உக்ரைன் போர்!

உக்ரைனில் உள்ள 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் ராணுவத்திடம் வந்து ஆயுதங்களை பெற்று சண்டையிட அதிபர் உத்தரவிட்டுள்ளார். பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்! – செய்தி. எங்கோ நடக்கும் போரை பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்க்கவே நமக்கு வேதனையாக இருக்கிறதே,  நேரடியாக போரில்…

#USA: அமெரிக்காவில் மாணவர்களின் மனநிலை!

அமெரிக்காவில் மாணவர்களின் மனநிலை! நம் ஊர் குழந்தைகளிடம் சொல்வதைப் போல ‘அவனைப் பார், எப்படி படிக்கிறான்’, ‘இவளைப் பார் எப்படி எல்லாம் எல்லா போட்டிகளில் கலந்துகொண்டு ஜெயிக்கறா…’ என்று அமெரிக்கர்களிடம் மற்றவர்களுடன் ஒப்பிட்டு சொல்ல முடியாது. சொன்னால் கிடைக்கும் எதிர்வினையை தாங்கும் மனநிலை இருந்தால் சொல்லலாம். அப்படி என்ன எதிர்வினை செய்வார்கள்? ‘இருக்கட்டும், அது அவனோட…

தொழில்நுட்ப_இங்கிதங்கள்

#தொழில்நுட்ப_இங்கிதங்கள் மற்றவர்களின் பாராட்டை பெறுவது எப்படி? நான் என்ன செய்தாலும் பாராட்டு கிடைப்பதில்லையே என ஒருவர் கேட்டார். பாராட்டு பெறுவதெல்லாம் பெரிய விஷயமா? சின்ன சின்ன பண்பான செயல்களில் கூட மற்றவர்களை கவர முடியும். உதாரணத்துக்கு ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்புகிறீர்கள். ஏதோ ஒரு காரணத்துக்காக டெலிட் செய்கிறீர்கள். பின்னர் உங்கள் வேலையை கவனிக்கச்…

#கதை: அந்த தேஜஸுக்குப் பெயர் என்ன தெரியுமா? (மலர்வனம் மார்ச் 2022)

மலர்வனம் மார்ச் 2022 இதழில் வெளியான கதை புத்தக வடிவில் படிக்க: மலர்வனம் மார்ச் 2022 அந்த தேஜஸுக்குப் பெயர் என்ன தெரியுமா? அப்போது  நம் கதாநாயகிக்கு பன்னிரெண்டு, பதிமூணு வயதுதான் இருக்கும். ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள். பார்ப்பதற்கு லட்சணமாகத்தான் இருப்பாள். நீண்ட மூக்கும், தீட்சண்யமான கண்களும் அவளை அழகாகவே காண்பிக்கும். ஆனாலும் அவளுக்கு ‘தான் அழகில்லை’…

#USA: லவ் யூ என்பது!

லவ் யூ என்பது… அமெரிக்காவில் கிருஸ்துமஸ் முடிந்து டிசம்பர் இறுதியில் இருந்தே  ‘வேலன்டைன்ஸ் டே’ கார்டுகள் கண்களில் தென்பட ஆரம்பிக்கின்றன. மிசெளரியில் தங்கி இருந்தபோது  என் கண்களில் அதிகம்பட்ட வாழ்த்து அட்டை இது. ‘வேலன்டைன்ஸ் டே’ அன்று ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் அன்பைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் விதமாக வாழ்த்து அட்டையை பரிமாறிக்கொள்கிறார்கள். பெரும்பாலும் தாங்களே தங்கள்…

#USA: சில கேள்விகளும், சில பாராட்டுகளும்!

சில கேள்விகளும், சில பாராட்டுகளும்! 2021-ல் துபாய் அமெரிக்கா பயண அனுபங்களை கடந்த சில தினங்களாக எழுதி வந்தேன். அதற்குக்கிடைத்த சில பாராட்டுகளையும் வாசகர்களிடையே ஏற்படுத்திய தாக்கங்களையும் இன்று பகிர்ந்துகொள்கிறேன். அமெரிக்காவில் அரசியல், அமெரிக்காவில் சமூக வலைதளங்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்ற இரண்டு விஷயங்கள் எழுத வேண்டிய தலைப்புகள். விரைவில் எழுதுகிறேன். அமெரிக்கா 50 மாநிலங்களை…

#USA: அமெரிக்காவில் மதங்களும், நம்பிக்கைகளும்!

அமெரிக்காவில் மதங்களும், நம்பிக்கைகளும்! அமெரிக்கர்களின் நம்பிக்கை கிறிஸ்துவம் என்றாலும் அவர்கள் மற்ற மதங்களை இழிவாக பேசுவதில்லை. பொதுவாக அமெரிக்கர்களில் இரண்டே பிரிவினர்தான்.  எந்த ஒரு விஷயத்தையும் பின்பற்றுவர்கள் அல்லது பின்பற்றாதவர்கள். இந்த இரண்டே பிரிவில் அவர்களை அடக்கிவிடலாம் என்கிறார்கள். ஒருவரை ஒருவர் எதிர்ப்பதற்காக இழிசெயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு, அங்குள்ள பள்ளி கல்லூரிகளில் உலகின்…

#USA: அமெரிக்காவில் ஆண், பெண் உறவுமுறை!

அமெரிக்காவில் ஆண், பெண் உறவுமுறை! அமெரிக்காவில் ஆண், பெண் உறவுமுறை பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும். குழந்தைகளை சுயமாக நிற்கும் அளவுக்கு தனித்துவத்துடன் வளர்க்கிறார்கள். குழந்தைகள் கீழே விழுந்தால் நம் ஊர்போல ‘அச்சு, தரையை அச்சு’ என தரையை அடித்துக் காட்டி எல்லாம் சமாதானப்படுத்துவதில்லை. மாறாக, கீழே விழுந்தால் தாங்களாகவே எழுந்து நடக்கும்படி செய்கிறார்கள். சின்னஞ்சிறு…

#USA: குப்பைக்கும் மரியாதை, கழிவறைகளிலும் சுத்தம்!

விழாக்களும் கொண்டாட்டங்களும்! விழாக்களும் கொண்டாட்டங்களும் நம் நாட்டைப் போலவே இங்கும் உள்ளன. இருக்கும் இடத்தை வண்ண மயமாக்கிக் கொள்கிறார்கள். கொண்டாடி மகிழ்கிறார்கள். சுதந்திர தினம் (ஜுலை 4), ஹாலோவென், தேங்க்ஸ் கிவிங், கிருஸ்துமஸ், மார்ட்டின் லூதர் கிங் டே, பிரசிடன்ஸ் டே / வாஷிங்டன்ஸ் பர்த்டே, மெமோரியல் டே, லேபர் டே, வெட்ரன்ஸ் டே போன்றவை…

#USA: ‘You have all the rights to keep Silent’!

சிசேரியனா, சான்ஸே இல்லை! அமெரிக்காவில் மருத்துவ செலவு மிக அதிகம். மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு தைரியமாகச் செல்ல முடியும். காப்பீடு எடுக்கவில்லை எனில் மருத்துவமனைக்கும், மருத்துவருக்கும் டாலர்களை அள்ளிக் கொடுத்து கட்டுப்படியாகாது. மருத்துவர்களும் நோயின் தாக்கத்துக்கு ஏற்ப மிகக் குறைந்த வீரியமுள்ள மருந்துகளையே பரிந்துரைக்கிறார்கள். நம் ஊர் போல இருமல் சளி, ஜுரத்துக்கெல்லாம்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon