு பர்சனலாக பிடிக்காத விஷயம் என்ன? ஏதேனும் ஒரு வேலையை முடிக்க நேரம் அதிகம் எடுத்துக்கொண்டாலோ அல்லது முடிக்க முடியவில்லை என்றாலோ அதற்கு…

‘You have all the rights to skip my posts’

‘You have all the rights to skip my posts’ நீண்ட நாட்களாக நட்பு அழைப்பு விடுத்து பொறுமையாகக் காத்திருந்து என் பதிவுகளுக்கு நித்தம் லைக் செய்து (நட்பு அழைப்பில் இல்லாதவர்கள் லைக் மட்டுமே போட முடியும், கமெண்ட் செய்ய முடியாதபடி செட்டிங் செய்து வைத்துள்ளதால்) தங்கள் அன்பை (!) காட்டி வரும் ஒரு…

#கவிதை: சர்வரும் மெனு கார்டும் இல்லாத ஓட்டல்!

சர்வரும் மெனு கார்டும் இல்லாத ஓட்டல்! அந்த ஊர் ஓட்டலில் நமக்கு மெனு கார்ட் எல்லாம் கிடையாது… சர்வரோ, சப்ளையரோ அல்லது வேறு யாருமோ நம்மை அணுகி ‘சாப்பிட என்ன வேணும்?’ என்று கேட்க மாட்டார்கள்… அப்படியானால் அது ‘செல்ஃப் சர்வீஸ்’ ஓட்டலாக இருக்குமோ என நினைக்க வேண்டாம்… நிச்சயமாக அது செல்ஃப் சர்வீஸ் ஓட்டலும்…

பிரசவ வைராக்கியம்!

  பிரசவ வைராக்கியம்! சில வருடங்களுக்கு முன்னர் அம்மா மருத்துவமனையில் இருந்தபோது அவரை நன்கு கவனித்துக்கொண்ட ஒரு செவிலியருக்கு ஏதேனும் செய்ய நினைத்தார். அம்மா அப்படிச் சொல்வதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அந்த நேரம் தீபாவளி நேரமாக இருந்ததாலும், அந்த செவிலியர் பேச்சு வாக்கில் தன் வீட்டின் ஏழ்மையை அம்மாவிடம் சொல்லி இருந்ததாலும் புதுப் புடவை…

யாரும் இங்கே தெய்வங்கள் அல்ல!

யாரும் இங்கே தெய்வங்கள் அல்ல! சுடிதார் தைப்பதற்காக தையல்கடைக்காரிடம் துணி கொடுத்துவிட்டு வாங்கும்போது கவனித்தால் துணியில் ஓரிடத்தில் கிழிந்திருந்தது. என்ன ஏது என விசாரித்தால் ஏற்கெனவே அப்படித்தான் கிழிந்திருந்தது என சொல்பவரிடம் ‘முன்பே கவனித்திருந்தால் போன் செய்து சொல்லி இருக்கலாமே. தைக்கவே வேண்டாம் என சொல்லி இருப்போம் அல்லவா? இந்த கிழிசல் சுடிதாரின் மேல் பக்கத்தில்…

குறைந்து வரும் குற்ற உணர்வுகள்!

குறைந்து வரும் குற்ற உணர்வுகள்! முன்பெல்லாம் ஒரு கொலைகாரன் கொலை செய்வதைக் கூட உணர்ச்சி வேகத்தில் கொலை செய்து விட்டதாக சொல்வார்கள். அந்த நேரத்துக் கோபத்தில் கண்மூடித்தனமாக செய்திருப்பதாக மற்றவர்கள் கூறுவார்கள். ஏன் அவனே கூட அப்படி சொல்லுவான். கொலை செய்துவிட்ட பிறகு ஒவ்வொரு நொடியும் பயத்துடனும் குற்ற உணர்ச்சியுடனும்தான் அவன் வாழ்ந்துகொண்டிருப்பான். அதுதான் காலம்…

#கவிதை: இன்னும் கொஞ்சம்!

இன்னும் கொஞ்சம்! ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவருடைய வயதான தாய் தந்தையின் மறைவுச் செய்தி பதிவுகளைக் காணும் போதும் செய்திகளை கேட்கும் போதும் மரணம் பற்றி பயமோ வாழ்க்கை மீதான விரக்தியோ உண்டாவதில்லை எனக்கு என்ன தோன்றும் தெரியுமா? என் அப்பா அம்மாவிடம் ‘இன்னும் கொஞ்சம்’ பாசமாக இருக்க வேண்டும்… ‘இன்னும் கொஞ்சம்’ பொறுமையாக இருக்க…

யார் நம்பர் 1?

யார் நம்பர் 1? யார் நம்பர் 1 எழுத்தாளர்? என்ற விவாதம் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பதிப்பாளர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்ன விஷயம்தான் நினைவுக்கு வந்தது. ‘நாங்கள்தான் பதிப்பகத் துறையிலேயே இதுவரை இத்தனை கோடி எழுத்துக்களை எங்கள் நூல்களுக்கு பயன்படுத்தி புத்தகமாக்கியுள்ளோம்….’ என்றாரே பார்க்கலாம். அதாவது இத்தனை புத்தகம் வெளியிட்டுள்ளோம்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon