
#கதை: மூக்கின் மீதே ஒரு கண்!
மூக்கின் மீதே ஒரு கண்! (கதை by காம்கேர் கே. புவனேஸ்வரி) இன்றுடனாவது பிரச்சனை முடிந்துவிட்டால் நிம்மதியாக இருக்கும் என நினைத்துக் கொண்டார் சதாசிவம். மனைவி கோமதிக்கும் இதே சிந்தனைதான். டிவியில் ஏதோ ஒரு டாக் ஷோ ஓடிக்கொண்டிருக்க கவனம் முழுவதும் திறந்திருந்த வாசல் கதவின் மீதே. உட்கார்ந்திருக்கும் ஹாலின் மூலையில் ஒரு சிறு மெழுகுவர்த்தி…

வெர்ச்சுவல் பாராட்டு!
வெர்ச்சுவல் பாராட்டு! முன் குறிப்பு: மொபைல் ஆப்களை இன்ஸ்டால் செய்யும்போதோ அல்லது பயன்படுத்தும்போதோ அவை நம்மிடம் இருந்து நம் தகவல்களை எடுத்துக் கொண்டு அதற்கு நம்மிடம் ஒப்புதல் பெற்ற பிறகே செயல்பட ஆரம்பிக்கும். ஆகவே, கண்களில்படும் அத்தனை ஆப்களையும் உங்கள் கண்முன் கடைவிரித்து ஆசை காட்டும் ஆப்களையும் விட்டில் பூச்சிகளாய் பயன்படுத்த முனையாதீர்கள். அத்தியாவசிய…

அமைதி Vs ஆக்ரோஷம்!
அமைதி Vs ஆக்ரோஷம்! அமைதியான சுபாவம் உடையவர்களுக்குத்தான் நேரடி / மறைமுக எதிரிகள் அதிகம் உருவாவார்கள். காரணம், அவர்கள் மீது தாங்களாகவே ஒரு சாஃப்ட் கார்னரை உருவாக்கி வைத்துக்கொண்டு அவர்களை ஏதேனும் ஒரு விஷயத்துக்காக அணுகி அவர்கள் தங்கள் கருத்தை மிக உறுதியாக சொல்லும்போது அல்லது மறுக்கும்போது சண்டைக்கோழிகளாக வலம் வருபவர்களைக்கூட ஏற்றுக்கொள்ளும் இந்த சமூகம்…

Dress Code!
Dress Code! அடாது பெய்யும் மாமழையிலும் அந்த காய்கறி அங்காடியில் அந்தப் பெண் நின்றிருந்தாள். மழையில் நனைந்துகொண்டு, ஒப்புக்கு பிளாஸ்டிக் பை ஒன்றை தலைக்கு மறைத்துக்கொண்டு. கார் அந்தப் பெண்ணைத் தாண்டிச் செல்லும்போது வழக்கம் போல் தலையை சாய்த்து சிரித்தாள். அவள் உடையை அப்போதுதான் கவனித்தேன். வழக்கமான மேலாடை கிழிந்த சுடிதார். அந்த அங்காடி முன்பு…

அன்பெனும் மாமழையில்!
அன்பெனும் மாமழையில்! சென்ற வாரம் ஒரு திருமண நிகழ்வு. வழக்கம்போல் பெற்றோருடன் சென்றிருந்தேன். வாசலில் நுழையும்போது மணமகனும் மணமகளும் கலந்துகொள்ளும் ஊஞ்சல் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. காரை பார்க் செய்துவிட்டு உள்ளே நுழையும்போது யாரும் எங்களை கவனிக்கவில்லை. எல்லோரும் பாலும்பழமும் கொடுத்தல் பச்சப்பிடி சுற்றுதல் என பிசியாக இருந்தார்கள். கடைசியில் அமைதியாக நின்று கொண்டு நிகழ்ச்சியை கவனித்துக்…

சரஸ்வதி கடாக்ஷத்துடன்!
சரஸ்வதி கடாக்ஷத்துடன்! அதென்ன, திடீரென கும்பகோணத்தில் இருந்து அடிக்கடி அழைப்புகள். தெரியவில்லை. ஆனால் கோயில் நகரத்தில் இருந்து வரும் அழைப்புகள் அத்தனையும் சரஸ்வதி கடாக்ஷத்துடன்தான் வருகின்றன. ‘இன்னென்ன புத்தகங்கள் தேவை’ என வாட்ஸ் அப்பில் பட்டியலிட்டிருந்தவருக்கு கொரியர் கட்டணத்துடன் என்ன விலை என தகவல் கொடுத்த ஐந்தாவது நிமிடம் அவரே அழைத்தார். பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவதாக…

சிம்பதியும், எம்பதியும்!
சிம்பதியும், எம்பதியும்! ஒரு தாத்தா. நல்ல சுறுசுறுப்பானவர். தானே சமைப்பார். பண்டிகை தினம் என்றால் தானே இனிப்பு வகையறாக்கள் செய்து அசத்துவார். தானே கார் ஓட்டுவார். வீட்டில் எலக்ட்ரிகல் பிரச்சனையா, மரச் சாமான்கள் ஏதேனும் பழுதாகிவிட்டதா, பைப்பில் தண்ணீர் வரவில்லையா எதற்கும் தீர்வு வைத்திருப்பார். தானே சரி செய்துவிடுவார். தன் வீட்டில் மட்டும் என்றல்ல அக்கம்…

பல்லாண்டு வாழ்க!
பல்லாண்டு வாழ்க! ஓர் அழகான கிராமம். அதிலோர் அப்பா, அம்மா. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா என வெளிநாடுகளில் செட்டில் ஆன இரண்டு ஆண் ஒரு பெண் குழந்தை என மூன்று குழந்தைகள். அவர்கள் வேலை பிசி, நேரம் இல்லை என்ற காரணங்களினால் ஊருக்கு வருவதே இல்லை. அந்த பெற்றோர் பிள்ளைகளை வருடக் கணக்கில் பார்க்காமல் ஏங்கித்…

‘HVR Deficiency’ வரும் முன் காப்போம்!
‘HVR Deficiency’ வரும் முன் காப்போம்! ஆங்கிங்கெனாதபடி எங்கெங்கும் காணும் இடங்களிலெல்லாம் கண்களுக்கு எட்டிய தூரம் வரை நம்மில் பெரும்பாலானோருக்குள் ஒரு deficiency ஏற்பட்டுள்ளது. அது எல்லா தலைமுறையினரையும் எல்லா வயதினரையும் பாகுபாடின்றி ஆக்கிரமித்துள்ளது. யாராலும் மறுக்கவே முடியாது. காதால் கேட்கும் தகவலாக இருந்தாலும் சரி, படித்துப் பார்க்கும் தகவலாக இருந்தாலும் சரி, பார்த்து புரிந்துகொள்ளும்…

வேலையே பிரார்த்தனை, ஈடுபாடே தியானம்! (porulputhithu.com தீபாவளி சிறப்பிதழ் 2022)
வேலையே பிரார்த்தனை, ஈடுபாடே தியானம்! நாம் தினமும் எத்தனையோ வேலைகளை செய்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையும் இருக்கிறது. அந்த கடமையுடன்தான் நாளைத் தொடங்குகிறோம். கண் விழிப்பது, குளிப்பது, சமைப்பது, சாப்பிடுவது, வீட்டு வேலை செய்வது என அவரவர் வேலைகளை செய்வதில்தான் நாளின் தொடக்கத்தை ஆரம்பிக்கிறோம். அப்படி செய்யும் வேலைகள் ஒரே மாதிரியாக அன்றாடம் செய்யும் வழக்கமான…